பேருக்கு ஏத்தபடி
காரமா இருந்துச்சு கேளுங்க!
சாதி பேசுபவரை
தோலுரித்து சவுக்கடிச்சது பாருங்க!
வலி பொறுத்த
நெஞ்சங்களுக்கு வலிமை சேர்த்ததுங்க!
ஒடுக்கப்பட்ட மனம்
பொங்கி பொய் பரப்புரையை ஒழிக்குதுங்க!
பேருக்கு ஏத்தபடி
காரமா இருந்துச்சு கேளுங்க!
மனித போர்வையிலிருப்பவரை
தோலுரித்து வெளிச்சம் போட்டது பாருங்க!
ஊட்டிய நஞ்சை
உரமாக்கி களத்திலாட நிற்கிறாங்க பாருங்க!
மனிதத்தினுள் மனிதன்(?) ஊட்டிய
சாதி நஞ்சையும், உரமாக்கி
களத்திலாட நிற்கிறாங்க பாருங்க!
கை கோர்த்து தோள் கொடுப்போம் வாருங்க!
“அடக்குமுறைகளை ஒழிக்கும் வரை ஓய்வதில்லை”
சபதம் செய்வது…
மனித மனமெங்கும் எதிரொலிக்குது கேளுங்க!
கை கோர்த்து தோள் கொடுப்போம் வாருங்க!
மின்னிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

