பெற்றேன்

இயற்கையோடு வாழ்ந்திடும் அனைவருக்கும்..

2017072001

Advertisements

நிலவின் பயணம்

பல விசயங்கள் நம் கவனம் ஈர்ப்பதேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மிக முக்கியமான  காரணமாக,  நிகழ்வுகளையும் நம் மனநிலையையும் சொல்லலாம்.  இக்கவிதை பிறப்பதற்கான காரணமும் அவையே தான்.  முதல் இரண்டு வரிகள் தோன்றக் காரணமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீதி உலா வரும் போது விரைந்து பயணிக்கும் மேகங்களுக்கிடையே அந்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது தான்.   பிறகென்ன…  பிறந்து விட்டது நிலவின் பயணம்…  உடனுக்குடன் உங்களுக்காக…

மூன்று நாட்களும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நிலவுக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..  இது அவ்வளவு நல்லதல்ல 🙂  இந்த கடைசி வரிகளுக்கான அர்த்தம் என்னைத் தவிர இந்த மண்ணில் இன்னொருவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் இக்கவிதையை வாசிப்பாரா? என்று எனக்குத் தெரியாது) . அவருக்காக (உங்களுக்காகவுந்தான்) “ இனி நான் என்ன செய்வேன்?”  என்ற தலைப்பில் கவிதையும் தயாராக உள்ளது.  ஆனால் வெளியிட மனமில்லை..

karuveli2017031302

என்னை எழுதச் சொல்லாதே..

என்னை எழுதச் சொல்லாதே..

நான் கண்டபடி எழுதிப்புடுவேன்!

அதப் படிச்சா..

அறிவாளிக்கு(?) கோபம் வந்திடும்

ஆட்சியாழ்பவனுக்கு வெறி பிறந்திடும்

பணக்காரனுக்கு பைத்தியம் பிடித்திடும்

என்னை எழுதச் சொல்லாதே

நான் கண்டபடி எழுதிப்புடுவேன்!

 

விலைமகன் (அவனோடு ஒரு பயணம்)

விலைமகன் - அவனோடு ஒரு பயணம்

விலைமகன் – அவனோடு ஒரு பயணம்

வேசியென்று ஏசினான்!

நித்தமும் இதுவே நிலை!

குடித்ததால் தான்

கூத்தியாள் என்கிறான்!

இதுவரை பொறுத்திருந்தேன்!

குடி அவன் உயிரெடுக்க..

அவனோடு பகிர்ந்த நிமிடங்கள்

நித்தம் என் உயிர் குடிக்குது!

 

விலை கொடுத்து

அவனை வாங்கியும்

விலை மகளானேன் நான்!

நான் கேட்க அஞ்சியதை

என் மகள் கேட்கிறாள்

அப்பனென்றும் பாராமல்..

நீங்க தான் விலைமகன்!

அம்மாட்ட காசு வாங்கிட்டுதான

கல்யாண செஞ்சீங்க.. அப்ப

நீங்க தான் விலைமகன்!

-கருவெளி ராச.மகேந்திரன்

 

அன்பு விதை

பாறை மேல் வேர் பிடிக்க

விதை ஒன்று காத்திருக்கு!

தன் வாழ்வையும் தியாகம் செய்து!

 

download screen saver here for your desktop / mobile 

விரைவில் இன்னும் பல முயற்சிகளுடன் சந்திக்கிறேன்..

அன்பு விதை

 

ஒரு பொத்தானில்

ஒரு பொத்தானில்

குறுஞ்செய்திகள்

கைபேசி அழைப்புகள்

காணொளி அழைப்புகள்

முகநூல் உரையாடல்கள்

அத்தனையும்.. நம்மை

நாளும் இணைத்திருப்பதாய்..

நம்பியிருந்தேன்!

 

நாட்கள் நகர்ந்தன..

மாதங்கள் மறைந்தன..

வருடங்கள் வந்தோடின..

சந்திக்கும் எண்ணமோ

நிந்திக்கும் எண்ணமோ – அந்த

மாய வலையில் சிக்கியபடியே!

 

உன் ஒரே சொந்தத்தின்

உடலுக்கு நெருப்பையும்

மக்கள் பணியாற்ற நேரமில்லா

முதல்வரைப் போல்

ஒரு பொத்தானை அழுத்தி

அங்கிருந்தபடியே ஏற்றி வைத்திடு!

எரியட்டும் என்னோடு

அந்த மாயவலைகளும்!

என் நம்பிக்கைகளும்!!

போகிறேன்

போகிறேன்

போகிறேன்

சொல்லாமல் போகிறேன்..

உடலிடமும் சொல்லா

உயிர் போல..

நீ யார் எனக்கு?

karuveli2016110902

நீ யார் எனக்கு?

இதுவரை என் வாழ்வில்

அதிகம் கேட்கப்பட்ட

கேள்வி இது தான்!

ஆம்! நீ யார் எனக்கு?

 

நானாய் விரும்பிக் கேட்ட

உறவு ஒன்று உன்னிடம்!

நீயாய் கொடுத்த உறவு

உண்டு இன்றும் என்னிடம்!

 

அறிந்த நாள் முதல்

அனுதினமும் ஒவ்வொருவராய்

நீ எனக்கு! – ஆனாலும்

நீயாய் கொடுத்த உறவு

ஒட்டிக் கொண்டு வருது இதுவரையும்!

ஆம்! நீ யார் எனக்கு?

நானும் கேட்டுக் கொள்கிறேன்

அனுதினமும் என்னிடமே?!

இவள் இதயத்தின் இசை நீ!

karuveli_2016110803

 

இன்னும் வரவில்லை

இதயத்திற்கு அந்த தைரியம்

இருந்தும் சொல்லி விட்டேன்!

இறுதி வரை உன்னோடு தான்

இவள் பயணமென்று!

 

இல்லையென்று இயலாதென்று

இயல்பாய் மறுத்து விட்டாய்!

இது போன்ற இன்னொரு கவிதையிலே!

இதுவும் அறிந்த முடிவு தான்!

இருந்தும் தொடர்கிறேன்

இவள் வாழ்வை..

 

இதுவரை உன் துணையான

இசையையும் கலையையும்

இவள் துணையாக்கி!

இதை முடியாதென்றோ

இயலாதென்றோ எவர் தடுப்பாரென்னை?!

இதற்காக ஆசியும் வழங்குகிறாய்

இவள் வேண்டுமுன்னே!

இவள் இதயத்தின் இசை நீ!

மூன்றாம் நாள் முழு நிலா 

மூன்றாம் நாள் 
முகம் காட்டி.. 

உன் முகம் நினைவு படுத்தி 

நகைக்கிறது எனை பாா்த்து 

வானத்து வட்ட நிலா! 

தேய்ந்தாலும் 

தேயாத வட்ட நிலா 

வானத்தில் வந்து 

தூது சொல்ல.. 

ஒரு நாளும் மறுத்ததில்லை! 

தூரத்தில் நாமிருந்தாலும் 

துக்கத்தில் நாமிருந்தாலும் 

துணையாய் வருமிந்த 

வானத்து வட்ட நிலா! 

பூமிக்கு நிலவாய்! 

எனக்கு நீ தான்!