விநோதங்களின் சொந்தக்காரி (என் கண்ணம்மா)

இருபது ஆண்டுகளுக்கு முன்னே நான் சந்தித்த ஒரு குழந்தையின் கண்ணீர் இன்னும் என் கண்களில் நிறைந்திருக்கு,  அந்தக் குழந்தை இதே பூமியில் இன்று எங்கோ தன் வாழ்வை மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நானும் இதே பூமியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.   அக்குழந்தை தன் கண்களை உருட்டி மிரட்டினால் யாரும் பயந்து விடுவோம்.  ஆனால் அக்கண்ணை கேலி செய்து செய்து அவளை கண்ணீர் வடிக்கச் செய்யும் நிமிடங்கள் நீங்க மறுத்து நிறைந்திருக்கு என் நெஞ்சத்தே.   இதே சமூகம் நமக்கு சொல்லியும் தருது “குழந்தைகளை போற்றுவோமென”.   

குழந்தைகளை போற்றக் கற்றுக் கொடுக்கும் அந்த சமூகத்திற்கு நன்றியையும், கேலி செய்து தாழ்வு படுத்தும் அந்த சமூகத்திற்கு சமரசமில்லா எதிர்ப்பையும்,  கண்ணீர் சிந்தும் அந்த குழந்தைகளின் சமூகத்திற்கு தைரியத்தையும் விதையென விதைத்தபடி பயணிக்கிறேன் நான்.  நீங்கள்?

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

2018031901

 

Advertisements

நீ அறிவாய் என் அன்பே!

உறவாவது எளிதும் இல்லை… உறவாய் இருந்தவர்கள் பிரிவது சுலபமில்லை.  உறவு உண்மையானதாயிருக்கையில்.  உண்மை என்பது எதுவென்று யாருக்குத் தெரியும் இருந்தும் என் அன்புகளுக்குத் தெரியும் உண்மை என்னவென்று.  இதோ அவர்களுக்காக

2018031101

நெருப்பின் தேடல் !

குரங்கணி தீ விபத்தும் செய்தித் தீகளின் விபத்தும் நீயுட்டிரினோ நினைவலைகளும், ஓகி புயலும் ஓயாமல் என் உறக்கத்திலும் பயணப் பட்டுக் கொண்டே இருக்கின்றன !  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் நீதி மையங்களை நினைத்தால் உள்ளம் அஞ்சுகிறது, நம்பிக்கைகள் தற்கொலை செய்து கொள்கிறது..  இதோ அந்த நினைவலைகளிலிருந்து சில துளிகள் உங்களுக்காக

நெருப்பின் தேடல் !
 
காட்டுத் தீ என்றால்..
மாநகர உயிர்களின் இழப்பு என்றால்
செய்தியாகுது ! காட்டுத் தீ செய்தியாகுது !
அக்காட்டில் வாழ்பவன் என்றால்
அச்செய்திக்கும் தகுதியற்றுப் போகுது !
 
குரங்கணித் தீக்கும்
நீயுட்டிரினோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை !
வாய் கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள் !
 
தீயிலிருந்தே காக்க முடியாதவன்..
கதிர் வீச்சுகளிலிருந்தும்
அணுச்சிதைவுகளிலிருந்தும்
நிச்சயம் காப்பான் ?
 
மீனவனை மீட்காத ஹெலிகாப்டர்கள்
மீட்டு விட வந்திறங்கின..
காட்டுத் தீயிலிருந்து உடல்களை !
 
மீட்டவர்கள் கணக்கு விரைவாகவும்
மாண்டவர்கள் கணக்கு மெதுவாகவும்
வந்து சேரும் இது தானே வரலாறு !
அதுவரை காத்திருப்பதில் என்ன தகராறு ?
 
மீட்ட உடல்களில் ஐந்து உடல்கள்
மூன்று உடல்கள் இரண்டு உடல்களென
அரசோடு தனியார் மருத்துவமனைகளும்
பங்கு போட்டுக் கொண்டன !
 
சிறு அசாதாரணத்தைக் காக்க இருக்கும்
தயார் நிலை இது தான் !
இதில் அசாதாரணமெல்லாம்
சாதாரணமென்று கொக்கரிப்புகள் வேறு !
 
இரவு பகலென தேடல் துவங்குது..
என் வீட்டிலும் என் சுற்றத்திலும்
வேறு ஊரிலிருக்கும் வீட்டுக்கா..?
வேறு வீடு தரும் வேறு நாட்டுக்கா ?
எங்கு போய் பிழைப்பது இனி என்று !
 

 

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் நினைவுகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

மலையிலும் என் மனதிலும் தீ !

மேற்குத் தொடர்ச்சி மலையிலமைந்திருக்கும் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்,நண்பர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமுற்ற அனைவரும் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவருடன் நானும் வாழ்த்துகிறேன் !

ஒவ்வொரு சாகச செயல் முடித்து திரும்பிய பின்பு தான் சொல்வதற்கு நானும் அந்த சாகசங்களும் இருக்கும் என்பதை மனதில் கொண்டே ஒவ்வொரு அசாதரண செயல்களில் பங்கெடுப்பதை நான் வழக்கமாக வைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு.. இதோ.. இந்த நிகழ்வு என்னுள் உடனே ஏற்படுத்திய தாக்கத்தின் சில நினைவலைகள் உங்களுடன்…

 

என் இரு(ற)ப்பை

உறுதி செய்ய

அழைப்பு வந்ததும் தான்

எனக்குத் தெரியும் !

நான் எப்போதும் வியந்த

என் கற்பனைக்கு ஊற்றாய்

ஊருக்கு மேற்கே உயர்ந்து நிற்கும்

அந்தக் மலையில்..

மீண்டும் காட்டுத் தீ என்பது..

 

ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது

உலகிலிருந்து விலகி இருப்பது போல்!

அந்த மலையில் பல நூறு முறைகள்

நானும் பார்த்துள்ளேன் காட்டுத் தீயை !

இன்னும் போல் என்றும் பரவியதில்லை

அந்தக் காட்டு தீ செய்தி.. காட்டுத் தீயாக !

 

அத்தீயைச் சுற்றி ஊரெல்லாம்

உலாவரும் பல கட்டுக் கதைகள் உண்டு!

சிறு சிறு தீப்பந்தங்களாய் காட்சியளித்த

தீச்சுவாலைத் தொடர்களை வைத்து

என் தந்தை சொன்ன கொல்லிப் பிசாசு

அதன் பயணக்கதைகள்

பீதியைக் கிளப்புது இப்போதும் !

 

இன்று இந்தத் தீ..

சிலரின் உயிரைப் எரித்துப் பறித்திருக்கு !

இன்னும் சிலரின் நிலை..

யாருக்கும் தெரியாமல் இருக்கு !

இதற்கு முன்பு தெரியாமலிருக்கு என்று

செய்தி சொல்லவும் நாதியின்றி

எரிந்து போன அவர்களைப் போலில்லை !

இந்தத் தெரியாத நிலை !

 

மேற்குத் தொடர்ச்சி மலையின்

அற்புத உயரம் என் கற்பனைக்கு ஊற்று !

காலையும் மாலையும்

அந்த மலையோடு கதிரவன் செய்யும்

வர்ண ஜாலங்கள்

கண் விட்டும் நெஞ்சம் விட்டும்

எப்போதும் நீங்கா அற்புதங்கள் !

 

அவற்றைத் தீட்டிட திறனின்றி..

வர்ணங்களின்றி வாய் திறந்து

வான் பார்த்து காலம் களித்திருந்த

அந்த நிமிடங்களை

உயிர்களை அது இருந்த உடல்களை

தனதாக்கிய காட்டுத் தீ..

களவாடிப் போகுமோ?

 

என் பெற்றோரின் கடந்த காலத்தை

கடந்து பழக.. பார்க்க..

தனி ஒருவனாய்..

இருபத்தொரு கிலோ மீட்டர் ஓட்டம்

அம்மலையில் ஓடி இரசித்த நிமிடங்களை..

இயற்கையோடு பழகப் போனவர்களை

இயற்கை எய்தச் செய்த

காட்டுத் தீ..

களவாடிப் போகுமோ?

 

அந்த மலை மூலம்..

ஒற்றைக் கேள்வியால்

மலையளவு மனதில் உயர்ந்து

நீண்ட நெடுங்காலம் உடன் பயணித்த

ஓர் உறவைத் தொலைத்தது போல்

காட்டுத் தீ களவாடிய உயிர்கள் தந்த

உள்ளத்து வலியைத் தொலைப்பேனோ ?

 

ஆம்.. எரியுது

காட்டுத் தீயும் !

என் உள்ளத் தீயும் !

கேள்விக்குப் பதில்களின்றி !

தீயோடு தீயாகிப் போனவர்களைப் போல்..

நானும் தீயோடு தீயாகிப் போவேனோ ?

நினைவுத் தீயோடு தீயாகிப் போவேனோ ?

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் நினைவுகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

The Time Is Now : International Women’s Day 2018

Theme for 2018 International Women’s day is  (please click the link below to know more about it

The Time is Now: Rural and urban activists transforming women’s lives

Even i wrote many words in Tamil let me share few words about it in English.. 2018030812.jpg