கண்களை மூடி விழித்திரு

உலகில் அத்தனையும் அனைவருக்கும் சாத்தியம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சாத்தியப்படுவதற்கான முயற்சிகள் இல்லாதவரை இவை அத்தனையும் “வெறும் வார்த்தைகளே!” அவற்றிற்கு எப்பொருளும் இல்லை.   வாழ்வின் நோக்கங்களில் மிக உயர்ந்ததாக மனிதகுலத்தில் வர்ணிக்கப்படும் தன்னிலை அறிதல் அதனை கடந்து செல்லுதல் போன்றவை அனைவருக்கும் சாத்தியம் தானா?  அந்தக் கேள்வியை என் முன் வைத்தால் அதற்கு முன் ஒரு கேள்வியை உங்கள் முன் நீங்களே வைத்துக் கொள்ளலாம் அது இது தான் “அதற்காக முழு அர்ப்பணிப்போடு நான் முயற்சித்தேனா?” பிறகென்ன எல்லாம் உங்களுக்கே விளங்கி விடும்.

 

2018052802

Advertisements

உள்நோக்கிய தேடல் பயண அனுபவம் (கண்களை மூடிப் பார்)

அன்புடையீர்

வணக்கம்.

உள்நோக்கிய தேடல் குறித்து என் அனுபவப் பகிர்வான “கண்களை மூடிப்பார்” கவிதைத் தொகுப்பு 25 மார்ச் அன்று அறிமுகம் செய்யப்பட்டு 26 மார்ச்சிலிருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்திட வழிவகை செய்யப்பட்ட்து நீங்கள் அறிந்ததே. அதன் ஒரு கட்டமாக புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய QR Code உடன் உருவாக்கப்பட்ட படத்தை அச்சிட்டு பகிர்வதாக ஒரு முயற்சியையும் துவங்கினேன்.  அதற்காக, அச்சிட அருகிலுள்ள கடைக்குச் சென்ற போது இருவர் தங்கள் உள்நோக்கியத் தேடல் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.  அதற்காகவே இந்தப் பதிவு

அந்த இருவரில், தம்பி வயதினை ஒத்த ஒருவர் சொன்ன செய்தி மிகவும் அற்புதமான அனுபவம்.    அது தியான நிலையில் நீங்கள் “ ஒரு எந்த சலனமும் இல்லா நீர் நிலை “ போன்ற நிலையில் இருப்பதாகும்.   உண்மையில் சொல்லப் போனால் பிரபஞ்சத்தின் இயக்க அதிர்வலையில் ஒன்றி உங்கள் இயல்பான அதிர்வு அலைகளை / சிந்தனை அலைகளை கடந்து இருக்கும் இயக்கமற்ற இயக்க நிலையாகும்.   என்னைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான ஆரம்ப நிலையாகும்.  அதே நிலையில் நிலைத்திருப்பது அத்தனை சுலபமானதல்ல. அந்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் ஏதேனும் ஒரு பெளதீக பொருளில் ஏற்படும் அதிர்வுகள் நமது உடலில் (பெளதீக) அப்படியே பிரதிபலிக்கும்.  ஆம், சலனமற்ற ஓர் நீர் நிலையில் வீசப்பட்ட ஒரு கல் ஏற்படுத்தும் அலையைப் போல.   அந்த அதிர்வு பலரையும் பெளதீக நிலைக்கு மீட்டுக் கொண்டு வந்து விடுகிறது.  ஆகையால் தான் உள்நோக்கியத் தேடலுக்காக பலரும் அத்தனையும் விட்டு விட்டு பயணிக்கிறார்களோ? என்ற வினா எனக்குள் எழுகிறது.  அது இருக்கட்டும்.

மீண்டும் அந்த இயக்கமற்ற இயக்க நிலையை அடைவது அத்தனை சுலபமல்ல என்றாலும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருப்பான்(ள்) உள்நோக்கியப் பயணத்திலிருக்கும் ஒரு பயணி என்பதனை நான் எக்கணமும் நம்புகிறேன்.   அத்தகைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அந்த தம்பியும் தன் பயணத்தை தொடர்வார் என நம்புகிறேன்.  அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அக்கடையின் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும், இந்த பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தவருமான சகோதரர் அவரது வினைகளுக்கான எதிர்வினை மற்றும் அதற்காக அவர் தனக்குள் படைத்த புத்தம் புதிய குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் பற்றி பகிர்ந்து ஆச்சர்யமளித்தார்.   நமது எதிர்வினைகள், வினைகள், உள்நோக்கிய மாற்றங்கள் அத்தனையும் மாறி மாறி நிகழ்கையில் நம் பயணம் எப்படி இருக்கும் என்பதற்கு அவர் வாழ்வு அனுபவங்கள் மிகச் சிறப்பான உதாரணமாக இருந்தது.

இந்த அனுபவம் மிகவும் அற்புதமானது, அவர்கள் இருவரும் கண்களை மூடிப்பார் புத்தகத்தை வாசிக்கையில் தங்கள் வாழ்வை அதில் காண்பார்கள்.  அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

படைப்புகள் இந்த உலகை அதன் மக்களை பிரதிபலித்து விட்டால் நான் எழுதுவதின் அத்தனை பலனையும் நான் அடைந்து விட்டதாகவே நம்புகிறேன்.  ஏன் விலையின்றி புத்தகத்தை கொடுக்கிறீர்கள்? என்று என்னிடம் திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதிலாக இருக்குமென்றும் நம்புகிறேன்.

கண்களை மூடிப்பார் புத்தகத்தை படித்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.  காணொளியாகவும் பகிரலாம்.

KMP_EBOOK_DOWNLOAD_TN

மனிதன் படைத்த பணத்தை சுற்றியே இந்த வையகம் சுழல்கிறதென்று நீங்கள் இனியும் நம்பித் தொடர்ந்தால் அந்தக் கருத்தை நான் ஒன்றும் செய்திட இயலாது.

விரைவில் இன்னும் பல படைப்புகளுடனும் அனுபவங்களுடனும் உங்களை சந்திக்கிறேன்.

கண்களை மூடிப்பார் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய

https://karuveli.wordpress.com/spoint/kmp/

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

கண்களை மூடிப்பார் புத்தகம் தோழர்களால் வெளியிடப்பட்டது

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்

நாலு சொல்லில் – 1&2 பாகம், நிலவும் நீயும் நானும் – 1 பாகம் என மூன்று புத்தகங்களையும் பல்வேறு இதர படைப்புகளையும் தொடர்ந்து வாசித்து ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி.  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த “கண்களை மூடிப் பார்” இபுத்தகம் நீங்கள் முதன் முதலாக வாசிக்க.

தோழர் விஜயகாந்த அவர்களின் “நண்பர்கள் உணவகத்தில்” 25 மார்ச் 2018 அன்று கண்களை மூடிப்பார் இபுத்தகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.   முதல் இபதிப்பை விஜயகாந்த் அவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டார்.

தம்பி ஜெய்தின் புத்தகத்தைப் பற்றிய அறிமுக காணொளியை வெளியிட்டு சிறப்பித்தார்.   இசைக்கல்லூரி மாணவர்களும் தம்பிகளும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  (புகைப்படங்களை விரைவில் இணைக்கிறேன்).

இன்று 26 மார்ச் 2018 இல் இருந்து அனைவரும் விலையின்றி தரவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதோ, பின்வரும் முகவரியைப் பயன்படுத்தி இப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

https://goo.gl/gZqcST

உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர இந்த முகவரியைப் பயன்படுத்தவும்

https://karuveli.wordpress.com/spoint/kmp/

பலருக்கும் சென்று சேர இன்னொரு சிறு முயற்சி

நூலகங்கள், உங்கள் அலுவலகங்கள்,  மற்றும் பொது வளாகங்களில் இப்புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய விரும்பினால் பின்வரும் படங்களை அச்சிட்டு பகிரவும். QR code ஐ பயன்படுத்தி விரும்புவோர் பதிவிறக்கம் செய்ய இது வழிவகை செய்யும்.

KMP_EBOOK_DOWNLOAD_TN

KMP_EBOOK_DOWNLOAD_EN

2018031604

2018031605

புத்தன்

புத்தனின் பிறப்பிற்குள் இரகசியம் இருக்கு அது இது தான்..

2017100606

2017100605

#KankalaiMoodiPaar #TheEBook  ON #InternalJourney #Mar2018Release

துவக்கமதுவே

துவங்கியதும் தான் அறிவாய்.. துவக்கத்தை! அதுவரை அது பற்றியே சுழலும் கற்பனைகளிலேயே சுழல்வாய்

2017100603