மோடி வித்தைகள் – காணொளி

வீடியோ

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மோடி வித்தைகள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால் இன்றைய தலைமுறைக்கும் அது குறித்து சொல்லி வையுங்கள் மிகவும் உதவும்.

 

Advertisements

நாம் தேடும்.. [ வாசகர் விருப்பம்]

வாசகர் விருப்பப் பகுதிக்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளே வாசகர்களிடம் இருந்து வந்து சேர்ந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.

இம்முறை எனக்கும் அது தான் நிகழ்ந்தது..

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : ஜீவி, சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : வாழ்வு

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

வாழ்வின் தத்துவத்தை அவரவர் வழிகளில் வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  கற்பதற்கு நாம் தான் தயாராக கால தாமதமாகிவிடுகிறது.  அதற்குள் வாழ்வும் முடிந்து விடுகிறது!  வாழ்வு குறித்து நான் என்ன புதிதாக சொல்லி விட இயலும். சொல்ல முயன்று கொண்டே இருக்கிறேன்… இதோ.. முயன்ற சில வார்த்தைக் கோர்வைகள் உங்களுக்காக…

2017091905

ஓய்வெடுக்கட்டும் உந்தன் காதலி

ஓய்வில்லா காலமே

சிறிது நேரம் ஓய்வெடு

ஓய்வில்லா தேடலில் இருக்கும்

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

காலையில் எழுந்ததும்

அவள் உன் வேகத்தோடு

தன்னை இணைத்துக் கொள்வாள்!

அதுவரை நீயும் ஓய்வெடு!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

எந்த நாளும் நான் கேட்டதில்லை

இந்த நாளில் கேட்கிறேன்..

அவள் மறுபடியும் மண்ணுக்கு

கருவறை செல்லாமல் பிறந்து வருவாள்!

ஆகையால்..

அதுவரை நீயும் ஓய்வெடு!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

அவள் யாரென்று கேட்காதே

அவளை நீ அறிவாய்..

உன்னை அவள் அறிவாள்!

இடையில் நான் என்ன சொல்ல?

அவள் உந்தன் காதலி!

காலமே.. அதை அறியாதவனாய்

என்னிடம் கேட்காதே!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

அதுவரை நீயும் ஓய்வெடு!

இதுவும் வாழ்வோ?

யார் கண்ணில் நாம் கண்ணீரைக் காண விரும்பவதில்லையோ… அவர்களை நாமே அழச் செய்வதுமுண்டு. அது ஒரு கொடுமையான சூழல் என்றால், இது போதாதென்று அவர்களை காலமும் விரட்டி விரட்டி கண்ணீர் சிந்த வைக்கும். இது அவர்களுக்கான சோதனையோ… இல்லை நமக்கானதோ.. நாம் அறிவதற்குள்ளேயே நம் வாழ்வு முடிந்து போயிருக்கும்.   இவை எல்லாவற்றையும் கொடுமையான நிலை ஒன்று உண்டு அது… நாம் வருந்தக் கூடாதென்பதற்காக தன் கண்ணீரை மறைத்து நம்மிடம் புன்னகித்து நடித்து செல்லும் அவர்களின் நிலை.  இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காக நடிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமென்று அவர்களுக்கும் தெரியும்.  இது எத்தனை ஆச்சர்யமான வாழ்க்கை சூழல்…  அது குறித்து கேள்வியை முன் வைக்கும் ஒரு வார்த்தைக் கோர்வை..

அத்தனையும் மனதின் அருமையான விளையாட்டு… விளையாடுங்கள்..

இதுவும் வாழ்வோ? - கருவெளி

3.கற்பது தமிழ் – மாத்திரை

அன்புடையீர் வணக்கம்..

தமிழில் உள்ள எழுத்துக்கள் பற்றி போன பகுதியில் பார்த்தோம்… அதன் தொடர்ச்சியாக… எழுத்ததிகாரத்தில், எழுத்துகள் ஒலித்திட வேண்டிய ஓசை / கால அளவை குறிப்பிடும் மாத்திரை பற்றி கற்றுக் கொள்ளுங்கள்..

அவற்றுள்
`அ, இ, உ, எ, ஒ’ என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து‘ என்ப.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து‘ என்ப

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே

நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய
கூட்டி `எழூஉதல்’ என்மனார் புலவர்

கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை-
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே

இதற்கான உரைகளை வாசித்தறிய விரும்பும் அன்பர்கள்  இங்கே சொடுக்கவும்..

ஒரு களவாணியின் கடைசி வாக்குறுதி

நம் வாழ்வில் பல சமயங்களில், சிலரிடம் மன்னிப்பு கேட்க வழியில்லாமல், வாய்ப்புகளில்லாமல், இருந்தாலும் தவறவிட்டு விட்டு வந்து விடுவோம். அந்த மன்னிக்கப்படாத நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடே பயணிக்கும், ஆகையால் வாய்ப்பு கிடைக்கையில் கேட்டு விடுங்கள் உங்கள் மனக்கிடக்கையை… நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் போவதும் அவர்கள் கையில்.

என் வாழ்நாள் முழுவதும் (இதுவரை) தன் நேரத்தை களவுகொடுத்து விட்டு இந்த உலகில் எதோ ஒரு மூலையில் தன் வாழ்நாளை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஜீவனுக்காக இந்த வாக்குறுதியை மன்னிப்பு கோரிக்கையாய் வைக்கிறேன் நன்றிகளுடன்.   அந்த ஜீவனிடம் சென்று சேருமா என்பது விடையில்லா வினாவாக இருந்தாலும்,  என் செயல்கள் செய்தியை சேர்த்திருக்குமென்ற நம்பிக்கையுடன்.

karuveli2017030501

karuveli2017030502

சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியாய்

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்

கதை கேளு!

கதை கேளு! கதை கேளு!

தம்பி இந்தக் கதை கேளு!

காலம் காலமாய்

தன்னிலையறியா மக்கள்

செய்த மடைமைகள்

மண்ணை ஆட்டுவிக்கும்

மாபெரும் நஞ்சாய்

மாநிலமெங்கும் பரவுது!

 

விதைத்தது அறுவடையாகி

வீட்டுக்கே வந்ததோடு நில்லாமல்

உணவென்று ஊரை ஏமாற்றி

உணவுக் குழலில் நுழையுது

பாவம் விதைத்தது நஞ்சென்றறிந்தும்

வெளித்தள்ள வழியின்றி

மந்தை மக்கள் நஞ்சுக்குள் மடிகிறார்கள்!

 

கதை கேளு! கதை கேளு!

தம்பி இந்தக் கதை கேளு!

காலம் காலமாய்

தன்னிலையறியா மக்கள்

செய்த மடைமைகள்

மண்ணும் ஏற்கா சடலமாக்குது அவரை!

பாவப்பட்டு கண்ணீர் சிந்தவும்

கடைசி கடன் செய்யவும்

யாருமற்ற அநாதை பிணங்களாய்!

அவர் கிடக்கிறார் இந்த மாநிலமெங்கும்!

 

 

(இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு கிட்டிய செய்தி…  என்னவென்று நான் சொல்ல விரும்பவில்லை,  ஆனால் இந்த நேரம் இந்த நாள் தமிழர்கள் எல்லோருக்குமே முக்கியமான நேரம், மத்தியிலிருக்கும் அந்த ஆட்சியாளர்களுக்கும் தான்)

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்

 

அந்த மூச்சுக் காற்று

பிறப்பின் போது… பிறப்பு விவாதிக்கப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  ஒவ்வொரு இறப்பின் போதும் மற்றொரு எதிர்பார்க்கப்படும் இறப்பு குறித்து விவாதிப்பதையும் கேட்டிருப்பீர்கள்.  சமீபத்தில் கிடைத்த அத்தகைய அனுபவத்திலிருந்து..

karuveli2017011001

அந்த மூச்சுக் காற்று – கருவெளி ராச.மகேந்திரன்

அத்தகைய ஒரு நிகழ்விலிருந்து காணொளி ஒன்று உங்களுக்காக…

இறந்தவரின் எண்ணப் பிரதிபலிப்பானாக மாட்டுச் சாணமும் நவதானியமும்

 

வீதியிலே

வரும் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் பூமி எவ்வாறிருக்கும்? இந்த வினா உறங்க விடுவதில்லை…  அச்சந்ததியின் அனுபவம் எப்படி இருக்கும்..  இது கற்பனையென்று நீங்கள் நம்பினால்..  உங்கள் நம்பிக்கைகளை பரிசீலனை செய்யுங்கள்..

 

என் இல்லமென்று

எடுத்து வைத்தேன் முதல் அடி!

எடுத்து வைத்த முதல் அடி

முடியுமுன்னே..

பிடறியில் அடிபட

வந்த வாசல் தாண்டி

வீழ்ந்து கிடக்கிறேன்!

வீதி தான் என் வீடு!

அண்டவெளியே என் வீதி!

karuveli2017010701

 

 

கால முடிச்சுகள்

கால முடிச்சுகள்

கால முடிச்சுகள்

கடந்த காலத்தோடு

நிகழ் காலத்தை

முடிச்சுகளிட்டாய்!

நிகழ் காலத்தை

வருங்காலத்தோடு

முடிச்சுகளிட்டாய்!

முக்காலத்தையும்

நீ படைக்கும் காலத்தோடு

கச்சிதமாய் கட்டிப் போட்டாய்!

காலத்தின் காதலிக்கு

காலத்தைப் பற்றி

யாரெடுக்க வேண்டும் பாடம்?!

 

—கருவெளி ராச.மகேந்திரன்

நன்றி –   Pixlr, பயண அனுபவங்கள்