தமிழக அரசு – பள்ளி பாடப்புத்தகங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

அன்புடையீர்,

இந்தக் காணொளி தமிழக அரசு வெளியிடும் பள்ளிப் பாடப்புத்தகங்களை இபுத்தகமாக, PDF ஆக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதனை பற்றி விளக்குகிறது. அரசு பள்ளிகள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கிராமப்புற ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

ஆக்ரோபாட் ரீடரை பதிவிறக்கம் செய்ய: https://get.adobe.com/reader/

தமிழக அரசு வெளியிடும் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய http://www.textbooksonline.tn.nic.in/ மீண்டும் இன்னொரு முக்கிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

“நிலவும் நீயும் நானும்” கவிதை தொகுப்பு முதல் பாகத்தை – ஓவியர் ரமாதேவி குமரேசன் அமேசானில் வெளியிட்டார்

அன்புடையீா்

அனைவருக்கும் வணக்கம்.

தமிழர் திருநாள் 14 – சனவரி – 2018 அன்று எனது பெற்றோரால் வெளியிடப்பட்ட “நிலவும் நீயும் நானும்” முதல் பாகம் வரும் 14 – பிப்ரவரி – 2018 முதல் அமேசானில், கிண்டில் இபுத்தகமாக உங்களுக்கு கிடைக்கும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.

நிலவும் நீயும் நானும் கவிதைகளுக்காக ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கும் ஓவியா் ரமா தேவி குமரேசன் அவா்கள் “நிலவும் நீயும் நானும்” முதல் பாகத்திற்கான முன் பதிவினை இன்று அமேசானில் துவங்கி வைத்து வெளியிட்டார் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

விரைவில் அவரது ஓவியங்களை உள்ளடக்கிய பதிப்பும் அமேசானில் வெளியிடப்படும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ “ நிலவு நீயும் நானும் “ புத்தகத்தினை முன்பதிவு செய்யவதற்கான புத்தகத்திற்கான எண் ASIN: B079JVF4DT

அல்லது வாங்கிட, பகிர்ந்திட , பார்க்க

 

இந்தியா தவிர மற்ற 12 ற்கும் மேற்பட்ட நாடுகளிலும் அமேசான் மூலமாக பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் இருக்கும் நாட்டிற்கான அமேசான்  வெப்சைட்டிற்கு செல்லவும் எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ளவர்கள்,

  1. amazon.in என்ற தளத்திற்கு செல்லவும்
  2. அங்குள்ள தேடுபொறியில் புத்தகத்தின் எண்ணை B079JVF4DT கொடுத்து தேடவும்
  3. அங்கு உங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள தகவல்கள் கிடைக்கும்
  4. 14 – பிப்ரவரி -18 அன்று உங்கள் கிண்டில் அக்கவுண்டில் புத்தகத்தை வாசிக்க இயலும்.

மேலும் தகவலுக்கு 94455 28556 ல் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

2018 – புத்தாண்டு சிறப்பு ஒலி ஒளி புத்தகங்கள் வெளியீடு – வாசகர்கள் வெளியிடுகிறார்கள்

அன்புடையீர்,

வணக்கமும், வாழ்த்துகளும் மற்றும் நன்றிகளும்.

வரும் 1-சனவரி-18 அன்று, வாசகர்களாக இருந்து பேராதரவும் ஊக்குவிப்பும் தரும் உங்கள் கரங்களால் பின்வரும் மூன்று விசயங்களையும் வெளியிட உங்களை அன்போடு அழைக்கிறேன்.

  1. நாலு சொல்லில் – ஒலிப் புத்தகம் – முதல் பாகம் – வெளியீடு (150 கவிதைகள், நாலு சொல்லில் பற்றிய அறிமுகம், மற்றும் ஆசிரியர் முன்னுரை ஆகியவை உள்ளடக்கியது).  – ஏறக்குறைய 200 MB அளவுடையது
  2. நாலு சொல்லில் – 100 காணொளிகள் – தொடர் – வெளியீடு (நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன, உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்கள் சொல்லுங்கள், அந்த காணொளிக்கான யூ-டியூப் முகவரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும். அதனை நீங்கள் வெளியிடலாம்)
  3. “ஊமைகளின் குரல்”The Voice Of Voicelessயூ-டியூப் சேனல் அறிமுகம் (பொது மக்களின் குரலுக்கான யூ-டியூப் சானல், இதில் CM2CM மற்றும் PM2PM, என்ற இரண்டு முக்கிய கருத்தியலில், பொது மக்கள் மக்களாட்சியில் பங்கேற்க உதவும் வகையில் தகவல்களை வெளியித் திட்டமிடப்பட்டுள்ளது)

நேரம் – 5 முதல் 6 மணி வரை

இடம் – பால விநாயகர் நகர், அரும்பாக்கம் (எம்.எம்.டி.ஏ பேருந்து நிலையம் அருகில்) எனது இல்லத்தில்

தொடர்புக்கு – 94455 28556

நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாத அன்பர்கள், தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே வெளியிட / பகிர்ந்து கொள்ள என்னை அழைக்கவும்.

முகநூலில் பகிர்ந்து கொள்ள…

https://www.facebook.com/events/234568290416468/

நாலு சொல்லில் புத்தகத்தில் உள்ள தலைப்புகள் பற்றி அறிந்திட, நீங்கள் வெளியிட விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுக்க..

20171224_2018NewYear_Publishing_Invitation

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

21-சனவரி-17

12 இபுத்தகங்கள் 2018இல்..

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

வணக்கத்துடன் ஒரு மிக முக்கியமான நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  2018ற்கான திட்டமிடலில் முக்கியமாக எழுத்து மற்றும் வெளியிடல் குறித்தான திட்டமிடலில் இருந்து தான் அந்த நற்செய்தி.  ஆம், வரும் 2018ல் குறைந்தது  12 இ-புத்தகங்கள் வெளிவரவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   விரைவில், வெளியிடும் புத்தகத்தின் பெயர் மாதங்கள் மேலும் சில விபரங்களுடன் உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன்!

2018ல் அத்தனை புத்தகங்களும் இ-புத்தகங்களாக (PDF Files ஆக) வெளியிடப்படும் என்பதனை பகிர்ந்து கொள்கிறேன்.  அதற்கான ஒலி வடிவங்களும், காணொளிகளும் அவ்வப்போது வெளியிடப்படும் என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தற்சமயம் 2019 ஆம் ஆண்டில் இந்த புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடவும் திட்டமுள்ளது.

2018 இல் 12 புத்தகங்கள் சாத்தியமா? இணைந்திருங்கள்… மேலும் விபரங்களுக்கு.

புத்தகங்களை மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யவும்.

https://goo.gl/LC2dTD

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

2018_Ebooks_Intro_EN1

தைத் திருநாளில் – நிலவும் நீயும் நானும் – இபுத்தகம் வெளியீடு

அன்புடையீர்,
அனைவருக்கும் நன்றி.. எண்ணமாய், புத்தகமாய், இயக்கமாய் தனது பயணத்தை நாலு சொல்லில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முன்பு பகிர்ந்து கொண்டதற்கும் முன்னதாகவே உங்களை காண வருகிறது “நிலவும் நீயும் நானும்” முதல் பகுதி.
வரும் தைத் திருநாளன்று என் பெற்றோர் இ-புத்தகத்தை அறிமுகம் செய்து வெளியிடுவார்கள் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அது குறித்த சிறு காணொளி..
TN_KK_INTRO_1
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
94455 28556