தோழா் தருணா நாலு சொல்லில் இபுத்தகத்தை வெளியிட்டார்

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்.

“நாலு சொல்லில்” புத்தகத்தின் பயணம் இன்னொரு தளத்திலும் பயணிக்க துவங்கியுள்ளது.  ஆம், தமிழில் புதிய முயற்சியான “நாலு சொல்லில்” புத்தகம் தற்போது இ-புத்தகமாக அமேசான் – கிண்டிலில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இன்று முதல் இபுத்தகத்தை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 15 / 16 தேதிகளில் உங்கள் கிண்டிலில் நீங்கள் வாசிக்கத் துவங்கலாம்.

புத்தகம் மற்றும் வெளியீட்டு நிகழ்விலிருந்து சில துளிகள்.. உங்களுக்காக

இரண்டு பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தினை குழந்தை தருணா அவரது பெற்றோர்களின் முன்னிலையில் வெளியிட்டார். குழந்தை தருணா எப்படி வெளியிடுவதற்கானவரானார்? அந்த வினா உங்களுக்குள் இருக்கும்.. அதற்கான விளக்கத்தை தருணாவை பார்த்தவர் யாரும் கேட்கப்போவதில்லை! ஆனாலும், அதற்கான நேரம் வரும் போது நானே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகத்தை வெளியிடும் முன்பும், வெளியிட்ட பிறகும் தருணாவுடனான உரையாடல்கள், அவர் பாடிய பாடல்கள், வரைந்து காண்பித்த ஓவியங்கள் அத்தனையும் என்னை 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது.   ஒவ்வொரு கலைஞனும் குழந்தையாய் இருக்க வேண்டிய அவசியத்தை நினைவு படுத்தியது.

This slideshow requires JavaScript.

தருணாவின் பெற்றோர்கள், இந்த அவசர உலகத்தில் நாம் அனைவரும் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து பயணிப்பவர்கள். தருணா, இந்த இ-புத்தகத்தை வெளியிட வேண்டுமெனும் என் விருப்பத்தை தெரிவித்த போது பெரும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக் கொண்டு அத்தனையையும் ஒரு சில மணி நேரத்தில் நிகழச்செய்த தோழர் மதுவனேஷ் மற்றும் அவரது துணைவியார் சுதா இருவருக்கும் என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.   அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பற்றி இன்னொரு முறை கட்டாயம் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுவனேஷ் அவர்களின் முகநூல் முகவரி

https://www.facebook.com/govindarajulu.madhuvanesh

நாலு சொல்லில், முதல் பாகத்தினை இன்று இம்மண்ணில் நான் இருக்க காரணமான, எனக்கு உயிரும் வாழ்வும் தந்த அப்பாவும் அம்மாவும் வெளியிட்டனர்.  உண்மையில் அவர்கள் ஆசியுடன் கணிணியின் பொத்தானை நான் தான் அழுத்தினேன்.  இத்தகைய பெற்றோர்களைப் பெற்ற பிள்ளைகளெல்லாம் சொர்க்கத்திற்கு தனியே ஏங்கி தவிக்கத் தேவையில்லை.  அவர்களுக்கான என் நன்றி என்பது என் வாழ்வே ஆகும்.

என்னுடைய அத்தனை முயற்சிகளுக்கும் எங்கிருந்தாலும் என்னை வாழ்த்தியபடியே தங்கள் பயணத்தை தொடரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தகைய நல்லுள்ளங்கள் இருப்பதாலேயே, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உங்களிடம் இப்புத்தகத்தையும் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது.

நாலு சொல்லில் அமேசான் கிண்டில் புத்தகத்திற்கான இணைப்புகள் இதோ.. Links to Amazon – Kindle version books,  now pre-booking available at all Amazon market places, below is the link to Amazon India.

முதல் பாகம்  (Naalu Sollil Part 1)

https://www.amazon.in/dp/B074DZ5289/

இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2)

https://www.amazon.in/dp/B074DZYFKN/

நாலு சொல்லில் முகநூல் பக்கம்

https://www.facebook.com/4Sollil/

நாலு சொல்லில் ஒரு சிறு உதாரணம்

நாலு சொல்லில் ஒரு புதிய முயற்சி என்பதால் அதற்கான வரவேற்பு எத்தகையதாக இருக்குமென யூகிக்க இது தருணமல்ல என்றே கருதுகிறேன்.  இதுவரை முகநூல் பக்கத்தில் கிடைத்த சிறப்பான பின்னூட்டங்கள் நம்பிக்கை தருகிறது.  உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நாலு சொல்லில் புத்தகத்தின் முகநூல் பக்கத்திற்கு வரலாம் அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கு Karuveli.mahendran@gmail.com உங்கள் கருத்துக்களை அனுப்பலாம்.

நாலு சொல்லில் புத்தகத்தை தொடர்ந்து தற்சமயம் “ கண்களை மூடிப் பார்” என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.   மார்ச் 2018ல் உங்கள் கையிலிருக்குமென நம்புகிறேன்.  அதற்கான முகநூல் பக்கம்

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

This slideshow requires JavaScript.

எனது அடுத்தடுத்த படைப்புகள் பற்றி அறிய..  இணைந்திருங்கள்

https://www.facebook.com/KaruveliTheCreator/

http://www.karuveli.wordpress.com

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

94455 28556

புகைப்படம் நன்றி: மதுவனேஷ், சுதா

Advertisements

One thought on “தோழா் தருணா நாலு சொல்லில் இபுத்தகத்தை வெளியிட்டார்

  1. Pingback: நி நீ நா புத்தகத்தை எழுதத் துவங்குகிறேன் | கருவெளி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s