செயல்களை துவங்குவோம்..

அன்புடையீர்,
இது கவிதையல்ல…  அக்கவிதையை படைத்து விடத் துடிக்கும் இதயத்திலிருந்து பிறக்கும் ஒரு  அனுபவப் பகிர்வு !   இத்தனை நாட்களாய் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு எனது நன்றிகளோடு துவங்குகிறேன்.
நான் எழுதும் வார்த்தைக் கோர்வைகள் கவிதைகளாகவோ… புதுக்கவிதைகளாகவோ.. போற்றப்படாமல் போகலாம். ஏன் அங்கீகரிக்கப்படாமல் கூட போகலாம். ஆனால் அந்த வார்த்தைக் கோர்வைகளுக்குள் இந்த வையகத்தின் வாழ்க்கை இருக்கும், அங்கு பரவிக் கிடக்கும் உணர்வுகள், சொல்லப்படாத உண்மைகள், சொல்லிடத் துடிக்கும் நிகழ்வுகள் இருக்கும். அதற்குத் தானே கலை..
 
இதை இங்கே சொல்லக் காரணம், நல்லபடியாக செய்ய முடிந்தால் மட்டுமே தன் செயலைத் துவங்குவேன் என்று எதையுமே.. செய்யத் துவங்காமலே இருந்து விடாதீர்கள்.  உங்கள் செயல்களை துவங்குங்கள் அவை அத்தனையும் மாற்றியமைக்கும் சக்தி படைத்தவை.  அது பல சமயங்களில் நமக்கு புலப்படாமலும் போகலாம்.  இயலாது, முடியாது, சாத்தியமில்லை என உங்கள் மனது சொல்லும் போதெல்லாம், ஊரார் உரைக்கும் போதெல்லாம் உங்கள் செயல்களை துவங்குங்கள்.  அவை நிகழ்த்தும் மாயங்கள் சில நாட்களிலேயே உங்களுக்கு விளங்கி விடும்.
 
இதற்கு இந்த ஆண்டின் உதாரணங்கள் என் வாழ்விலிருந்து,
 
நான் எழுதி வெளியிட்ட #நாலு_சொல்லில் தொகுப்பு, வெறும் நாலு வார்த்தைகளை வைத்துக் கொண்டு விசயத்தை சொல்ல வேண்டும். எப்படி? எப்படி? எப்படி? கடினம் தான். ஆனால், அதைப் படித்தவர்கள் “நாலு சொல்லில்” படைத்தார்கள். அதைத் தவிர வேறு என்னதான் வேண்டும்?. இதோ, சனவரி 1ல் ஒலி-ஒளிப் புத்தகமாகவும் பிறப்பெடுக்கிறது..
20171224_NewYearReleaseInvite
 
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நிலவும் நீயும் நானும். ஒற்றை நிலவை வைத்துக் கொண்டு உலகத்தில் இதுவரை கவிஞர்கள் சொல்லாததை எதைத்தான் சொல்லிவிட முடியும். முதலில் நினைக்கையில் அவ்வாறு தான் தோன்றியது, ஆனால், இக்கணம் நிலவு நீயும் நானும், முந்நூறு பக்கங்களை கடந்து நிற்கிறது. இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு திட்டமிட்டுள்ள 12 புத்தகங்களில் குறைந்தது மூன்று இடமாவது தனக்கு வேண்டுமென அடம்பிடித்து நிற்கிறது.
நிலவும் நீயும் நானும் வெளியீடு குறித்த காணொளி : https://youtu.be/_0lWiIaOBAU
NiNeNa_Cover1
 
மார்ச்சில் வெளியிட திட்டமிட்டுள்ள, “கண்களை மூடிப் பார்” ஒரு பெரும் பயணத்தின் ஆரம்பம். என்னைப் போன்றோர் அப்பயணத்தைப் பற்றி பெரிதாய் ஏதும் சொல்லி விட இயலாது தான் இருந்தும் எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அச்சம் தவிர்
கண்களை மூடிப் பார்
துவங்கும் வரை தான், துவங்கி விட்டால்..  என்ன நிகழுமென நீங்களே காண்பீர்கள்.  2018ல் உங்களது செயல்களின் மாயஜாலங்களை கேட்டு மகிழ்ந்திட காத்திருக்கிறேன்.
2018_Ebooks_Intro_TN2
அன்போடு
கருவெளி ராச.மகேந்திரன்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.