ஓய்வெடுக்கட்டும் உந்தன் காதலி

ஓய்வில்லா காலமே

சிறிது நேரம் ஓய்வெடு

ஓய்வில்லா தேடலில் இருக்கும்

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

காலையில் எழுந்ததும்

அவள் உன் வேகத்தோடு

தன்னை இணைத்துக் கொள்வாள்!

அதுவரை நீயும் ஓய்வெடு!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

எந்த நாளும் நான் கேட்டதில்லை

இந்த நாளில் கேட்கிறேன்..

அவள் மறுபடியும் மண்ணுக்கு

கருவறை செல்லாமல் பிறந்து வருவாள்!

ஆகையால்..

அதுவரை நீயும் ஓய்வெடு!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

 

அவள் யாரென்று கேட்காதே

அவளை நீ அறிவாய்..

உன்னை அவள் அறிவாள்!

இடையில் நான் என்ன சொல்ல?

அவள் உந்தன் காதலி!

காலமே.. அதை அறியாதவனாய்

என்னிடம் கேட்காதே!

அவள் ஓய்வெடுக்க வேண்டும்!

அதுவரை நீயும் ஓய்வெடு!

Advertisements

காலத்தின் காதலி ஒருத்தி

image

காலத்தின் காதலி ஒருத்தி
காலத்தோடு எனக்கும் அறிமுகமானாள்!
காலம் கடந்த அறிமுகமோ?!
காலம் செய்த அறிமுகமோ?!

காலத்திடம் சொல்லாத செய்தியினை
காலம் கேட்காத கேள்விகளை
காலம் தாழத்தாமல்
கருணையோடு  கேட்கிறாள்!
கடந்து போன காலத்தே
கட்சிதமாய் கட்டிவைத்த
கால முடிச்சுகளை
காலமே அறுத்தெறியுது!
காலக்காதலியின் கரங்களால்!