நீயும் நானும் சமமா?

அன்புடையீர்
வணக்கம்.
 
இந்தக் கேள்வி “நீயும் நானும் சமமா? ” – சமூகத்தை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்று என்னால் ஒதுக்கி தள்ளி விட்டு போய்விட முடியாது.  ஏனென்றால் ஒவ்வொரு நாளும் அது எனக்குள்ளே எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்வி.  சக உயிரை சமமாக மதிக்காமல் போகக் காரணங்கள் என்னவோ?  சில மணித்துளிகள் சிந்திக்க
இதோ.. இவ்வரிகளை வாசியுங்கள்..
20180702_01_karuveli

படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது) பதிவு செய்வதற்கான படிவம் இதோ..

https://goo.gl/LC2dTD

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli

Advertisements

தமிழக அரசு – பள்ளி பாடப்புத்தகங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

அன்புடையீர்,

இந்தக் காணொளி தமிழக அரசு வெளியிடும் பள்ளிப் பாடப்புத்தகங்களை இபுத்தகமாக, PDF ஆக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதனை பற்றி விளக்குகிறது. அரசு பள்ளிகள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கிராமப்புற ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

ஆக்ரோபாட் ரீடரை பதிவிறக்கம் செய்ய: https://get.adobe.com/reader/

தமிழக அரசு வெளியிடும் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய http://www.textbooksonline.tn.nic.in/ மீண்டும் இன்னொரு முக்கிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தினமும் ஒரு கவிதை |நிலவும் நீயும் நானும் தொகுப்பிலிருந்து |ஒற்றை சாட்சி

அன்புடையீர்,

ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. தினமும் ஒரு காணொளி கவிதையாக “நாலு சொல்லில்” புத்தகம் வெளியிடப்பட்டது நீங்கள் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து நிலவும் நீயும் நானும் இரண்டாம் பாகம் உங்களுக்காக இதோ தினமும் ஒரு கவிதைக் காணொளியாக, இம்முறை அக்கவிதையுடன் சில அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

இன்றைய கவிதை : ஒற்றை சாட்சி

எனது படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது) பதிவு செய்வதற்கான படிவம் இதோ..

https://goo.gl/LC2dTD

நாளை அடுத்த கவிதையுடன் சந்திப்போம்..

If you like to support my creative initiatives :

https://www.paypal.me/karuveli

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

நிலவும் நீயும் நானும் – இரண்டாம் பாகம் வெளியீடு – 1 ஜீன் 18 – மாலை 6 மணி – சென்னை

அன்புடையீர்,

வணக்கம்.

இந்த ஆண்டின் துவக்கத்தின் திட்டமிட்டபடி ஜீன் மாதத்திற்கான படைப்பாக “நிலவும் நீயும் நானும்- தொகுப்பு 2” இன்று மாலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ, 96 பக்கங்கள் கொண்ட இபுத்தகத்தை ஆன்லைனில் வாசிப்பதற்கான முகவரி…

நிலவும் நீயும் நானும் – இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

நிலவும் நீயும் நானும் – முதல் பாகம் மற்றும் பல தகவல்களுக்கு, இப்புத்தகத்திற்கான சிறப்பு பக்கத்தை பார்க்கவும்.

https://karuveli.wordpress.com/spoint/nilavum-neeyum-naanum/

TN_IN2_1024X529

நாலு சொல்லில் 1&2 பாகம், நிலவும் நீயும் நானும் -1, கண்களை மூடிப் பார் போன்ற நான்கு கவிதைத் தொகுப்புகள், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதி வெளியிடப்பட்ட என் மரணம் மற்றும் மக்களாட்சியில் என் கடைசிப் பயணம் எனும் இரண்டு கதைகளைத் தொடர்ந்து “நிலவும் நீயும் நானும்- கவிதை தொகுப்பு 2”  உங்களை வந்தடைவதில் உங்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சி இருக்குமென்றே நம்புகிறேன்.

பதிவு செய்யாத வாசகர்கள் நேரடியாக ஆன்லைனில் வாசிக்கவும், பதிவு செய்த வாசகர்களுக்கு பதிவிறக்கம் செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.   வெகுவிரைவில் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடும் செய்கிறேன்.

இத்தனை சமூகப் பிரச்சனைகளுக்கும் மத்தியில் “நிலவும் நீயும் நானும்” தொகுப்பிற்கான பணிகள் மட்டுமே என்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.  ஆனால் அதுவும் நீண்ட காலம் நீடிக்காதென்பதனை இந்த இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் நீங்கள் உணர்வீர்கள்.

NilavumNeeyumNaanum_2_KaruveliRaSaMahendran

புத்தகத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள இன்னொரு அட்டைப்படம் Triple N_2_768X1024

மீண்டும் அடுத்த படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

 

 

 

 

களமாட வாடா | தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டோருக்கு சமர்ப்பணம்

 

குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லாத மக்களிடையே வாழ்வதை அறிந்து என் மனம் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறது.  உறவுகளெல்லாம் உறவுகளல்ல என்று கண் முன்னே விளக்குது நிகழ்வுகள்.  எது நிகழ்ந்தாலும் நம் பொழப்பை பார்க்கனுமென்று தத்துவங்களோடு ஓடுகிறது நாளை கொலை செய்யப்படப் போகிறோம் என்பதனையும் அறியா கூட்டம் ஒன்று.

இம்மண்ணில் பிறந்ததற்காக, மனிதகுலத்தில் பிறந்ததற்காக ஒவ்வொரு நொடியும் வெட்கித் தலைகுனியச் செய்துவிட்டார்கள்.

நான் இத்தனை தினங்களாய் இம்மண்ணில் கற்றுக் கொண்டது உண்மைதான் என்று நிதமும் நிரூபித்து விட்டது அரசுகளும், அதிகாரிகளும், முதலாளிகள் வர்க்கமும் எப்போதும் அடிமையாய் தன் பொழப்பை நடத்தும் அடிமை வம்சமென்று அறியா மக்களும்.

போராடி உயிர் துறப்பவரை , போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டவரை நினைக்கவும் நேரமின்றி களித்து திரியும் கூட்டங்கள் தாங்களும் வேட்டையாடப்படுவோமென்பதறியாமல் சுற்றித் திரிகிறார்கள்.

 

தமிழகம் இனி தினமும் இழவு வீடுதான்… நாம் அனைவரும் இணைந்து செயலாற்றாத வரை.. இவ்வார்த்தைகள் உங்களுக்கு உண்மை இல்லை என்று தோன்றினால் விரைவில் உண்மை என்பதனை உணர்த்த நிகழ்வுகள் உங்கள் முன்பே நிகழும், உங்களுக்கே நிகழும்.   நான் வெறும் கற்பனைக் கவிஞனென என் வார்த்தைகளை நீங்கள் உதாசினப்படுத்தி விட்டுச் செல்லலாம், ஆனால் காலம் காத்திருந்து உங்களுக்கு காட்சிகளை முன்னிறுத்தும்.

தாய்த் தமிழின் மீது ஆணை, இயற்கையின் மீது ஆணை..

கருவெளி ராச.மகேந்திரன்