கண்களை மூடிப்பார்

அனைவருக்கும் வணக்கம்.

“நாலு சொல்லில்” [FB: 4Sollil] புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி.  விரைவில் “Kindle” – இ-புத்தகமாக கிடைப்பதற்கான பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நற்செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னொரு நற்செய்தியையும் அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்

அறிந்தோ அறியாமலோ… தேடல் என்பது எல்லா உயிர்களிடமும் நிறைந்திருக்கிறது.  முக்கியமாக மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் அத்தகைய தேடல்களில் பெரும்பாலானவை புறக்காரணிகளை நோக்கியதாக இருக்கிறது.  “கண்களை மூடிப்பார்” என்னும் இந்த புதுக்கவிதைத் தொகுப்பு மற்றும் அனுபவப்பகிர்வு புத்தகம் ஒரு மனிதனின் அகத்தேடல் அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமையும். இதனை எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதிக் கொண்டிருப்பதால் வரும் மார்ச் 2018 வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளேன்.  இந்த புத்தகத்தை அனைத்து தியானிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் தொடர்ந்து வாசிக்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இணைந்திருங்கள்

கண்களை மூடிப் பார் முகநூல் பக்கம்

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

KMP_02

நாலு சொல்லில் https://www.facebook.com/4Sollil/

“நாலு சொல்லில்” கவிதைகளை கேட்டு பார்த்து இரசித்து மகிழ

ஆசிரியர்:

https://www.facebook.com/KaruveliTheCreator/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தேனி

எப்போது வருவாய் நீ?

அவன் வருவானோ?  அவள் காத்திருக்கிறாள்..

201705051001

அவனோடு ஒரு பயணம் – கருவெளி ராச.மகேந்திரன்

படைக்கிறேன்

படைப்பது விசித்திரமானது.. படைப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும்.  நீங்கள் அனைவரும் படைப்பவர்கள் என்பதனை நான் சொல்லத் தேவையில்லை…  படைப்பின் விசித்திரம் குறித்து…

karuveli2017030401

படைத்தேன் – கருவெளி ராச.மகேந்திரன்

உன்னையறிந்தால்

karuveli16120602

உன்னையறிந்தால் (அவளோடு ஒரு பயணம்)

அவளை எனக்குத் தெரியுமென்றிருந்தேன்!

உனக்கு என்னைத் தெரியாதென்று

அவளே செயலால் சொல்லிப் போனாள்!

 

என்னைத் தெரியுமென்று எண்ணியிருந்த

என்னை எனக்குத் தெரியாதென்று

நானே நித்தம் நிரூபிப்பது போல்!

—கருவெளி ராச.மகேந்திரன்

நன்றி –  கூகுள் இமேஜஸ், Pixlr, பயண அனுபவங்கள்

மனம்

நினைத்தால்

ஓய்வு கொடுத்தேன்!

உடலுக்கு!

நினைத்தாலும்

நினைக்காவிட்டாலும்

ஓய்வளிக்க முடியாமலே

இம்மனதிற்கு!

மனம்

உனைத் தொலைத்த கனவு

karuveli16112701

அந்தக் கனவை

ஏன் தொலைத்தேனோ?

அக்கனவைத் தேடி

மீண்டும் மீண்டும்

கண் மூடுகிறேன்!

கனவுகள் வருகின்றன

உன்னைக் காணும் கனவுகளை

இதுவரைக் காணாமலே!

 

ஏன் வந்தாய்?

அக்கனவிலே!

ஏன் சென்றாய்?

இடையிலேயே!

தேடித் திரிகிறேன்

நீ சென்ற இடம் தெரியாமல்!

 

உனை மீட்டெடுக்க முடியா

கனவுகளுடன் என் போராட்டம்

இடைவிடாது தொடருது!

நினைவிலும் நிகழ்விலும்!

 

என் நினைவு கனவானதோ?

அத்தகைய நினைவுகள்

என் நினைவிலில்லையே!

உன் நினைவு கனவானதோ?

அத்தகைய நினைவுகள்

உன்னிடம் இருந்ததோ?

யாரிடம் கேட்பேன்?

 

யாரிடம் கேட்பேன்?

நீ தொலைந்து போன

அக்கனவை சென்றடையும்

அற்புத வழியை!

 

 

அக்கனவின் தொடர்ச்சி

நிகழ்வில் வருமோ?

நிகழ்வினை முன்பே

அக்கனவில் கண்டேனோ?

யாரிடம் கேட்பேன்?!

 

முடிவுகள் தெரியா

ஒரு கதையாய்..

அக்கனவு நினைவுகளை

நிலைகுலையச் செய்தபடி!

உனக்கும் வந்ததோ அக்கனவு?

என் கனவில் நீ இருந்ததால்

நினைவிழந்து கேட்கிறேன்!

இவ்வினாவினை!

 

இதுவரை நிகழா ஒரு நிகழ்வு

உனைத் தொலைத்தது!

வரும் நிகழ்வுக்கு குறி சொல்லி

அக்கனவு போனதோ?!

உன் நினைவை என்னிடம்

எடுத்து சொன்னதோ?!

யாரிடம் கேட்பேன்?!

நம்பிக்கை தான்

படம்

image

வாசகிக்கு அஞ்சலி

சமீபத்தில் இவ்வுலகை விட்டு மறைந்த  ஒரு வாசகிக்கு என்  அஞ்சலி. அவரையும், அவர் எழுத்துக்களையும் அவர் தான் என்றறியாமல் (அவர் மரணமடைந்த செய்தி கிட்டும் வரை) வாசித்து வாசகராய் இருந்து வந்தது வாழ்வின் இன்னொரு பக்கத்தை எனக்கு வாழ்வே காட்டிச் செல்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையுடன்  பயணத்தை தொடர்கிறேன்.
இந்த வார்த்தை கோர்வைகளை அவருக்காக சமர்ப்பிக்கிறேன்.
woman-sitting-at-lake
முகமறியா உலகில்
அகமறியா உலகில்
ஏதேதோ தேடி
எங்கெங்கோ நம் பயணம்
எப்போது முடியும்?
எங்கே முடியும்?
எவரும் அறியோம்!
இருந்தும் தொடருது இப்பயணம்
இருண்ட உலகில்
இனி எதற்கு கண்கள் என்று
இரு கண்களையும் மூடியபடியே!

முதல் முத்தம்

image

முதல் முத்தம்
அவளையும் என்னையும்
அடுத்த அன்புக் களத்திற்கு
ஆா்ப்பாட்டமின்றி அழைத்து போனது!
நான் கொடுத்த முதல் முத்தம்!

முதல் முத்தம்

image

முதல் முத்தம்
அவளையும் என்னையும்
அடுத்த அன்புக் களத்திற்கு
ஆா்ப்பாட்டமின்றி அழைத்து போனது!
நான் கொடுத்த முதல் முத்தம்!