நாடு – நாலு சொல்லில் கேட்டு மகிழுங்கள்

வீடியோ

 

யாவருக்கும் வாய்க்குமோ?

அத்தனையும் நாலு சொல்லில் சொல்ல முயற்சிப்பது பெரும் உந்துதலைத் தருகிறது..   ஆனாலும்… பயணம் அதையும் தாண்டி இருக்கத்தான் செய்கிறது..

மீண்டிட விரும்பா… பயணம் பற்றி …

2017060202

உன் தாய் மொழி என்ன?

இது கவிதையல்ல… இது நிகழ்வு, இது எங்கள் வாழ்க்கை, இது எங்கள் உரிமை… அடக்குமுறைகளுக்கு அடங்கா தாகம் கொண்டவர்கள் தொடர்ந்து பருகலாம்…..

 

உன் தாய்மொழி என்ன?

 

வகுப்புகள் முடிந்து

வெளியில் வந்தோம் அனைவரும்!

வகுப்புகள் என்றதும்

பள்ளி வகுப்புகள் என்றெண்ணிடாதீர்!

பள்ளியைக் கடந்த வகுப்புகள்!

அவரவர் விருப்பப்படி பிரிந்தோம்!

அதிலும் பல குழுக்கள்!

 

எங்கள் குழுவில் ஐவர்..

இது அந்த ஐவர் குழுவல்ல..

ஆந்திரா உணவகத்தை நோக்கி

மதிய உணவுக்கு படையெடுக்கும்

அப்பாவி ஐவர் குழு.. அவ்வளவே!

குறிப்பெடுக்க.. அப்பாவி எனும் சொல்

அர்த்தமற்றது பல நேரங்களில்!

அது இந்த ஐவர் குழுவுக்கும் பொருந்தும்!

 

சொல்ல மறந்து விட்டேன்

ஆந்திரா உணவகமிருப்பது.. தமிழகத்தில்..

இப்போதைக்குத் தவிர்த்திடுவீரே!

அவர்கள் ஆந்திராவா?  இல்லை

தெலுங்கானாவா? என்ற கேள்விகளை

 

முதலில் அந்த உணவகத்தை

அறிமுகம் செய்தவர்..

ஊருக்கே உணவளித்த..

தஞ்சை மண்ணின் மைந்தன்..

தஞ்சையின் தற்போதைய நிலை

என்னிடம் கேட்பீரோ?

அதை தரிசாக்க தரம் கெட்ட

அரசியல்வாதிகளின் கூத்தை

நித்தம் நீரே அறிவீரே!

 

அரசியல் பேசும் தகுதியில்லை

தமிழகத்தில் பிறந்த எனக்கு!

ஏன் என்ற கேள்விக்கு பதில்..

கடந்த அறுபதாண்டு வரலாறு

ஒற்றைச் சாட்சியாய்!

அது கிடக்கட்டும் விடுங்கள்!

 

அறிமுகம் செய்தவரின் அனுபவங்கள்

அனுபவித்து இரசிக்கக் கூடியவை!

ஆனால் அந்த அனுபவமல்ல

நான் சொல்ல வருவது..

 

இருக்கைகளின் வசதிக்கேற்ப

மூன்று, இரண்டாய் பிரிந்தது

உணவுக்காக வந்த ஐவர் குழு!

இருக்கைகளின் ஆதிக்கம்

அகிலமெல்லாம் ஆட்டிப் படைக்கிறது!

அதில் அனைவருக்கும் சொல்ல

ஆயிரம் கதையிருக்கு..

 

அந்த இருக்கைகள் அறிந்த அளவு

நாம் யாரும் அறியோம்..

அந்த இருக்கைகளின் வரலாற்றை!

ராஜாவாயிருந்தாலும் ராஜமெளலியால்

எழுதி முடித்து விடமுடியாது!

மகிழ்மதியின் சிம்மாசனம்

மகேந்திர பாகுபலிக்கே நிரந்தரமென!

 

ஆந்திரா உணவகத்தின் தாக்கமென்றோ

பாகுபலியின் தாக்கமென்றோ

கருத வேண்டாம்…

இது இருக்கைகளின் தாக்கம்!

வீண் விவாதங்கள் வேண்டாம்..

நிகழ்வுக்கு வருவோம்..

 

உணவகத்தின் முதலாளிக்கு

சிறு வருத்தம் தான்

தனியே கறி வேண்டுமா? – என்ற

கேள்வியை காதிலும், அதோடு

ஏதும் வாங்காததால்!

 

அவர் ஆசை நிறைவேற்ற

இன்னொரு மூவர் குழு வந்து சேர்ந்தது!

மீனும் முட்டைகளும்

கேட்டு வாங்கினார்கள் அவர்கள்!

 

இது தான் தருணம்..

வந்தேறிகளில் (மூவர் குழுவில்) ஒருவர்

ஹிந்தியில் துவங்கினார் பேச்சை!

முதலில் பிரிந்த ஐவர் குழுவில் ஒருவருடன்!

அங்கு தான் நானும் அமர்ந்திருந்தேன்!

அமர்ந்து மட்டும் இருந்திருக்க வேண்டும்!

 

அரைகுறையாய் தெரிந்திருந்த ஹிந்தியால்

அவர்கள் சொன்ன நகைச்சுவைக்கு

நானும் சிரித்து விட்டேன்!

அதன் பின்னே.. அங்கே

வெப்பம் அதிகரித்து விட்டது!

மதிய உணவு சூடாயிருந்ததென்னவோ

உண்மையிலும் உண்மை தான்!

ஆந்திரா உணவு காரமென்பதும்

சத்தியத்திலும் சத்தியம் தான்!

ஆனால் அவை மட்டுமல்ல காரணம்!

 

உனக்கெப்படித் தெரியும் ஹிந்தி?

இருவரும் ஒற்றைக் குரலில்..

உங்க ஊருல..

பிழைப்புக்காக வந்த போது

கற்றதென்றேன்!

முடித்து மூச்சு விடுவதற்குள்!

ஏன் தேசிய மொழியை

எப்போதும் எதிர்க்கிறீர்கள்?

என்னிடமிருந்த கேள்வி..

மாநிலத்திற்கே தாவி விட்டது..

பெரிய பாய்ச்சல்!

 

மீண்டும் மீண்டும் கேட்டேன்..

இந்தியை எதிர்க்கிறோமா?

இந்தி திணிப்பை எதிர்க்கிறோமா?

அட, இந்தக் கேள்வி அவர்களுக்கில்லை..

எனக்கு நானே கேட்டுக் கொண்டது.

அவர்களுக்கு வேறு கேள்வி இருந்தது என்னிடம்!

 

அது,

உன் தாய்மொழி என்ன?

ஒருவர் தடுமாறிப் போனார்!

இன்னொருவர் கொஞ்சம் கோபத்துடன்

ஹிந்தி என்றார்..

நிதானித்து சொன்னார்.. தடுமாறியவர்

ஹிந்தி தான் என் தாய்மொழி என்று!

 

என்னை இன்னும் யோசிக்கச் செய்தன

அவர்களின் பதில்கள்!

அதற்குள் தயாரானது எனக்குள்

இன்னொரு கேள்வி..

வரக்கூடும் கோபம் யாவருக்கும்

கேள்விகளால்.. – அதுவறிந்தே

இக்கேள்வியே இறுதியான

கேள்வியென உள்ளத்தில் சொல்லி..

அவர்களிடம் கேட்டேன்!

 

கேள்வி என்னவென்று தானே

கேட்கிறீர்கள்?

உங்க அம்மாவும் உங்க பாட்டியும்

என்ன மொழி பேசுவாங்க?

இந்தக் கேள்விக்கான பதில்..

எனக்குச் சாதகமாய்..

பிறகென்ன..

நாம் ஏன் எதிர்க்கிறோம்?

“இந்தி திணிப்பை” – அதை

தனியே விளக்க அவசியமின்றி போனது!

 

ஆனால்..

அவர்கள் கேட்கத் துவங்கினார்கள்.

இந்தி தான் தாய்மொழினு

நம்பி இருக்கிறோம்!

எங்களுடைய பள்ளி நாட்களிலிருந்தே

ஏன்?  எப்படி?

 

அட,

எங்கள் தாயின் பாட்டிகளின்

மொழி இல்லை..

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக,

வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள்

அத்தனையிலும்..

தாய் மொழியை நிரப்பவோ..

தேர்வு செய்யவோ சொல்லப்பட்ட

அத்தனை இடங்களிலும்!

ஏன்?

 

அவர்கள்

கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..

கேள்விகளை..

நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்..

சுதந்திர வேட்கையின் குரலை..

விழித்துக் கொண்டது..

வினா.. அவர்களுக்குள்..

 

உணவால் வயிற்றை நிறைத்து

உணர்வுகளால் உள்ளம் நிறைத்து

குழுக்களாக.. பிறகு

தன்னந்தனியாக நடந்தோம்!

சுதந்திரத்தின் வேட்கை உடன் தொடர்ந்திட!

 

உலகத்தின் ஓர் மொழி

அன்படா..

அதற்கு வேறு மொழி

வேண்டாமடா..

இதில் திணித்தாலும் எம்மொழியும்

நிலைக்குமோடா?

 

இம்மண்ணின்

தாய்மார்களின் பாட்டிமார்களின்

தந்தைமார்களின் பாட்டனார்களின்

மூதாதையார்களின்.. மூதாட்டிகளின்..

“யாதும் ஊரே! யாவரும் கேளீரென்ற..

அவர் சுவாசம் மூச்சுக் காற்றில் பரவ..

ஒவ்வொரு அடியாய் முன்னெடுத்தேன்!

ஆதிக்கம் தலை தூக்கும்

அவ்விடத்தை நோக்கியே பயணிக்கும்

அக்னி குஞ்சொன்றை சுமந்தபடி!

அன்புடன்

கருவெளி

இதுவும் வாழ்வோ?

யார் கண்ணில் நாம் கண்ணீரைக் காண விரும்பவதில்லையோ… அவர்களை நாமே அழச் செய்வதுமுண்டு. அது ஒரு கொடுமையான சூழல் என்றால், இது போதாதென்று அவர்களை காலமும் விரட்டி விரட்டி கண்ணீர் சிந்த வைக்கும். இது அவர்களுக்கான சோதனையோ… இல்லை நமக்கானதோ.. நாம் அறிவதற்குள்ளேயே நம் வாழ்வு முடிந்து போயிருக்கும்.   இவை எல்லாவற்றையும் கொடுமையான நிலை ஒன்று உண்டு அது… நாம் வருந்தக் கூடாதென்பதற்காக தன் கண்ணீரை மறைத்து நம்மிடம் புன்னகித்து நடித்து செல்லும் அவர்களின் நிலை.  இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காக நடிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமென்று அவர்களுக்கும் தெரியும்.  இது எத்தனை ஆச்சர்யமான வாழ்க்கை சூழல்…  அது குறித்து கேள்வியை முன் வைக்கும் ஒரு வார்த்தைக் கோர்வை..

அத்தனையும் மனதின் அருமையான விளையாட்டு… விளையாடுங்கள்..

இதுவும் வாழ்வோ? - கருவெளி

எப்போது வருவாய் நீ?

அவன் வருவானோ?  அவள் காத்திருக்கிறாள்..

201705051001

அவனோடு ஒரு பயணம் – கருவெளி ராச.மகேந்திரன்

உழைக்கும் தினமாய் இருக்கட்டும்

தினக் கூலிகளின் வாழ்க்கையை அனுபவித்து வளர்ந்து வந்தவன் என்பதால், தானாய் என் மனம் இத்தகைய சிந்தனைக்குள் விழுந்து விடுவது இயல்பானதே என்றே கருதுகிறேன்.  இன்றைய சூழலில் இத்தகைய மனோபாவம் இருக்கும் என்பதனை பலரும் நம்ப மறுக்கக் கூடும். ஆனாலும் ஒரு வேண்டுகோளுடனே நிறைவு செய்கிறேன்… உழைப்பவர் தின விடுமுறைக்கு…

உழைக்கும் தினமாய் இருக்கட்டும்… உழைப்பவர் தினமும்.. தினக் கூலிகளுக்காக..

2017050104

மே தினம் – கருவெளி ராச.மகேந்திரன்

 

2017050105

நான் யார்?

எப்போதும் இடைவிடாது விடை தேடும் ஒரு கேள்வி உண்டென்றால்… அது, நான் யார்? என்பதே.  நம்மில் பலருக்கும் இந்தக் கேள்வி தேன்றியிருக்கும் இருந்தும் நம்மில் பலர் அதற்கான பதில் பற்றி கவலைபடாமலோ, அவசியமில்லையென்றோ, அதை விட மிக முக்கிய வேலை இருப்பதாக நம்மை நாமே சமாதானப்படுத்தியோ கடந்து சென்று விடுகிறோம்.  இருந்தாலும் அந்தக் கேள்வி இடைவிடாது நம்மை தொடர்கிறது.   நாமே நம்மிடம் கேட்க மறுத்தாலும் பலரும் நமக்கு அதை நினைவுபடுத்தி போகின்றனர்.

நான் யாராக இருக்க முடியும்?

நான் - கருவெளி ராச.மகேந்திரன்

தாமிரபரணி (நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து)

சில தீர்ப்புகள் நம் செவிகளை வந்தடையாமல் இருந்தால் நீதித்துறையின் மீதும் நீதியின் மீதும் இருக்கும் நம்பிக்கை இன்னும் கொஞ்சம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.  ஆனால் பெரும்பாலான சமயங்களில் அது நிகழ்வதில்லை.  தாமிரபரணியில் நீரெடுப்பது குறித்தான தீர்ப்பும் அந்த வகையில் ஒன்று..

“சட்டத்திற்கு சாட்சிகள் வேண்டும்… ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்… ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. ”  எனக்குத் தெரிந்த சட்டம் அவ்வளவுதான்…

நாம் எதில் தோற்று நிற்கிறோம்…  என்பதனை… காலம் காட்டிக் கொடுத்து விடும் விரைவில்..

தாமிரபரணி - நாலு சொல்லில்

நாலு சொல்லில்

நாலு சொல்லில் என்ன சொல்லி விட முடியுமென நினைத்து அச்சப்பட்டேன் ஆரம்பித்த அந்த நிமிடத்தில்.  ஆனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனுபவமோ?  மிகவும் ஆழமானது நேர்த்தியானது.  சிந்தனைகளை தீட்டுகிறது இந்த நாலு சொல்லில் முயற்சி.

இதோ… மூன்றே நாட்களில் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்ட “4 சொல்லில்”  நான் சொல்ல வரும் எண்ண அலைகளிலிருந்து சில…

This slideshow requires JavaScript.

 

நாலு சொல்லில் (புது முயற்சி)

நான்கு சொற்களில் கருத்துக்களை சொல்லுதல் என்பது சவாலான அதே சமயம் கற்றறிதலுக்கு வழி வகுக்கக் கூடிய நல்ல முயற்சி என்பதால் இதனை தொடர்ந்து செய்யலாமென இன்று 22-பிப்ரவரி-2017 முதல் துவங்கியுள்ளேன்.  எனக்கு மேற்கூறிய இரு முக்கிய பலன்கள் கிட்டும் அதே நேரத்தில் (சு)வாசிக்கும் உங்களுக்கு, எத்தகைய அனுபவத்தையும் பயனையும் தருகிறது என்பதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்…

இந்தப் புது முயற்சியை நீங்கள் அனைவரும் வரவேற்பீர்களென்ற நம்பிக்கையுடன்..  தொடர்கிறேன்

இன்றைய தினம் நமது விவசாயம், விவசாயிகளின் நிலை குறித்து, சில #4சொல்லில்

karuveli2017022301_4sollil2

மேலும் வாசிக்க..

karuveliinitiative_4sollil_4