பாரதத்தின் ஒற்றைத் தலைவன் அடல் பிகாரி வாஜ்பாய்

VAJPAYEE

முன்னாள் பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

 

பாரதத்தின் ஒற்றைத் தலைவன்

உன் எதிரியையும்

உடன் இணைத்து பயணித்தாய்..

தங்க நாற்சக்கர சாலைகள்

இந்திய தேசத்தின்

நாடி நரம்பாய் ஓடி

உன் நினைவுகளை

நாடெங்கும் நிறைத்திருக்கும்!

 

உன்னைப் பற்றி

என்றோ நான் படித்த வரலாறு..

உன்னை ஒரு போதும்

வந்து சேரா..

பல பக்க கவிதைகள் படைக்க

என்னை உந்தியது..

 

நல்ல முயற்சிகள் செய்து

நினைவில் இருக்கும்

சில நல் திட்டங்கள் நிறைவேற்றி

நல் வாழ்வை வாழ்ந்து

நம் மக்களுக்கு விடை கொடுத்தாய்!

அமைதியாய் ஆளுமை செய்வதும்

சாத்தியமென்ற சாட்சியானாய்!

 

உன் வழித் தோன்றல்களுக்கு

அப்பாடம் உதவுமோ?

உன் மரணம் அவர்களுக்கு

அதனை உணர்த்துமோ?

நிகழ்ந்தாலும் அது நிகழாமல்

உம்மவர் தொடர்ந்தாலும்

உன்னோடு..

முடிந்து போகுது..

உம்மவரின் மேலான

மரியாதையும் மதிப்பும்!

மண்ணுக்கு மக்களுக்கும்

உம்மவர் செய்யும்

அநீதிகளைக் கண்டே!

 

கருவெளி ராச.மகேந்திரன்

 

 

Advertisements

One thought on “பாரதத்தின் ஒற்றைத் தலைவன் அடல் பிகாரி வாஜ்பாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.