எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

அதுவும் எழுதச் சொல்லி கேட்டு வாங்கி படிக்கும், அந்நாளில் இருந்த வாசகி என்றால் என் அன்பு அக்கா தீபாவைத் தான் சொல்ல வேண்டும். கால ஓட்டத்தில் எனது பயணங்கள் என்னை அனைவரிடமிருந்தும் வெகுதூரம் கொண்டு சென்ற போது, அவரொன்றும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. பல ஆண்டுகள் கழித்து சந்தித்த போது.. மீண்டும் கேட்டார்… கவிதைகளை…

ஒரு வேளை அந்த வாசகி இல்லாமல் போயிருந்தால்.. பாவம் அந்த சிறு வயது கதை சொல்லி மகேந்திரன் கவிதைகளை தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டான்.

பலரின் பிறந்த நாளுக்கும் நான் கொடுத்த வரிகளில் சில அவரது பிறந்த நாளுக்காக நான் எழுதிய வரிகள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

எந்த எதிர்ப்பார்ப்புமில்லா அன்புக்கு சொந்தக்காரி அவர்…

கருத்துக்களில் நாங்கள் வேறுபடலாம்… அன்பில்.. ஒரு போதும் இயலாது..

ஒரே குறைதான்… ஒரே கருவறையில் இருந்த இம்மண்ணிற்கு வரவில்லை நாங்கள்…

அவரது அன்னை இன்னும் என் வாழ்வோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறார். நம்பிக்கையின் சின்னமாய்.. தானத்தின் சின்னமாய்..

இந்த நிகழ்வு பகிா்வில், அற்புதங்களிருக்காது ஆச்சா்யங்களிருக்காது.. அதனை நிகழ்த்தப்போகும் ஒரு ஜீவனை வளா்த்தெடுப்பதற்கான விதைகள் இருக்கும். வாழ்க்கையே அவ்வளவுதான். வாழ்ந்தால் அறியலாம் யாவரும்..

நீங்கள் படைத்த படைப்பாளன்
கருவெளி ராச. மகேந்திரன்

பயணங்கள் வேறு

நாம் ஒன்றையோ/ ஒருவரையோ.. தேடுகையில் அதன் / அவரின் தேடல் இன்னொன்றாகக் கூட இருக்கலாம்.

2017072201

PC: Google Images

 

 

எப்படி?!

முகம் தெரியாது...

குரல் மாற்றி கொள்ளலாம்...

இத்தனை வசதியிருந்தும்

எந்நிலையை

அப்படியே...

ஒவ்வொரு கைபேசி அழைப்பிலும்

அறிந்து விசாரிக்கும் சக்தி

எப்படி கிட்டுகிறதோ?

என் அன்னைக்கு மட்டும்!

பாவம் அவள்!

விட்டு விலகையிலும் பாவப்படும் மனம் அபூர்வமே!

2017052904

ஒழித்துள்ளேன் அவளை

ஒழித்து வைத்திருப்பதை சொல்லக் கூடாது தான்… இருந்தும் சொல்கிறேன்.. அவளை ஒழித்து வைத்துள்ளேன்…  எங்கே?

2017052706

PC: Google Images

ஜீவித்திருந்ததின் பயன்

ஒவ்வொரு வார்த்தை கோர்வைகளுக்குப் பின்பும் ஒரு கதையுண்டு..

இந்த வார்த்தைக் கோர்வைகளுக்கு காரணமான கதையை பகிர்ந்து கொண்ட தம்பிக்கு நன்றி…   அவர் சொன்னது ஒரு சொல் மட்டுமே…  அதன் பின்னே தான் கதையே இருக்கு…  இந்த வரிகள் அவரது வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கும்…  அதற்குமேல் இங்கு சொல்ல இயலாது…

சிலர் நம் வாழ்வின் ஜீவனாகவும்..  வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால்.. எனக்கு, வரும் ஞாயிறு வாசகரின் கருப்பொருளுக்கு எழுதுவதற்கு ஒரு முன்னோட்டமாய் அமைந்தது என்றே சொல்லலாம்.

2017052305

ஜீவிதம்

ஒவ்வொரு வார்த்தை கோர்வைகளுக்குப் பின்பும் ஒரு கதையுண்டு..

இந்த வார்த்தைக் கோர்வைகளுக்கு காரணமான கதையை பகிர்ந்து கொண்ட தம்பிக்கு நன்றி…   அவர் சொன்னது ஒரு சொல் மட்டுமே…  அதன் பின்னே தான் கதையே இருக்கு…  இந்த வரிகள் அவரது வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கும்…  அதற்குமேல் இங்கு சொல்ல இயலாது…

சிலர் நம் வாழ்வின் ஜீவனாகவும்..  வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறார்கள்.

2017052303

அவனும் நானும் அவளும்!

அன்புடையீர்…

வணக்கம்…  சில நிகழ்வுகளை எழுத்துக்குள் கொண்டு வருவது மிகவும் சுவாரஷ்யமானது. அத்தகைய நிகழ்வொன்று… நீங்கள் எதிர்பாரா தலைப்புடன்.. வாசித்து அனுபவித்திடுங்கள்..

201705051501

அவனும் நானும் அவளும் – கருவெளி

 

அழைப்பு அவளிடமிருந்து தான்

அதை எடுத்திட மனமில்லை தான்!

ஆனாலும் எடுத்தேன்..

 

நினைத்தது போலவே..

அவள் அவனைத் தான் கேட்டாள்!

இல்லை என்று வைக்க முயல்கையில்!

இதுவே இறுதி அழைப்பு..

அவனிடம் கொடு என்றாள்..

 

இது போல்.. இருநூறு முறைகள்

நானே கேட்டிருப்பேன்..

இருந்தும் அவள் குரல்

இம்முறை வேறு விதமாக இருந்தது!

 

அவனுக்கு சைகை செய்தேன்..

அவனும் ஆமோதித்தான்!

கைபேசி கைமாறியது..

அவன் கைகளில், என் கைபேசியும்

என் வாழ்வும்; அவள் வாழ்வும்..

 

அவன் செவி மடல்களை

என் கைபேசி தீண்டுகையில்

என் இதயம் துடிப்பை துண்டித்து

மீண்டும் துவங்கியது.. இரட்டிப்பு வேகத்தில்!

 

ஆச்சர்யம்! அவன் பேசவில்லை..

நான் எதிர்பாராதது..

இருபது ஆண்டுகளின் மெளனம்

இன்றும் உடையாமலா?

அவள் குரல் எனக்கு கேட்கவேயில்லை!

 

அவன் சம்மதிப்பதாய் தலையசைத்தான்

எனக்குத் தலை சுற்றியது..

வேண்டாமென்று தலையசைத்தேன்..

சரி என்று வாய் திறந்தான்..

மரமிழந்த இலையாய் தரையில் வீழ்ந்தேன்!

 

கண் விழிக்கையில்

கண் எதிரே அவளிருந்தாள்!

காண விரும்பாமல் கண் மூடுவதற்குள்

கட்டிக் கொண்டு அழுதாள்!

 

தள்ளி விட முயன்றேன்

முடியவில்லை..

இருவரையும் கட்டிக் கொண்டிருந்தான்

அவன் தன் அன்புக் கரங்களால்..

 

கதறி அழுதபடிக் கேட்டேன்..

கருவில் கலைக்கத் துடித்தாயோ?

அடுத்த வார்த்தை வருவதற்குள்

அவன் கரங்கள் என் இதழ்களில்

அன்புச் சாயங்கள் பூசியது!

 

பெண் சிசு என்றாலும்

உன் கருவை கலைக்காதே!

அதுவே உன் தாயுக்கு

நீ தரும் பரிசு என்றான்!

 

மீண்டும் அவளோடு அவன்!

அவனோடு எக்கணமும் போல் நான்!

எப்போதும் தாயில்லா மகளில்லை நான்!

அவன் என் தாயுமானவன்!

 

அவளன்றி

அத்தனையும் கொடுக்க காத்திருக்கும் அன்னைக்காக..

அன்னை உள்ளம் படைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும்..

அவளன்றி - கருவெளி

இதுவும் வாழ்வோ?

யார் கண்ணில் நாம் கண்ணீரைக் காண விரும்பவதில்லையோ… அவர்களை நாமே அழச் செய்வதுமுண்டு. அது ஒரு கொடுமையான சூழல் என்றால், இது போதாதென்று அவர்களை காலமும் விரட்டி விரட்டி கண்ணீர் சிந்த வைக்கும். இது அவர்களுக்கான சோதனையோ… இல்லை நமக்கானதோ.. நாம் அறிவதற்குள்ளேயே நம் வாழ்வு முடிந்து போயிருக்கும்.   இவை எல்லாவற்றையும் கொடுமையான நிலை ஒன்று உண்டு அது… நாம் வருந்தக் கூடாதென்பதற்காக தன் கண்ணீரை மறைத்து நம்மிடம் புன்னகித்து நடித்து செல்லும் அவர்களின் நிலை.  இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காக நடிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமென்று அவர்களுக்கும் தெரியும்.  இது எத்தனை ஆச்சர்யமான வாழ்க்கை சூழல்…  அது குறித்து கேள்வியை முன் வைக்கும் ஒரு வார்த்தைக் கோர்வை..

அத்தனையும் மனதின் அருமையான விளையாட்டு… விளையாடுங்கள்..

இதுவும் வாழ்வோ? - கருவெளி