இச்சமுதாயத்தின் பேருண்மைகளை
பெரும் பொய்களாகவும்
பெரும் பொய்களை
பேருண்மைகளாகவும்…
மாற்றி வைப்பதோடு…
அதற்கு பெரும் பாதுகாப்பு அரணாகவும்
ஆபத்து வரும் தருணங்களில்
விஷ்பரூபம் கொண்டு
பேரழிவுகளை நிகழ்த்தி…
நியாயமும் தர்மமும்
நிலை நாட்டப்பட்டது என
பேரறிக்கை வாசிக்கவும்…
நம்பும் படியான கதைகளும்
கதாபாத்திரங்களும்
ஆதியும் அந்தமுமாக
விளங்குகிறதென்றால்…
இம்மண்ணின் மைந்தர்
எவரும் நம்புவதற்கும்
ஏன்? கேட்பதற்கும்…
தயாராயில்லை…
பாவம்! – என் உறவுகள்…
மனம் கெட்டு..
மதி மயங்கி..
கதைகளிலும்
கதாபாத்திரங்களுடனும்…
காலம் கடத்துகிறார்கள்…
அடிமைகளாய்…

