நி நீ நா புத்தகத்தை எழுதத் துவங்குகிறேன்

அறிமுகம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாக மனதில் உலா வந்து கொண்டிருக்கும் இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் நான்.   உலகத்தில் உள்ள கவிஞர்கள் அனைவரும் பாடிய பின்னே எனக்கென்று என்ன மிச்சமிருக்கும் எழுதி விட என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவனை நாளும் பார்த்து நகைக்குது பூமியின் ஒரே ஒரு சொந்தமான “வட்ட நிலா”.  ஆம், அடுத்த புத்தகத்திற்கான கருப்பொருள் நிலா தான்.  தலைப்பு, என்னவென்று வைக்க என்று யோசித்திருக்கையில் கிட்டிய அருமையான தலைப்பு இது தான் நிலவும் நீயும் நானும்”  இதில் நீங்களோ, நானோ.. நீயும் நானுமாக இருக்கலாம்.  தொகுப்பை வாசிக்கையில் அத்தகைய எண்ணம் உங்களுக்கு எழுந்தால் அதுவே இந்தப் புத்தகத்திற்கான வெற்றி என்று கருதுகிறேன்.   சுருங்கச் சொல்வதென்றால்,  “பூமியின் ஒற்றை நிலவோடு நமக்கான அனுபவங்களை சுமந்து வரும் புதுக்கவிதை தொகுப்பு” எனலாம்.

திட்டமிட்டு செயல்படுவது பலருக்கும் பிடிக்கும், அதை செய்து முடித்தால் நம்மை பலருக்கும் பிடிக்கும், அதை விட முக்கியமாய் நமக்கே நம்மை பிடிக்கும்.  பிறகென்ன, வெளியீட்டு நாளை குறித்திட வேண்டியது தான்..

வெளியிட திட்டமிட்டுள்ள நாள் : 14 – பிப்ரவரி – 2018

வெளியிடப்படும் வடிவம் : இ-புத்தகம் ( தற்போதைக்கு கிண்டில்)

மற்ற விபரங்கள் மற்றும் கவிதைகளுக்கு:

முகநூல் பக்கம் :  FB: Ni Ne Na

NiNeNa_Cover1

நாலு சொல்லில் புத்தகம் – இரண்டு பாகங்களாக வரும் ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியாவில் “கிண்டில் புத்தகமாக” வெளிவருகிறது என்பதையும் இந்த தருணத்தில்  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  உலகில் மற்ற பகுதிகளில் ஆகஸ்ட் 1ந் தேதியிலிருந்தே முன் பதிவுகள் துவங்கியாயிற்று என்பதனை உங்களில் பலரும் அறிந்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன்.

Links to Amazon – Kindle version books,  now pre-booking available at all Amazon market places, below is the link to Amazon India.

முதல் பாகம்  (Naalu Sollil Part 1)

https://www.amazon.in/dp/B074DZ5289/

இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2)

https://www.amazon.in/dp/B074DZYFKN/

நாலு சொல்லில் முகநூல் பக்கம்

https://www.facebook.com/4Sollil/

நாலு சொல்லில் பற்றி மேலும் விபரங்களுக்கு

https://karuveli.wordpress.com/2017/08/01/4sollil-now-in-amazon-kindle/

கண்களை மூடிப் பார் – 2018 மார்ச்சில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்த புத்தகத்தைப் பற்றி அறிய

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

ஆசிரியருடன் இணைந்திருக்க… மற்றும் கருவெளி படைப்புகளுக்கு..

https://www.facebook.com/KaruveliTheCreator/

குழுவிலும் இணைந்து கொள்ளலாம் https://www.facebook.com/groups/karuveli/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

நிலவும் நீயும் நானும்

நேரம் கிட்டினால்… வீட்டை விட்டு வெளியே வந்து கொஞ்ச நேரம் குடும்பத்தோடு நிலவை இரசித்து விட்டு செல்லுங்கள்… என்ற வேண்டுகோளுடன்..

“நிலவும் நீயும் நானும்”  உங்களுக்காக..

karuveli2017031401

நிலவின் பயணம்

பல விசயங்கள் நம் கவனம் ஈர்ப்பதேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மிக முக்கியமான  காரணமாக,  நிகழ்வுகளையும் நம் மனநிலையையும் சொல்லலாம்.  இக்கவிதை பிறப்பதற்கான காரணமும் அவையே தான்.  முதல் இரண்டு வரிகள் தோன்றக் காரணமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீதி உலா வரும் போது விரைந்து பயணிக்கும் மேகங்களுக்கிடையே அந்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது தான்.   பிறகென்ன…  பிறந்து விட்டது நிலவின் பயணம்…  உடனுக்குடன் உங்களுக்காக…

மூன்று நாட்களும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நிலவுக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..  இது அவ்வளவு நல்லதல்ல 🙂  இந்த கடைசி வரிகளுக்கான அர்த்தம் என்னைத் தவிர இந்த மண்ணில் இன்னொருவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் இக்கவிதையை வாசிப்பாரா? என்று எனக்குத் தெரியாது) . அவருக்காக (உங்களுக்காகவுந்தான்) “ இனி நான் என்ன செய்வேன்?”  என்ற தலைப்பில் கவிதையும் தயாராக உள்ளது.  ஆனால் வெளியிட மனமில்லை..

karuveli2017031302

நீங்காமல்..

படம்

karuveli2017031301

நிலவும் நீயும் நானும்

பல வாரங்களாக வானத்தை இரவு நேரத்தில் பார்க்கவில்லை என்பதே இன்று பார்த்த போது தான் நினைவுக்கு வந்தது…  பயனென்ன?  இதோ… நிலவும் நீயும் நானும் உங்கள் முன்னே…    வெளியிடப்படாத பல வரிகள் என்னிடம் பத்திரமாக இருக்கிறது..  விரைவில் அவையும் உங்களை வந்து சேரும்..

karuveli2017031001

நிலவு காத்திருக்கு

நீண்ட நாட்களாக நிலவு பற்றி எழுதாமல் இருப்பதாய் எனக்குள்ளே ஒரு நினைவு.  அதை ஞாபகப் படுத்தியதும் இன்றைய நிலவு தான்.  ஒவ்வொரு முழு நிலவும் ஒரு கவிதை கேட்காமல் போகாது.  பாட்டி சொன்ன நிலவுக் கதை போல் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கேட்டாலும், பொய் என்று அறிந்த பின்பும் சொல்லப்படுவதோடு கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருமை நிலவுக்குண்டு.   இந்த வார்த்தைக் கோர்வையும் அத்தகைய ஒன்று தான்.

இங்கு ஒரு நிலவு காத்திருக்கு….

 

karuveli2017011201


 

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில்

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்