எங்கள் சடலங்களை

நாடுகளுக்கிடையேயும் எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் தீர்த்துக் கொண்டு பகிரப்படும் நீர், இந்த நாட்டில் மாநிலங்களுக்கிடையே பகிரப்படுவதில் ஏனோ? இத்தனை பிரச்சனை?

இங்கு பிறந்து என் வாழ்நாளும் முடியப் போகுது… ஆனாலும் இந்தப் பிரச்சனையை முடித்து வைக்க எந்த அரசும் விரும்பவில்லை.  மக்களுக்கு அதே மனோ நிலையோ என்னவோ?

2017100205

 

Advertisements

பெற்றேன்

இயற்கையோடு வாழ்ந்திடும் அனைவருக்கும்..

2017072001

விசமில்லா விவசாயம்?

நேற்று (ஞாயிறு) மாலை 4 முதல் 6 மணி வரையில் இணைய வழியாக நடைபெற்ற “கருவெளியில் சில மணித்துளிகள்” முதல் முயற்சி என்றாலும் சில வாசகர்கள் தங்களுக்கு பிடித்த கருப்பொருள்களை / தலைப்புகளை பகிர்ந்து கொள்ள அதற்கான கவிதைகள் அவர்களுக்கு பகிர்ந்து கொள்ளப் பட்டது.   இந்த விளையாட்டு எனக்கு மீண்டும் கல்லூரி காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

நேற்று சென்னையிலிருந்து திரு. பிரபு கேட்டிருந்த தலைப்புக்காக எழுதிய வரிகள் இதோ..

2017052903

 

உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள.. அதற்கான கவிதைகளை இரசிக்க https://goo.gl/X11vH4

நீரறிவீரோ?

இந்த மாதத்தின் 150 வது பக்கத்தில்… இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்..

குடிநீர் பிரச்சனையை பேசும் வரிகள், அரசின் நிலை, கேள்விகள் குறித்து என பன்முகத்துடன் 150வது பக்கம் உள்ளது.

தொடர்ந்து (சு)வாசித்திருங்கள்

2017051902

பூமிக்கும் ஒரு நாள்

உலக பூமி தினமான இன்று (22 – 04 -2017) வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும் பூமியிலிருந்து அதற்கு முக்கியக் காரணமான ஓர் இனத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என் எண்ணத்தில் தோன்றியவைகள் இங்கே உங்களுக்காக… “பூமிக்கும் ஒரு நாள்”  என்ற தலைப்பில்..

karuveli2017042201

பூமிக்கும் ஒரு நாள் – கருவெளி ராச.மகேந்திரன்

விரைவில் புத்தகவடிவில் உங்கள் கரங்களில் தவழவிருக்கும் 4 சொல்லில் புத்தகம் குறித்து அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.. முகநூல் பக்கத்தில்

https://www.facebook.com/4Sollil/

நாலு சொல்லில்..

நாலு சொல்லில் புத்தகத்திற்காக எழுதுகையில் கிட்டிய வார்த்தைக் கோர்வைகளில் சில… உங்களுக்காக…

This slideshow requires JavaScript.

புத்தகத்தைப் பற்றிய விபரங்களை மேலும் அறிந்து கொள்ள முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்..

https://www.facebook.com/4Sollil/

 

மோர்

படம்

நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து உங்கள் சிந்தைக்கு..

https://www.facebook.com/4Sollil/

karuveli2017040101

தாமிரபரணி (நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து)

சில தீர்ப்புகள் நம் செவிகளை வந்தடையாமல் இருந்தால் நீதித்துறையின் மீதும் நீதியின் மீதும் இருக்கும் நம்பிக்கை இன்னும் கொஞ்சம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.  ஆனால் பெரும்பாலான சமயங்களில் அது நிகழ்வதில்லை.  தாமிரபரணியில் நீரெடுப்பது குறித்தான தீர்ப்பும் அந்த வகையில் ஒன்று..

“சட்டத்திற்கு சாட்சிகள் வேண்டும்… ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்… ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. ”  எனக்குத் தெரிந்த சட்டம் அவ்வளவுதான்…

நாம் எதில் தோற்று நிற்கிறோம்…  என்பதனை… காலம் காட்டிக் கொடுத்து விடும் விரைவில்..

தாமிரபரணி - நாலு சொல்லில்

வீதியிலே

வரும் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் பூமி எவ்வாறிருக்கும்? இந்த வினா உறங்க விடுவதில்லை…  அச்சந்ததியின் அனுபவம் எப்படி இருக்கும்..  இது கற்பனையென்று நீங்கள் நம்பினால்..  உங்கள் நம்பிக்கைகளை பரிசீலனை செய்யுங்கள்..

 

என் இல்லமென்று

எடுத்து வைத்தேன் முதல் அடி!

எடுத்து வைத்த முதல் அடி

முடியுமுன்னே..

பிடறியில் அடிபட

வந்த வாசல் தாண்டி

வீழ்ந்து கிடக்கிறேன்!

வீதி தான் என் வீடு!

அண்டவெளியே என் வீதி!

karuveli2017010701

 

 

குழந்தையாய்

குழந்தையாய் அழுவதற்கும்
குழந்தையாய் சிரிப்பதற்கும்
உரிமை இனியில்லை!
வளா்ந்து விட்டேன் நான்!

ஓடோடி விளையாடவும்
வேண்டியதை கற்கவும்
வேண்டாததை மறுக்கவும்
உரிமை எப்போதுமில்லை!
பெண்ணாய் பிறந்து விட்டேன்  நான்!

நாளும் பொழுதும்
ஒரு நான்கை சொல்லி
மறு நான்கை செய்து
வளா்த்து விட்டு
இவ்வாறு வாழென்று
நெறி செய்கிறாா்கள்!
இதில் பாலின பாகுபாடில்லை!

(இன்றைய அனுபவத்திலிருந்து )

image