வாசகர் விருப்பம் [கிருஷ்ணன்] :பார்த்திருப்போம்

புகைப்படக்காரர்கள் மேல் எப்போதும் எனக்கொரு தனி அன்பிருக்கத்தான் செய்கிறது.  அது காலத்தின் மேல் உள்ள காதலால் கூட இருக்கலாம்.  யாராலும் வெல்ல முடியாத காலத்தை அவர்கள் மட்டும் நிறுத்தி வைத்து எதிர்காலத்திற்கும் எடுத்துச் செல்வதால் கூட இருக்கலாம்.  அந்த வகையில் தம்பி கிருஷ்ணன், தான் எடுத்த புகைப்படம் ஒன்றை அனுப்பி வார்த்தைக் கோர்வைகளைக் கேட்டிருந்தார். ஆச்சர்யங்கள் நிறைந்ததே வாழ்க்கை, ஆம், வார்த்தைகளால் சொல்லமுடியாததையும் சொல்லும் ஒரு படத்திற்கு நாம் ஒன்றை மட்டுமே சொல்லிவிட முடியுமா என்ன?  படம் பார்த்ததும் தோன்றிய வார்த்தை கோர்வைகளில் ஒன்று உங்களுக்காக.  மற்றவைகளையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தப் படம் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டே இருக்கும் எனக்கு.  ஆகையால் புதிய வார்த்தை கோர்வைகள் பிறப்பதையும் நானே நினைத்தாலும் தடுக்கவோ.. தவிர்க்கவோ இயலாது.

இச்சமயத்தில் அவர் புகைப்பட்த்திற்கு எழுதும் வாய்ப்பளித்த தம்பி கிருஷ்ணனுக்கு என் நன்றிகள்.  அவரது ஒளியாளுமை தொடரட்டும்.

அன்புடன்

2017101301

Advertisements

வாசகர் விருப்பம் [கிருஷ்ணன்] :வாழ்கிறேன்

2017101302

அவளுக்கான காலம் இது!

20604271_376424512790268_9053240175473041549_n

அவளுக்கான காலம் இது..
அதை யாரும் பறித்திட வேண்டாம்
அவளிடமிருந்து..

அவளது கனவுகள்..
அவளோடு நானும் கண்டுள்ளேன்!
அத்தனையும் கனவாகிப் போகாமல்
அப்படியே நினைவாக
அவள் கனவிலும் நினைவிலும்
இயலாத நிகழ்விலும் பயணித்திருக்கேன்!
இதுவரை அவளோடு..

இவை அத்தனையும்
அவளே எனக்களித்த பெரும் பரிசுகள்!
உண்மையில் என் பங்கு துளியுமில்லை!
உலகெல்லாம் அவள் சொல்வதோ
வேறு கதை! அதில் நானே எல்லாம்!
அது கிடக்கட்டும் விடுங்கள்!

அவளுக்கான காலம் இது..
அதை யாரும் பறித்திட வேண்டாம்
அவளிடமிருந்து..
அவள் என் கண்ணம்மா!
இருந்தாலும் அது எனக்கும் பொருந்தும்!

கருவெளி ராச.மகேந்திரன்

நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள.. பதிவிறக்கம் செய்து கொள்ள..2017101201ON1

மோடி வித்தைகள் – காணொளி

வீடியோ

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மோடி வித்தைகள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால் இன்றைய தலைமுறைக்கும் அது குறித்து சொல்லி வையுங்கள் மிகவும் உதவும்.

உங்கள் அனுபவம் எப்படி? [வாசகர் விருப்பம் – கண்ணன்]

நாம் அனைவரும் ஏங்கும் ஒன்றைப் பற்றி… வாசகர் எழுதக் கேட்டால்…  அதைவிட வேறு என்ன வேண்டும் எழுதுவதற்கு… அப்படி ஒரு கருப்பொருளில் எழுதக் கேட்டிருந்தவர் கண்ணன்

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : கண்ணன், சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : கவிதையில்.. இருக்கு..

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017092703

இந்த நிலவு

நிலவும் நீயும் நானும் – புத்தகத்திற்காக எழுதிய வார்த்தைக் கோர்வைகளிலிருந்து..

2017092401

நாம் தேடும்.. [ வாசகர் விருப்பம்]

வாசகர் விருப்பப் பகுதிக்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளே வாசகர்களிடம் இருந்து வந்து சேர்ந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.

இம்முறை எனக்கும் அது தான் நிகழ்ந்தது..

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : ஜீவி, சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : வாழ்வு

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

வாழ்வின் தத்துவத்தை அவரவர் வழிகளில் வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  கற்பதற்கு நாம் தான் தயாராக கால தாமதமாகிவிடுகிறது.  அதற்குள் வாழ்வும் முடிந்து விடுகிறது!  வாழ்வு குறித்து நான் என்ன புதிதாக சொல்லி விட இயலும். சொல்ல முயன்று கொண்டே இருக்கிறேன்… இதோ.. முயன்ற சில வார்த்தைக் கோர்வைகள் உங்களுக்காக…

2017091905

ஆம்! எனக்கு சகிப்புத்தன்மை இல்லை!

வாசகர் விரும்பிக் கேட்டிருந்தாலும் சில தலைப்புகள் நமக்கு மிகவும் பிடித்துப் போய்விடும், இதுவும் அத்தகைய தலைப்பே.  இத்தலைப்பு குறித்து தொடர்ந்து எழுதிட விரும்பி, முதல்கட்டமாக இவ்வார்த்தைக் கோர்வைகளை எழுதியுள்ளேன். மேலும் முயற்சிக்க உள்ளம் துடித்தபடியே இருக்குது.. அதற்கான காரணம் இவ்வரிகளை வாசிக்கையில் உங்களுக்குத் தெரிந்திடும்..

சகிப்புத்தன்மையின்மை என்ற தலைப்பில் எழுதச் சொல்லி கேட்டிருந்த வாசகர்கள் :  கார்த்திகேயன் , பெனாசிர்

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017091802

ஆதங்கம் [வாசகர் விருப்பம்]

அன்புடையீர்,

வணக்கம்.

ஒரே தலைப்பில் எழுதச் சொல்லி இரு வாசகர்கள் கேட்டிருந்தால் என்ன செய்வது? அதுவும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கேட்டிருந்தால் என்ன செய்வது? அத்தோடு இல்லாமல் அத்தலைப்பு “ஆதங்கம்” என்றிருந்தால் என்னதான் செய்வது?  அட, எழுதும் நான் எந்த வகையில் யோசிப்பது? அதுவும் உண்மையை எழுதுவதற்கும் பேசுவதற்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கும் உலகில்,  எதனை எழுதுவது?  ஆணின் ஆதங்கத்திற்கும்.. பெண்ணின் ஆதங்கத்திற்கும் வேண்டிய வார்த்தைக் கோர்வைகளை வெவ்வேறு நிகழ்வுகள் மூலமாக சொல்ல முற்பட்டிருக்கிறேன்.  இரண்டும் இருவருக்குமே சொந்தம். அதுவே மறுக்க முடியா உண்மையும் கூட.

தலைப்பில் எழுதச் சொல்லி கேட்டிருந்த வாசகர்கள் :  கார்த்திகேயன் , பால முருகன்

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017091702

சுய உதவிக்குழு [வாசகரின் பரிசு பெற்ற வரிகள்]

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்!

வாசகர் விருப்பத் தலைப்புகளுக்கு எழுதுதல் என்பது எப்போதும் புத்துணர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும்.  அத்தனை வார்த்தைக் கோர்வைகளும் சமூகத்தின், அதன் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே எழுதப்பட்டாலும், வாசகர் விருப்பத்திற்கு எழுதும் போது அதற்கான பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது.  நான் காணாத அல்லது மிக மிக குறைந்த அளவே அறிமுகமுள்ள அல்லது முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவர் சொல்லும் ஒன்று அல்லது இரு வார்த்தைகள் கொண்டு அவர்கள் உள்ளத்தை பிரதிபலிக்கும் ஒரு கூடுவிட்டு கூடு பாய்ந்து வரும் முயற்சியாகவே நான் கருதுகிறேன்.

அந்த முயற்சி படைப்பாளனுக்கு ஒரு மாபெரும் சக்தியை அறிமுகம் செய்து வருகிறது.  அந்த சக்தியே அனைவரையும் இணைத்தும் வைத்துள்ளது.  அது, எழுதப்பட்ட வரிகளை படித்து விட்டு எழுதக் கேட்டவர் எட்டும் உணர்வு நிலையிலும், அது குறித்து அவரே எழுதியவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது எழுதியவராலும் உணரப்படுகிறது.  அந்த அனுபவமே, மனிதனை மனிதத்திலும், கலையை மனிதத்திலும் வாழ வழி செய்கிறது.

இதுவரை எவரும் கேட்டிராத ஒரு தலைப்பு திரு.பாவலன் அவர்கள் கேட்டிருந்த தலைப்பு “சுய உதவிக்குழு”.  அந்தச் சிறப்போடு நிற்காமல், இந்தக் கவிதையை தன்னுடைய மறுபயன்பாட்டிற்காக அவரே “உங்களுக்கோர் கவிதை” மூலமாக ரூபாய் 3000க்கும் வாங்கிக் கொண்டார் (ரூ 3000 பரிசுத் தொகை வழங்கினார்).  இந்நாள் வரை இதுவே மிக அதிகமான விலைக்கு வாங்கப்பட்ட / பரிசுத் தொகை பெற்ற கவிதை இதுவே ஆகும்.  அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்த வார்த்தைக்கோர்வைகள் உங்களுக்காக..

2017091002ON1