செயல்களை துவங்குவோம்..

அன்புடையீர்,
இது கவிதையல்ல…  அக்கவிதையை படைத்து விடத் துடிக்கும் இதயத்திலிருந்து பிறக்கும் ஒரு  அனுபவப் பகிர்வு !   இத்தனை நாட்களாய் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு எனது நன்றிகளோடு துவங்குகிறேன்.
நான் எழுதும் வார்த்தைக் கோர்வைகள் கவிதைகளாகவோ… புதுக்கவிதைகளாகவோ.. போற்றப்படாமல் போகலாம். ஏன் அங்கீகரிக்கப்படாமல் கூட போகலாம். ஆனால் அந்த வார்த்தைக் கோர்வைகளுக்குள் இந்த வையகத்தின் வாழ்க்கை இருக்கும், அங்கு பரவிக் கிடக்கும் உணர்வுகள், சொல்லப்படாத உண்மைகள், சொல்லிடத் துடிக்கும் நிகழ்வுகள் இருக்கும். அதற்குத் தானே கலை..
 
இதை இங்கே சொல்லக் காரணம், நல்லபடியாக செய்ய முடிந்தால் மட்டுமே தன் செயலைத் துவங்குவேன் என்று எதையுமே.. செய்யத் துவங்காமலே இருந்து விடாதீர்கள்.  உங்கள் செயல்களை துவங்குங்கள் அவை அத்தனையும் மாற்றியமைக்கும் சக்தி படைத்தவை.  அது பல சமயங்களில் நமக்கு புலப்படாமலும் போகலாம்.  இயலாது, முடியாது, சாத்தியமில்லை என உங்கள் மனது சொல்லும் போதெல்லாம், ஊரார் உரைக்கும் போதெல்லாம் உங்கள் செயல்களை துவங்குங்கள்.  அவை நிகழ்த்தும் மாயங்கள் சில நாட்களிலேயே உங்களுக்கு விளங்கி விடும்.
 
இதற்கு இந்த ஆண்டின் உதாரணங்கள் என் வாழ்விலிருந்து,
 
நான் எழுதி வெளியிட்ட #நாலு_சொல்லில் தொகுப்பு, வெறும் நாலு வார்த்தைகளை வைத்துக் கொண்டு விசயத்தை சொல்ல வேண்டும். எப்படி? எப்படி? எப்படி? கடினம் தான். ஆனால், அதைப் படித்தவர்கள் “நாலு சொல்லில்” படைத்தார்கள். அதைத் தவிர வேறு என்னதான் வேண்டும்?. இதோ, சனவரி 1ல் ஒலி-ஒளிப் புத்தகமாகவும் பிறப்பெடுக்கிறது..
20171224_NewYearReleaseInvite
 
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நிலவும் நீயும் நானும். ஒற்றை நிலவை வைத்துக் கொண்டு உலகத்தில் இதுவரை கவிஞர்கள் சொல்லாததை எதைத்தான் சொல்லிவிட முடியும். முதலில் நினைக்கையில் அவ்வாறு தான் தோன்றியது, ஆனால், இக்கணம் நிலவு நீயும் நானும், முந்நூறு பக்கங்களை கடந்து நிற்கிறது. இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு திட்டமிட்டுள்ள 12 புத்தகங்களில் குறைந்தது மூன்று இடமாவது தனக்கு வேண்டுமென அடம்பிடித்து நிற்கிறது.
நிலவும் நீயும் நானும் வெளியீடு குறித்த காணொளி : https://youtu.be/_0lWiIaOBAU
NiNeNa_Cover1
 
மார்ச்சில் வெளியிட திட்டமிட்டுள்ள, “கண்களை மூடிப் பார்” ஒரு பெரும் பயணத்தின் ஆரம்பம். என்னைப் போன்றோர் அப்பயணத்தைப் பற்றி பெரிதாய் ஏதும் சொல்லி விட இயலாது தான் இருந்தும் எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அச்சம் தவிர்
கண்களை மூடிப் பார்
துவங்கும் வரை தான், துவங்கி விட்டால்..  என்ன நிகழுமென நீங்களே காண்பீர்கள்.  2018ல் உங்களது செயல்களின் மாயஜாலங்களை கேட்டு மகிழ்ந்திட காத்திருக்கிறேன்.
2018_Ebooks_Intro_TN2
அன்போடு
கருவெளி ராச.மகேந்திரன்
Advertisements

வாய்ப்புகள் – நாலு சொல்லில்

வாய்ப்புகள் எத்தனை முக்கியமானவை என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன்.   அதனை “நாலு சொல்லில்” உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க.. https://karuveli.wordpress.com/spoint/

இலவசமாக நாலு சொல்லில் இபுத்தகம் கிண்டிலில்

அன்புடையீர் வணக்கம்,

நாலு சொல்லில் இபுத்தகத்திற்கு நீங்கள் வழங்கி வரும் பேராதவிற்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.   அந்நன்றியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக வரும் 17, 18 மற்றும் 19 அக்டோபர் ஆகிய மூன்று தினங்கள், நாலு சொல்லில் புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இம்மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் பெரும் மகிழ்ச்சி.  கீழ்காணும் இணைப்புகளில் இபுத்தகங்களை விலையின்றி நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4Sollil_3Days_FreeOffer_On

Links to Amazon – Kindle version books,  now available at all Amazon market places, below is the link to Amazon India.

முதல் பாகம்  (Naalu Sollil Part 1)

https://www.amazon.in/dp/B074DZ5289/

இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2)

https://www.amazon.in/dp/B074DZYFKN/

17 – 10 – 2017 – முதல் பாகம் மட்டும்

18 – 10 -2017 – முதல் மற்றும் இரண்டாம் பாகம்

19 -10 – 2017 – இரண்டாம் பாகம் மட்டும்

உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

அதற்கு முன்பாக நாலு சொல்லில் புத்தகம் பற்றி அறிய விரும்பினால், நாலு சொல்லில் முகநூல் பக்கத்தில் மேலும் தகவல்களை பெற்றிடுங்கள்

https://www.facebook.com/4Sollil/

Kindle Reading App for Android, Mac, Windows can be downloaded from below link

Free Kindle Reading Apps – Amazon.in

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்.

 

நாலு சொல்லில் படைப்பு பற்றி ஆசிரியர்

நாலு சொல்லில் பற்றி சொல்ல எத்தனையோ விசயங்கள் இருந்தாலும் இந்த உரையில் கூறியுள்ள ஐந்து முக்கிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது கடமையாக கருதுகிறேன்.  வாய்ப்பு கிடைக்கும் போது கேளுங்கள். உங்கள் உறவுகளுடனும் நட்புகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

கேட்டு மகிழ

 

நீயே படிப்பாய்

நமது இதயத் துடிப்புகளை இணைக்கும் வார்த்தைக் கோர்வைகளை சுமந்து வரும் புத்தகங்களுக்கும், இபுத்தகங்களுக்கும் சமர்ப்பணம்.

2017100402