இதுவே தருணமடி – உலக மகளிர் தினம்

இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான மையக்கருவாக “TimeIsNow” என்ற சொல்லாடல் ஐக்கிய கூட்டமைப்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது . அந்த சொல்லாடலையும் 1946 ல் நம்ம ஊரு தாத்தா சொன்ன பெண் விடுதலையும் மனதில் கொண்டே இவ்வரிகளை உங்களை சந்திக்கின்றன. இவன் யாரடா.. வாழ்த்துச் சொல்லுவதற்கு பதிலாக புரட்சியைப் பற்றி பேசுகிறான் என்று ஓடி விடாதீர்கள்.  பெண்களின் புரட்சி மட்டுமே சமூகத்தின் புரட்சியாக அமைய முடியும்.  உங்கள் வளர்ச்சியை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  என் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமையே…  நான் வெறும் வாழ்த்துகளைச் சொல்லிச் செல்ல இங்கே பிறக்கவில்லை என்பதை அறிவேன்.

2018030809

2018030807

 

Advertisements

உலக மகளிர் தினம் 2018 காணொளி

இந்தக் காணொளி எனக்கு மிகவும் முக்கியமான காணொளி அதற்கான காரணத்தை முன்பே சொல்லி இருக்கிறேன்.  அக்காணொளியை இந்த உலக மகளிர் தினத்தில் வாழ்த்துச் செய்தியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

 

என் வீட்டில் மட்டும் வீசுங்கள் குண்டுகளை

இப்பூமியில் இதுவரை உருவான உயிரினங்களில் தன்னை உச்சமென சொல்லிக் கொள்ளும் மனித இனம் உண்மையில் தன் அகோர முகங்களை மறைக்க முடியாமல் போதைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  வரலாற்றை மாற்றி எழுதி எழுதி தப்பிக்க முயல்கிறது.  ஆனாலும் தோற்று அம்மணமாய் மானமில்லாமல் நிற்கிறது.  மனிதனாய் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிந்து வாழ்கிறேன் நித்தம் !

2018030201

 

 

 

 

திலகமும் கவினும் ஆண்டாளும் நானும்

நேரில் சந்தித்திராத ஒருவர் உங்கள் வாழ்விலும் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பை இன்றைய டிஜிட்டல் உலகம் எளிமையாக்கி விட்டது.   அப்படி வந்தவர்கள் அனைவரும் மாயமாக சில நாட்களில் மறைந்தும் போவதுண்டு.  ஆனால் சிலர் மட்டும் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிப் போவார்கள், அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக நான் நினைப்பது அவர்கள் நிகழ்களத்தில் நிகழ்த்தும் களப்பணிகளே ஆகும்.   அத்தகைய ஒருவர் தான் இக்கவிதையில் “நானும்” ஆக இருக்கிறார்.   அவரைப் போல் டிஜிட்டல் உலகத்திற்கு பழக்கமில்லாதவராக அல்லது நான் டிஜிட்டல் உலகத்தில் அறிமுகமாகதவராய் இருக்கும் சிலர் தான் திலகமும் கவினும் ஆண்டாளும்.  அவர்களுக்கு சாட்சியாய் “நானும்” ஆக இருக்கும் கதிர்  இருக்கிறார், அது மட்டுமின்றி அவர்கள் இம்மண்ணில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக நிற்கும் ஒரு மனிதனுடன் உடன் துணை இருக்கிறார்கள் என்பதே அவர்கள் யாரென்று சொல்லப் போதும்.   உலகம் காண மறந்து போகும் பல ஜீவன்களில் அவர்களும் (திலகமும் கவினும் ஆண்டாளும்) உள்ளார்கள் என்பதனை கதிர் அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்.  ஆகையால் தான், அவர்களைப் பற்றி அவரும் சொல்கிறார்.  அவர் சொன்ன வார்த்தைகளையே.. அவருக்கு வாழ்த்தாய் அனுப்பும் அனுபவம் மிகவும் புதிதானதாய் இருந்தது.   இதில் முக்கியமான விசயம் அவருக்கு என்னை யாரென்றும் தெரியாது. [ ஒரு வேலை அந்த வாழ்த்தில் என் பெயர் இடம் பெற்றிருப்பதை கவனித்திருப்பாரென்றே நம்புகிறேன்]

ஆம்! கதிர் யார் ? அதற்கான பதிலை எவிடன்ஸ் கதிர் என கூகுளில் தேடி தெரிந்து கொள்ளுங்கள்..

அதற்கு முன்பு… அவரது 15வது திருமண நாள் வாழ்த்தாய் இந்த வரிகளை அவரது வார்த்தைகளை கொண்டே கட்டமைத்துள்ளேன் அதையும் வாசித்து விடுங்கள்.

கதிர் மற்றும் திலகம் அவர்களின் இணையான பயணம் இனிதே தொடரட்டும்..

2018020801

என்னை நம்ப வேண்டாம்

என்னை மட்டுமே நம்பி நீங்கள் எதையும் செய்திட வேண்டாம்..  அதற்கு பதிலாக இதனை முயற்சித்துப் பாருங்கள்..

2018012301