என் மரணம் – இபுத்தகம் (உண்மைச் சம்பவம் குறுங்கதையாக)

அன்புடையீர்,

என் மரணம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதால் இந்த நிகழ்வில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை உங்கள் இல்லங்களில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்நேரம் கிடைத்தால் எனக்கும் எழுதி அனுப்புங்கள்.   இதில் சொல்லப்பட்டுள்ள பல தகவல்கள் உங்கள் வாழ்வுக்கும் இந்த சமூக மாற்றத்திற்கும் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டுஅதனை நீங்களும் நம்பினால் பலரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

படைப்பை பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்

அல்லது

என் மரணம் படைப்பினை பதிவிறக்கம் செய்ய முகவரி

https://app.box.com/s/hr93gbde60q76jrnod64x3xr482tfv8c

 என்னைத் தொடர்பு கொள்ள karuveli.mahendran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.

எனது படைப்புகளை தொடர்ந்து பெற விரும்பினால் உங்கள் விருப்பம் குறித்து அந்த மின்னஞ்சலில் குறிப்பிடவும்.   படைப்புகள் மின்னஞ்சலில் உங்களை வந்து சேர வகை செய்கிறேன்.

 தொடர்ந்து வாசியுங்கள்..

 

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

நமது தகவல்களே நம் உலகம்

இது புது விசயமல்ல.

ஆம், முகநூல் பிரச்சனை  பற்றி சொன்ன போது, ஒரு சமூக செயல்பாட்டாளர் சொன்னார், “போங்க, இதுக்கெல்லாம் போயி, நம்ம கிட்ட அப்படி ஒரு இரகசியமுமில்ல”.   ஒரு சகோதரி சொன்னார். என்ன, இந்திராகாந்தி செத்துட்டாங்களானு? கேட்பது போல் ஒரு பழைய செய்திய வந்து சொல்றீங்க.  இதெல்லாம் எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்.  இன்னொரு தோழர் சொன்னார், இதற்காக நீங்க எதுக்கு வெளியேறனும்?, “நான் நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறேன்” என்றார் இன்னொரு தோழர்.

கடந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சைபர் கிரைம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வுகளுக்காக பல்வேறு தகவல்களை படிக்கவும், பல பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கவும், அதற்கு தீர்வு கிடைக்க வழியின்றி விழிபிதுங்கி நிற்கவும் செய்திருக்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அலுவலகங்களில் தினமும் பல லட்சம் தகவல்களை (data) பணி நிமித்தமாக பயன்படுத்தும் வாய்ப்பை பெற்று உள்ளேன். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலுமென எனக்கும் கொஞ்சம் தெரியத்தான் செய்யும்.

1990ல் பள்ளிக்காலங்களில் ஊரு உயர்ந்திட அனைவரின் தகவல்களும் ஓரிடத்தில் இருந்தால் எப்படி இருக்குமென கனவுகளும் கண்டிருக்கிறேன்.   அந்தக் கனவுக்கு முக்கியக் காரணம், ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் மகன் அதே பள்ளியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுகிறான் அதுவும் வறுமைக் கோட்டிற்கு கீழிருப்பதாக வருமான வரிச் சான்றிதழ் கொடுத்து.  இதைத் தடுக்க அத்தகைய தகவல்கள் ஒருங்கிணைப்பு தேவையென கனவு கண்டிருக்கிறேன்.  ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்கள் அந்த ஊரின் வளர்ச்சிக்கு திட்டமிட உதவுமென நம்பியிருக்கிறேன்.  ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் இந்தியா என்ற செய்தியைக் கேட்ட பொழுது அதனை நம்பி ஆதரவும் தந்திருக்கிறேன். அதனால் மிகவும் கீழ்த்தரமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கிறேன்.

நம்மிடம் இருக்கும் சாதனங்களும், தொழில் நுட்பமும் மட்டும் நம்மை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில்லை, அதனை அழிவுகளின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் பாதகமின்றி செயல் முறை படுத்த வேண்டுமென்ற நல்லெண்ணம் படைத்த உள்ளங்கள் மிக மிக அவசியம் என்பது அத்தனையிலும் மிக முக்கியம்.   அந்த உள்ளம் இல்லாமல் இருப்பதே மனித குலத்தின் மிகப்பெரிய சாபக்கேடு என்பதை வரலாறு பதிவுகளாக்கி போயிருக்கிறது.   அதில் முகநூலும் ஒரு முக்கியப் பக்கத்தை பிடித்து விட்டதென்பதே எனது தனிப்பட்ட கருத்து.   அது மனித குலத்தின் கருப்பு பக்கமாகி விட்டதென்பது மிகவும் வருத்தமளிக்கக் கூடியதே.  அமெரிக்காவில், அதுவும் அமெரிக்க மக்களுக்கு நிகழ்ந்ததால் மட்டுமே அதுவும் வெளியே வந்திருக்கிறது.   வெளிவராத பல நாட்டு தேர்தல் மாற்றங்கள், மக்கள் படுகொலைகள், புரட்சி நாடகங்கள், பல விசயங்கள் கருப்புக்குள் ஒளிந்து கொண்டு வெளியே ஒளிர்ந்து கொண்டிருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முழுவதுமாக நம்புகிறேன்.

இத்தகைய வரலாற்றைக் கொண்ட இந்த வையகத்தில், மக்கள் பலருக்கும் இப்படி ஒரு எண்ணம் தோன்றி பொதுவாகி விட்டது “எல்லோரும் தப்பு பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க”  அதுக்காக நாம் தனி ஆளாக என்ன செய்ய இயலும்?   இந்தக் கேள்வியை அப்படியே வைத்திருங்கள்.  கல்லறையில் நம்மோடு புதைத்துக் கொள்ள உதவும்.

ஆனால், ஒரு தனிமனிதனின் தகவல்களை பயன்படுத்தி என்னென்ன செய்தார்கள் என்பதனை “கேம்பிரிட்ஸ் அனால்டிகா” கம்பெனியின் முக்கிய பொறுப்பாளரான திரு.கிறிஸ்டோபர் வொய்லி வாக்குமூலம் மற்றும் முகநூலின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. மார்க் ஜுக்கர்பெர்க்கின் பதில்களையும் கவனித்து கேளுங்கள்.   அதற்குப் பிறகும் இந்த உலகத்தில் சமூக ஊடகங்களில் இல்லாமல் உங்களால் வாழ முடியாதென நினைத்தால் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாட்சியம்  

 நீங்கள் வெறும் பொழுது போக்காளர் என்றால் உங்களால் இந்த 6 மணி நேரத்தை ஒதுக்குவது மிகக் கடினம், அப்படிப்பட்டவர்களுக்கு எளிதாக விளக்கும் மூன்றாவது vox தள முகவரி மிகவும் உதவும்.

https://www.vox.com/policy-and-politics/2018/3/23/17151916/facebook-cambridge-analytica-trump-diagram

கிறிஸ்டோபர் வொய்லி சாட்சியம்

மிகவும் சுருக்கமாக..

இன்னும் இதுபற்றிய பல தகவல்கள் உள்ளன, நேரம் கிடைத்தால் தேடிப் படியுங்கள், பாருங்கள்.

 தனிப்பட்ட ஒருவன்  சமூக ஊடகங்களை விட்டு வெளியேறுவது என்பது முக்கியமாக முகநூல்,டிவிட்டர்,வாட்ச் அப் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் தளங்களில் இருந்து வெளியேறுவது என்பது சமூக வளை தளங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உங்களைப் போல் நானும் அறிவேன்.   ஆனாலும் பெரும் மன நிம்மதியையும் அநீதிக்கு எதிரான எனது எதிர்ப்பை பதிவு செய்த திருப்தியும் எனக்கிருக்கிறது.

வருங்காலம் வெறும் 0, 1 ஆக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.  அதை யாராலும் தடுக்க இயலாதென்பதும் உண்மை தான்.  அதே உலகில் அதனை விட்டு விலகி வாழ முடியுமென்பதும் சாத்தியமே.  இதுவரை பொதுவெளியில், சமூக ஊடகங்களின் வாயிலாக, என் முகமறியாமல், என் குணமறியாமல், என்னோடு உறவாயிருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.   களமாடிய தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

என் கருத்துக்களிலிருந்து நீங்கள் வேறுபடலாம் அது உங்களின் உரிமை.  அதை மதிப்பது எப்போதும் எனது கடமை.   இனி பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்.  

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்.

“அவர்கள் அடிமையாக்கத் துடித்தால், என் உதிரம் ஒரு போதும் அதற்கு அடங்கி உறையாது”

 

காணொளிகள், தகவல்கள் நன்றி : உரிமையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல்

100 நாட்கள் 100 கவிதை காணொளிகள் பயணம் 100வது நாள் இன்று

அன்புடையீர்,

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும், 100 காணொளி கவிதைகள் பயணத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்து வந்தமைக்கு.  விரைவில் அடுத்த புது முயற்சியுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.  100 காணொளி கவிதைகளை கேட்டு மகிழ விரும்புபவர்கள் இங்கு பயணிக்கவும்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

https://www.youtube.com/channel/UCxkVX4DaaPqcNh5_g-DtHsA

 

அதுவரை அன்புடன் வாழ்த்துகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

திரு.விஜயகாந்த் : மனம் படைக்குது உலகை

ஆம்! நாம் வாழ்வதற்காக பிறந்தோம்.  பிறக்கையில் நினைக்கவில்லை, தெரியவுமில்லை வாழ்க்கை இத்தகையதென்று, ஆனாலும் துவங்கி விட்டோம்.  நமது சொந்தத் தேவைகள் நமது வாழ்வின் நிமிடங்களைத் தின்று கொண்டிருக்கையில், நம்மை சுற்றி உள்ள உயிர்களுக்காகவும் இயற்கைக்காகவும் ஏதாவது நன்மை செய்துவிட வேண்டும் அதுவே தன் வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யும் எனும் எண்ணம் கொண்ட சிலரை மட்டுமே நாம் சந்திக்க இயல்கிறது.  அதிலும் மிகச் சிலரே அதனை செயல் வடிவமாய் கொண்டு வர தயாராய் இருக்கிறார்கள்.  அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் எந்த வரலாற்றிலும் எழுதப்படுவதில்லை, அவர்களிடம் உதவி பெற்ற இதயங்களைத் தவிர.

திரு. விஜயகார்ந்த், பல போராட்டங்களுக்கு இடையில் தனது சிறு உணவகத்தை நடத்தி வந்தாலும் அத்தகைய ஒரு மனதுடன் தன் வாழ்வைத் தொடர்கிறார்.  மெத்தப் படித்து பெரும்பணியில் இருக்கும், பெரும் பணம் ஈட்டும் மேதாவிகளுக்கு இல்லாத அந்த மனம், இல்லாதவனுக்கு வருவதால் பயன் என்ன?  இந்தக் கேள்வி மனதில் தோன்றினால் அதற்கு பதிலாய் அவரது சமூகம் நோக்கிய செயல்கள் பதிலாய் வந்து நிற்கின்றன.   இத்தகைய மனிதர்களை நித்தம் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து கொண்டே இருக்கிறோம்.  இனியும் அவ்வாறு செய்திட வேண்டாம்.

இம்மண்ணுக்காகவும் தமிழுக்காகவும் ஏதேனும் செய்யத் துடிக்கும் அவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், அவர் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படத்தில் இன்று நடக்கவிருக்கும் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு மற்றும் நாளை (08-04-2018) நடக்கவிருக்கும் சாக்கடைத் திருவிழா அழைப்புகளுடன் திரு.விஜயகாந்த்.

தொடரும்…

IMG_20180406_214709491

ஏர்டெல்லுடன் எனது கடைசி நிமிட அனுபவங்கள் – காணொளி தொடர் | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்

ஏன் நான் ஏர்டெல் எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்பதில்லை?

ஏன் நான் ஏர்டெல் சேவைகளை (பணம் பெற்றுக் கொண்டு தரும்) பயன்படுத்துவதில்லை?

ஏன் நான் ஏர்டெல் வாடிக்கையாளர் தொடர்புகளை எனது பட்டியலிலிருந்து நீக்கினேன்?

நீங்கள் இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கான பதில் இதோ மூன்று காணொளிகளாக

முதல் காணொளியை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் காணொளியை  வாடிக்கையாளர்கள் சார்பாக உங்களுக்காக நானே பகிர்கிறேன்.

இரண்டாம் காணொளி

மூன்றாம் காணொளி

 

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இதே தருணத்தில் இந்தக் காணொளிகள் ஏர்டெல் வாடிக்கையாளர் மைய பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது.   உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்