உள்நோக்கிய தேடல் பயண அனுபவம் (கண்களை மூடிப் பார்)

அன்புடையீர்

வணக்கம்.

உள்நோக்கிய தேடல் குறித்து என் அனுபவப் பகிர்வான “கண்களை மூடிப்பார்” கவிதைத் தொகுப்பு 25 மார்ச் அன்று அறிமுகம் செய்யப்பட்டு 26 மார்ச்சிலிருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்திட வழிவகை செய்யப்பட்ட்து நீங்கள் அறிந்ததே. அதன் ஒரு கட்டமாக புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய QR Code உடன் உருவாக்கப்பட்ட படத்தை அச்சிட்டு பகிர்வதாக ஒரு முயற்சியையும் துவங்கினேன்.  அதற்காக, அச்சிட அருகிலுள்ள கடைக்குச் சென்ற போது இருவர் தங்கள் உள்நோக்கியத் தேடல் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.  அதற்காகவே இந்தப் பதிவு

அந்த இருவரில், தம்பி வயதினை ஒத்த ஒருவர் சொன்ன செய்தி மிகவும் அற்புதமான அனுபவம்.    அது தியான நிலையில் நீங்கள் “ ஒரு எந்த சலனமும் இல்லா நீர் நிலை “ போன்ற நிலையில் இருப்பதாகும்.   உண்மையில் சொல்லப் போனால் பிரபஞ்சத்தின் இயக்க அதிர்வலையில் ஒன்றி உங்கள் இயல்பான அதிர்வு அலைகளை / சிந்தனை அலைகளை கடந்து இருக்கும் இயக்கமற்ற இயக்க நிலையாகும்.   என்னைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான ஆரம்ப நிலையாகும்.  அதே நிலையில் நிலைத்திருப்பது அத்தனை சுலபமானதல்ல. அந்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் ஏதேனும் ஒரு பெளதீக பொருளில் ஏற்படும் அதிர்வுகள் நமது உடலில் (பெளதீக) அப்படியே பிரதிபலிக்கும்.  ஆம், சலனமற்ற ஓர் நீர் நிலையில் வீசப்பட்ட ஒரு கல் ஏற்படுத்தும் அலையைப் போல.   அந்த அதிர்வு பலரையும் பெளதீக நிலைக்கு மீட்டுக் கொண்டு வந்து விடுகிறது.  ஆகையால் தான் உள்நோக்கியத் தேடலுக்காக பலரும் அத்தனையும் விட்டு விட்டு பயணிக்கிறார்களோ? என்ற வினா எனக்குள் எழுகிறது.  அது இருக்கட்டும்.

மீண்டும் அந்த இயக்கமற்ற இயக்க நிலையை அடைவது அத்தனை சுலபமல்ல என்றாலும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருப்பான்(ள்) உள்நோக்கியப் பயணத்திலிருக்கும் ஒரு பயணி என்பதனை நான் எக்கணமும் நம்புகிறேன்.   அத்தகைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அந்த தம்பியும் தன் பயணத்தை தொடர்வார் என நம்புகிறேன்.  அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அக்கடையின் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும், இந்த பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தவருமான சகோதரர் அவரது வினைகளுக்கான எதிர்வினை மற்றும் அதற்காக அவர் தனக்குள் படைத்த புத்தம் புதிய குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் பற்றி பகிர்ந்து ஆச்சர்யமளித்தார்.   நமது எதிர்வினைகள், வினைகள், உள்நோக்கிய மாற்றங்கள் அத்தனையும் மாறி மாறி நிகழ்கையில் நம் பயணம் எப்படி இருக்கும் என்பதற்கு அவர் வாழ்வு அனுபவங்கள் மிகச் சிறப்பான உதாரணமாக இருந்தது.

இந்த அனுபவம் மிகவும் அற்புதமானது, அவர்கள் இருவரும் கண்களை மூடிப்பார் புத்தகத்தை வாசிக்கையில் தங்கள் வாழ்வை அதில் காண்பார்கள்.  அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

படைப்புகள் இந்த உலகை அதன் மக்களை பிரதிபலித்து விட்டால் நான் எழுதுவதின் அத்தனை பலனையும் நான் அடைந்து விட்டதாகவே நம்புகிறேன்.  ஏன் விலையின்றி புத்தகத்தை கொடுக்கிறீர்கள்? என்று என்னிடம் திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதிலாக இருக்குமென்றும் நம்புகிறேன்.

கண்களை மூடிப்பார் புத்தகத்தை படித்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.  காணொளியாகவும் பகிரலாம்.

KMP_EBOOK_DOWNLOAD_TN

மனிதன் படைத்த பணத்தை சுற்றியே இந்த வையகம் சுழல்கிறதென்று நீங்கள் இனியும் நம்பித் தொடர்ந்தால் அந்தக் கருத்தை நான் ஒன்றும் செய்திட இயலாது.

விரைவில் இன்னும் பல படைப்புகளுடனும் அனுபவங்களுடனும் உங்களை சந்திக்கிறேன்.

கண்களை மூடிப்பார் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய

https://karuveli.wordpress.com/spoint/kmp/

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.