உயிராகும் உணவே – நாலு சொல்லில் புத்தகத்திலிருந்து

வீடியோ

அன்புடையீர்,

நம் உணவில் உயிருக்கு, நம் உயிர் மட்டுமல்ல. நம்மை போன்ற பலரின் உயிரும் தான். ஆகையால் எத்தகைய சூழலிலும் உணவை வீணடிப்பதை தவிர்ப்போம்.

 

 

ஒலிப்பதிவை கேட்க..

Advertisements

கல் மனம்

பட்டாம் பூச்சிக்கும் கல்லுக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு படுத்திப் பார்த்தேன்…  அத்தொடர்பிலிருந்து ஒரு வார்த்தைக் கோர்வை…

karuveli2017030701

கல் மனம் – கருவெளி ராச.மகேந்திரன்

பொக்கிஷமடி நீ எனக்கு

நம் வாழ்வில் சிலர் மட்டும் தான் வாழ்வாகிப் போகிறார்கள். அதற்கான காரணங்கள் தேடித் தேடியும் கிடைப்பதே இல்லை.  அவர்களோடு நம் வாழ்க்கை பயணம் வண்ணமயமாகிறது.  அத்தகைய ஒருத்திக்காக..


karuveli2017010801

வைராக்கியமாய் இருந்து

வைரமாகிறாய்!

வார்த்தைகளை வாழ்வாய்

மாற்றுகிறாய்!

உன்னை நீயே உனக்குள்ளேயே

செதுக்குகிறாய்!

உலகுக்கு உலகாய் உன்னை

உருமாற்றுகிறாய்!

என்ன நிகழ்ந்தாலும் எனக்குள் நீ

நீயாயிருக்கிறாய்!

அத்தனையும் நித்தம் இரசித்தபடி

தூரம் நிற்கிறேன்!

என் வாழ்வின் பொக்கிஷம் கண்டு

வியந்தபடியே!

கருவெளி ராச.மகேந்திரன்


கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

காத்திருப்பு

ஒவ்வொரு காத்திருப்பும் ஒவ்வொரு அனுபவம்..

இந்தக் காத்திருப்பும் அனுபவமும் புது விதமானது..

வார்த்தைகள்

காத்திருப்பு

ஒரு பொத்தானில்

ஒரு பொத்தானில்

குறுஞ்செய்திகள்

கைபேசி அழைப்புகள்

காணொளி அழைப்புகள்

முகநூல் உரையாடல்கள்

அத்தனையும்.. நம்மை

நாளும் இணைத்திருப்பதாய்..

நம்பியிருந்தேன்!

 

நாட்கள் நகர்ந்தன..

மாதங்கள் மறைந்தன..

வருடங்கள் வந்தோடின..

சந்திக்கும் எண்ணமோ

நிந்திக்கும் எண்ணமோ – அந்த

மாய வலையில் சிக்கியபடியே!

 

உன் ஒரே சொந்தத்தின்

உடலுக்கு நெருப்பையும்

மக்கள் பணியாற்ற நேரமில்லா

முதல்வரைப் போல்

ஒரு பொத்தானை அழுத்தி

அங்கிருந்தபடியே ஏற்றி வைத்திடு!

எரியட்டும் என்னோடு

அந்த மாயவலைகளும்!

என் நம்பிக்கைகளும்!!

என் தேடல் ஓயாது

karuveli16111401

என்னை அத்தனையிலும்

மாற்றிக் கொண்டேன்!

உள்ளே நீ மட்டும்

மாற்றமேதும் காணாமல்!

 

ஒற்றையாய்

உலகோடு போராட்டமும்

உனைத் தேடி பயணமும் தொடருது!

நான் என்பதால்

இன்னும் கடினமாய்!

 

இத்தேடல் ஓயாது

உனைச் சேரும் வரை!

இசையே

karuveli611032043

இசைக் கடலில்

இசையன்றி வேறேது?

இசைப்பவரும்

இசைக்கப்படுவதும்

இசைக் கருவிகளும்

இசையே!

நிகழ்வதென்ன?

எனதை உனதென்று நம்பினேனோ?!

உனதை எனதென்று கொண்டேனோ?!

நிகழ்ந்தது எதுவாகினும்

உனதென்றும் எனதென்றும் எதுவுமில்லை

என்றாகிறது இக்கணம்!

மாயக்கோடுகள் மறைகிறதோ?!

மாயமே எங்கும் நிறைகிறதோ?!

வாசகிக்கு அஞ்சலி

சமீபத்தில் இவ்வுலகை விட்டு மறைந்த  ஒரு வாசகிக்கு என்  அஞ்சலி. அவரையும், அவர் எழுத்துக்களையும் அவர் தான் என்றறியாமல் (அவர் மரணமடைந்த செய்தி கிட்டும் வரை) வாசித்து வாசகராய் இருந்து வந்தது வாழ்வின் இன்னொரு பக்கத்தை எனக்கு வாழ்வே காட்டிச் செல்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையுடன்  பயணத்தை தொடர்கிறேன்.
இந்த வார்த்தை கோர்வைகளை அவருக்காக சமர்ப்பிக்கிறேன்.
woman-sitting-at-lake
முகமறியா உலகில்
அகமறியா உலகில்
ஏதேதோ தேடி
எங்கெங்கோ நம் பயணம்
எப்போது முடியும்?
எங்கே முடியும்?
எவரும் அறியோம்!
இருந்தும் தொடருது இப்பயணம்
இருண்ட உலகில்
இனி எதற்கு கண்கள் என்று
இரு கண்களையும் மூடியபடியே!

நீ

picsart_02-15-10.10.59.jpg

விடை கொடுக்க

மனமில்லை!

விடை இருந்தும்

சொல்லவில்லை!

விடை இல்லா கேள்வியாய்

நீங்கவில்லை இதுவரை நீ!