100 நாட்கள் 100 கவிதை காணொளிகள் பயணம் 100வது நாள் இன்று

அன்புடையீர்,

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும், 100 காணொளி கவிதைகள் பயணத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்து வந்தமைக்கு.  விரைவில் அடுத்த புது முயற்சியுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.  100 காணொளி கவிதைகளை கேட்டு மகிழ விரும்புபவர்கள் இங்கு பயணிக்கவும்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

https://www.youtube.com/channel/UCxkVX4DaaPqcNh5_g-DtHsA

 

அதுவரை அன்புடன் வாழ்த்துகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

“நிலவும் நீயும் நானும்” கவிதை தொகுப்பு முதல் பாகத்தை – ஓவியர் ரமாதேவி குமரேசன் அமேசானில் வெளியிட்டார்

அன்புடையீா்

அனைவருக்கும் வணக்கம்.

தமிழர் திருநாள் 14 – சனவரி – 2018 அன்று எனது பெற்றோரால் வெளியிடப்பட்ட “நிலவும் நீயும் நானும்” முதல் பாகம் வரும் 14 – பிப்ரவரி – 2018 முதல் அமேசானில், கிண்டில் இபுத்தகமாக உங்களுக்கு கிடைக்கும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.

நிலவும் நீயும் நானும் கவிதைகளுக்காக ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கும் ஓவியா் ரமா தேவி குமரேசன் அவா்கள் “நிலவும் நீயும் நானும்” முதல் பாகத்திற்கான முன் பதிவினை இன்று அமேசானில் துவங்கி வைத்து வெளியிட்டார் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

விரைவில் அவரது ஓவியங்களை உள்ளடக்கிய பதிப்பும் அமேசானில் வெளியிடப்படும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ “ நிலவு நீயும் நானும் “ புத்தகத்தினை முன்பதிவு செய்யவதற்கான புத்தகத்திற்கான எண் ASIN: B079JVF4DT

அல்லது வாங்கிட, பகிர்ந்திட , பார்க்க

 

இந்தியா தவிர மற்ற 12 ற்கும் மேற்பட்ட நாடுகளிலும் அமேசான் மூலமாக பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் இருக்கும் நாட்டிற்கான அமேசான்  வெப்சைட்டிற்கு செல்லவும் எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ளவர்கள்,

  1. amazon.in என்ற தளத்திற்கு செல்லவும்
  2. அங்குள்ள தேடுபொறியில் புத்தகத்தின் எண்ணை B079JVF4DT கொடுத்து தேடவும்
  3. அங்கு உங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள தகவல்கள் கிடைக்கும்
  4. 14 – பிப்ரவரி -18 அன்று உங்கள் கிண்டில் அக்கவுண்டில் புத்தகத்தை வாசிக்க இயலும்.

மேலும் தகவலுக்கு 94455 28556 ல் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

நிலவோடும் அவனோடும்

ஒரு கவிதையோ.. கதையோ.. அது கற்பனையோ, உண்மை நிகழ்வோ.. எதுவாகினும் அதை படைப்பவரும் பார்ப்பவரும் / வாசிப்பவரும் உணர்ந்து விட்டால், அந்நொடியில் அதன் பயணம் துவங்கி விடுகிறது.  அந்த உணர்வுகளுக்கு ஆயுட் காலம் இதுவென்று எவரும் நிர்ணயித்து விட முடியாது!

2017123001

 

நிலவும் அவளும் நானும்

நிலவோடு உங்களுக்கு இருக்கும் அனுபவங்களை பகிருங்கள்..

அந்நிகழ்வுகளை. “நிலவும் நீயும் நானும் கவிதை தொகுப்பு” முதல் அல்லது இரண்டாம் பாகத்தில் கவிதையாய் சோ்த்து விடலாம்.

உங்கள் நண்பர்கள், உறவினா் அனுபவங்களையும் பகிரலாம்.

புத்தகத்தில் வாசகா் அனுபவம் என உங்கள் பெயா் இடம் பெற விரும்பினால் பெயர் மற்றும் ஊா் பெயரையும் பகிரவும்.

அன்புடன்
கருவெளி ராச. மகேந்திரன்

நிலவும் நீயும் நானும் இபுத்தகம் 14 சனவரி 2018 லிருந்து கிடைக்கும்

2017111901

 

வாய்ப்புகள் – நாலு சொல்லில்

வாய்ப்புகள் எத்தனை முக்கியமானவை என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன்.   அதனை “நாலு சொல்லில்” உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க.. https://karuveli.wordpress.com/spoint/