புத்தாண்டு பரிசு 1 – நாலு சொல்லில் – ஒலிப்புத்தகம்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் இனிய கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும், நன்றிகளும்.

இதோ, எனது வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும்

ஒலிப்புத்தகங்களாக… (நாலு சொல்லில் ஒலிப்புத்தகம் – 150 கவிதைகளை உள்ளடக்கியது) . ஒலிப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய..

https://goo.gl/MbhAcM

 

கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

செயல்களை துவங்குவோம்..

அன்புடையீர்,
இது கவிதையல்ல…  அக்கவிதையை படைத்து விடத் துடிக்கும் இதயத்திலிருந்து பிறக்கும் ஒரு  அனுபவப் பகிர்வு !   இத்தனை நாட்களாய் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு எனது நன்றிகளோடு துவங்குகிறேன்.
நான் எழுதும் வார்த்தைக் கோர்வைகள் கவிதைகளாகவோ… புதுக்கவிதைகளாகவோ.. போற்றப்படாமல் போகலாம். ஏன் அங்கீகரிக்கப்படாமல் கூட போகலாம். ஆனால் அந்த வார்த்தைக் கோர்வைகளுக்குள் இந்த வையகத்தின் வாழ்க்கை இருக்கும், அங்கு பரவிக் கிடக்கும் உணர்வுகள், சொல்லப்படாத உண்மைகள், சொல்லிடத் துடிக்கும் நிகழ்வுகள் இருக்கும். அதற்குத் தானே கலை..
 
இதை இங்கே சொல்லக் காரணம், நல்லபடியாக செய்ய முடிந்தால் மட்டுமே தன் செயலைத் துவங்குவேன் என்று எதையுமே.. செய்யத் துவங்காமலே இருந்து விடாதீர்கள்.  உங்கள் செயல்களை துவங்குங்கள் அவை அத்தனையும் மாற்றியமைக்கும் சக்தி படைத்தவை.  அது பல சமயங்களில் நமக்கு புலப்படாமலும் போகலாம்.  இயலாது, முடியாது, சாத்தியமில்லை என உங்கள் மனது சொல்லும் போதெல்லாம், ஊரார் உரைக்கும் போதெல்லாம் உங்கள் செயல்களை துவங்குங்கள்.  அவை நிகழ்த்தும் மாயங்கள் சில நாட்களிலேயே உங்களுக்கு விளங்கி விடும்.
 
இதற்கு இந்த ஆண்டின் உதாரணங்கள் என் வாழ்விலிருந்து,
 
நான் எழுதி வெளியிட்ட #நாலு_சொல்லில் தொகுப்பு, வெறும் நாலு வார்த்தைகளை வைத்துக் கொண்டு விசயத்தை சொல்ல வேண்டும். எப்படி? எப்படி? எப்படி? கடினம் தான். ஆனால், அதைப் படித்தவர்கள் “நாலு சொல்லில்” படைத்தார்கள். அதைத் தவிர வேறு என்னதான் வேண்டும்?. இதோ, சனவரி 1ல் ஒலி-ஒளிப் புத்தகமாகவும் பிறப்பெடுக்கிறது..
20171224_NewYearReleaseInvite
 
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நிலவும் நீயும் நானும். ஒற்றை நிலவை வைத்துக் கொண்டு உலகத்தில் இதுவரை கவிஞர்கள் சொல்லாததை எதைத்தான் சொல்லிவிட முடியும். முதலில் நினைக்கையில் அவ்வாறு தான் தோன்றியது, ஆனால், இக்கணம் நிலவு நீயும் நானும், முந்நூறு பக்கங்களை கடந்து நிற்கிறது. இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு திட்டமிட்டுள்ள 12 புத்தகங்களில் குறைந்தது மூன்று இடமாவது தனக்கு வேண்டுமென அடம்பிடித்து நிற்கிறது.
நிலவும் நீயும் நானும் வெளியீடு குறித்த காணொளி : https://youtu.be/_0lWiIaOBAU
NiNeNa_Cover1
 
மார்ச்சில் வெளியிட திட்டமிட்டுள்ள, “கண்களை மூடிப் பார்” ஒரு பெரும் பயணத்தின் ஆரம்பம். என்னைப் போன்றோர் அப்பயணத்தைப் பற்றி பெரிதாய் ஏதும் சொல்லி விட இயலாது தான் இருந்தும் எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அச்சம் தவிர்

கண்களை மூடிப் பார்

துவங்கும் வரை தான், துவங்கி விட்டால்..  என்ன நிகழுமென நீங்களே காண்பீர்கள்.  2018ல் உங்களது செயல்களின் மாயஜாலங்களை கேட்டு மகிழ்ந்திட காத்திருக்கிறேன்.
2018_Ebooks_Intro_TN2
அன்போடு
கருவெளி ராச.மகேந்திரன்

2018 – புத்தாண்டு சிறப்பு ஒலி ஒளி புத்தகங்கள் வெளியீடு – வாசகர்கள் வெளியிடுகிறார்கள்

அன்புடையீர்,

வணக்கமும், வாழ்த்துகளும் மற்றும் நன்றிகளும்.

வரும் 1-சனவரி-18 அன்று, வாசகர்களாக இருந்து பேராதரவும் ஊக்குவிப்பும் தரும் உங்கள் கரங்களால் பின்வரும் மூன்று விசயங்களையும் வெளியிட உங்களை அன்போடு அழைக்கிறேன்.

  1. நாலு சொல்லில் – ஒலிப் புத்தகம் – முதல் பாகம் – வெளியீடு (150 கவிதைகள், நாலு சொல்லில் பற்றிய அறிமுகம், மற்றும் ஆசிரியர் முன்னுரை ஆகியவை உள்ளடக்கியது).  – ஏறக்குறைய 200 MB அளவுடையது
  2. நாலு சொல்லில் – 100 காணொளிகள் – தொடர் – வெளியீடு (நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன, உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்கள் சொல்லுங்கள், அந்த காணொளிக்கான யூ-டியூப் முகவரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும். அதனை நீங்கள் வெளியிடலாம்)
  3. “ஊமைகளின் குரல்”The Voice Of Voicelessயூ-டியூப் சேனல் அறிமுகம் (பொது மக்களின் குரலுக்கான யூ-டியூப் சானல், இதில் CM2CM மற்றும் PM2PM, என்ற இரண்டு முக்கிய கருத்தியலில், பொது மக்கள் மக்களாட்சியில் பங்கேற்க உதவும் வகையில் தகவல்களை வெளியித் திட்டமிடப்பட்டுள்ளது)

நேரம் – 5 முதல் 6 மணி வரை

இடம் – பால விநாயகர் நகர், அரும்பாக்கம் (எம்.எம்.டி.ஏ பேருந்து நிலையம் அருகில்) எனது இல்லத்தில்

தொடர்புக்கு – 94455 28556

நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாத அன்பர்கள், தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே வெளியிட / பகிர்ந்து கொள்ள என்னை அழைக்கவும்.

முகநூலில் பகிர்ந்து கொள்ள…

https://www.facebook.com/events/234568290416468/

நாலு சொல்லில் புத்தகத்தில் உள்ள தலைப்புகள் பற்றி அறிந்திட, நீங்கள் வெளியிட விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுக்க..

20171224_2018NewYear_Publishing_Invitation

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

21-சனவரி-17

துடித்திருக்கிறேன்!

ஏன் பெண்கள் பார்வையிலேயே பல கவிதைகள் இருக்கிறதென்று? அன்பு தம்பி ஒருவர் இன்று காலையில் கேட்டிருந்தார்.  அவருக்குப் பதில் சொல்லி விட்டேன்.  அப்பதிலுக்காக அவர் பாராட்டுதலும் வழங்கி விட்டார்.  இதோ.. அவருக்கு சொன்ன வரிகளும்..  அவருக்காக.. ஆணின் பார்வையில், அவளை இழந்து துடிக்கும் அவனின் உள்ளத்தின் வரிகளும் உங்களுக்காக..

பெண்கள் பார்வையில் எழுதப்படும் வரிகள் அனைத்தும் உலகமெங்கும் வாழும் எனது சகோதரிகளுக்குச் சமர்ப்பணம்.  பெண்கள் தங்கள் உள்ளங்களை சொல்வதில்லை.. உண்மையில் அவர்களின் உள்ளத்தை சொல்ல நாம் விடுவதே இல்லை.   – இது அவருக்குச் சொன்ன வரிகள்..

இதோ.. அவருக்காக வரிகள்..

2017112305

PC: Google Images Thanks To: Pixlr

 

இந்நிகழ்வை.. கவிதையாக்க நினைத்தேன்.. சொல்லப்படா உள்ளத்து உணர்வுகளுடன்..  அதுவும் இங்கே.. விரைவில்..

கைபேசி (நாலு சொல்லில்)

வீடியோ

கைபேசிகள் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகிவிட்ட நிலையில், கைபேசிகள் பற்றி “நாலு சொல்லில்” சொல்லாமல் போய்விட இயலுமோ? இதோ உங்களுக்காக சில

நாலு சொல்லில் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து வெளிவரவிருக்கும் படைப்புகள் பற்றி அறிய, நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க..

https://karuveli.wordpress.com/spoint/