இதுவே தருணமடி – உலக மகளிர் தினம்

இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான மையக்கருவாக “TimeIsNow” என்ற சொல்லாடல் ஐக்கிய கூட்டமைப்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது . அந்த சொல்லாடலையும் 1946 ல் நம்ம ஊரு தாத்தா சொன்ன பெண் விடுதலையும் மனதில் கொண்டே இவ்வரிகளை உங்களை சந்திக்கின்றன. இவன் யாரடா.. வாழ்த்துச் சொல்லுவதற்கு பதிலாக புரட்சியைப் பற்றி பேசுகிறான் என்று ஓடி விடாதீர்கள்.  பெண்களின் புரட்சி மட்டுமே சமூகத்தின் புரட்சியாக அமைய முடியும்.  உங்கள் வளர்ச்சியை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  என் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமையே…  நான் வெறும் வாழ்த்துகளைச் சொல்லிச் செல்ல இங்கே பிறக்கவில்லை என்பதை அறிவேன்.

2018030809

2018030807

 

Advertisements

ஓங்கி குரல் எழுப்படி – உலக மகளிர் தினம் 2018

பல புரட்சிகர வரிகளை பெண்களுக்காக ஆண்களுக்காக இன்றே சொல்லிவிடலாம் மாற்றம் ஒரு நாளில் வந்து விடுமென்றால்.. ஆனால் அது சில மணி நேர உணா்வு எழுச்சியாய் முடிந்து போக நான் விரும்பவில்லை!! ஆகையால் நித்தம் தொடரும் என் வாா்த்தைகள் நீதிக்காக!

தொடர்ந்து இணைந்திருங்கள்..  பல சிந்தனைகள் உங்களை நோக்கி பயணித்தபடி இருக்கின்றன.  அத்தனையும் செயல் வடிவம் பெற தினமும் உழைத்திருப்போம் வாழ்வில் கடைபிடித்திருப்போம்.

பெண்கள் தினத்திற்காக இன்று எழுதியவைகளில் சில படைப்புகளில் ஒன்று உங்களுக்காக

2018030811

இதுவே தருணம்.. எனும் காணொளி தயாராகிக் கொண்டிருக்கிறது..  விரைவில் காணொளிக் கவிதையுடன் சந்திக்கிறேன்..

 

 

 

உலக மகளிர் தினம் 2018 காணொளி

இந்தக் காணொளி எனக்கு மிகவும் முக்கியமான காணொளி அதற்கான காரணத்தை முன்பே சொல்லி இருக்கிறேன்.  அக்காணொளியை இந்த உலக மகளிர் தினத்தில் வாழ்த்துச் செய்தியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

 

உலக மகளிர் தினம்

அடிமைத்தனம் ஆண், பெண் என பாகுபாடின்றி நிறைந்திருக்கும் இம்மண்ணில் நாளை பெண்கள் தினம் கொண்டாடப்படும்.
 
இன்றே என் உடன் பிறவா சகோதரி ஒருவர்… காணொளி ஒன்றை அனுப்பி ஆண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்லி விட்டாள்.
 
அவள் அனுப்பிய காணொளியை தயாரித்த குழு… பெண்களை பெண்களுக்கு சம உரிமை தரச் சொல்லிக் கேட்டிருக்கு. அதையும் பெண்ணை வைத்தே சொல்ல வைத்திருக்கு. சம உரிமைக்காக அவர்கள் காட்டியிருக்கும் காட்சி அமைப்புகளில் சில தனிப்பட்ட முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இல்லாததால் அந்தக் காணொளியை இங்கு நான் பகிரவில்லை.
 
ஆனாலும் உலகம் முழுவதும் மகளிர் தினம் குறித்து என்ன தான் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. நாம் அனைவரும் அதை உற்று நோக்கி அதன் உண்மைத் தன்மையை நம் அன்றாட வாழ்வோடு ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.
இதோ , ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பெண்களுக்கான குழு(UN WOMEN) இந்த ஆண்டு பெண்கள் தினத்திற்காக வெளியிட்டிருக்கும் காணொளிகளில் ஒன்று அதன் மூலக் கருத்துடன் (ஆங்கிலத்தில் உள்ளது)
மேலும் விபரங்களுக்கு பின்வரும் தளத்தை பார்க்கவும்..
இந்த சமயத்தில்.. நான் வெளியிட்ட பின்வரும் காணொளிகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அத்துடன் என் சகோதரி தந்த சுரண்டல் என்ற தலைப்புக்கு எழுதிய வரிகளையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நான் வாழ்த்துகளே சொல்லாமல் இந்த மகளிர் தினத்தை ஒட்டி உங்களுடன் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கும் காரணம் உண்டு. அதை உங்கள் சிந்தனைகளுக்கே விட்டு விடுகிறேன்.
Karuveli_Surandal

கள்ள மெளனம் கலைக்குமோ சமூகம்?

சில வகையான கவிதைகளை எழுதுவது மிகக் கடினம் அதை எழுது முடிப்பதற்குள் நானே உடைந்து போய் விடுவேன்.  அத்தகைய வரிகளை பெரும்பாலும் நான் பகிர்ந்து கொள்வதே இல்லை.  ஏனெனில் இந்தச் சமூகம் அத்தகைய விசயங்கள் நடக்காதது போல் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அதையே வாழ்க்கை முறையாகவும் கொண்டிருக்கிறது.  இதை மறுப்பவர்கள் பொய்யர்களாகத் தான் இருக்க வேண்டும்.  இது எனது தனிப்பட்டக் கருத்து.

நீங்கள் என் கருத்தை மறுப்பவர்களாகக் கூட இருக்கலாம்.  உங்களால் முடிந்தால் உங்கள் இல்லத்தில் இருப்பவர்கள் எவருக்கேனும் மனம் திறந்து பேச ஒரு முறை வாய்ப்பை ஏற்படுத்துங்கள் பிறகு உங்களுக்கே புரிந்து போகும் நான் சொல்லும் உண்மை.  அதுவும் சாத்தியமில்லை என்றால், உங்கள் மனசாட்சியை ஒரு முறை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இதோ..  என்னை மறுபடியும் உடைத்துப் போட்டு  கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.. வார்த்தைக் கோர்வையாக..

2018030301