நிலவும் நீயும் நானும் – தொகுப்பு 4 | தேனியில் வெளியிடப்பட்டது

அன்புடையீர்,

வணக்கம். இன்று பிப்ரவரி 14 அன்று எனது பாசக்கார தங்கையும் தமிழ் ஆசிரியையுமான மகாலட்சுமி “நிலவும் நீயும் நானும் கவிதை தொகுப்பு 4” ஐ தேனியில் வெளியிட்டார். இந்தப் படைப்பை உறவுகளுடனும் நட்புடனும் பகிர்ந்து கொள்ள பின் வரும் தகவல்களைப் பயன்படுத்துங்கள்.

புத்தகத்தை இலவசமாக பதிவிறக்க முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நூலைப் பற்றி..

“நிலவும் நீயும் நானும்” முதல் பாகம் எழுதத் துவங்கிய அன்று நான் கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை நிலவுடனான பயணம் ஒரு முடிவிலியாகுமென்று. மற்ற படைப்புகளில் இருக்கும் மிகப்பெரிய கருத்தியல் தாக்கங்களிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க உதவுமென்று நம்பித் துவங்கிய ஒரு மென்மையான தலைப்பைப் போன்றே முதலில் காட்சியளித்தாலும்; நிலவும், நீங்களும், நானும் செய்த மாயங்களை என்னால் ஒவ்வொரு கவிதை தொகுப்பிலும் காண முடிகிறது.

“நிலவும் நீயும் நானும்” – தொகுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை கவிதை வாசிக்கும் பழக்கமுடையோருக்கு ஆரம்பத்தில் ஒரு வித்தியாசமான உணர்வையும் எண்ணத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஒவ்வொரு தொகுப்பாய் படிக்கும் போது அந்த எச்சரிக்கைக்கான காரணம் உங்களுக்கு தானே விளங்கி இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

நான்காவது தொகுப்பாக வெளிவரும் இந்தப் படைப்பு உங்களை புதுப் புது தளங்களுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் முழு நம்பிக்கை உண்டு எனக்கு.  இடங்கள், இனங்கள், மொழிகள் மாறினாலும் உலகெங்கும் ஓர் ஒற்றுமை நிலவிக் கொண்டிருப்பதை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்யும் பணியை ஒவ்வொரு கவிதையும் செய்யும் என்றே நம்புகிறேன். சாந்தினி முதல் மண்ணாத்தாள் வரை, கவி நிலவன் முதல் மதிமாறான் வரை, வெண்ணிலா பாட்டியும், குட்டிக் கண்ணம்மாவும், குட்டி நிலாக்களும் உங்களுக்காக உங்களோடு உறவாட காத்திருக்கிறார்கள் இந்த தொகுப்பில்.

படைப்புகள் வெறும் கற்பனைகளாய் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை அதனை ஒவ்வொரு கவிதையிலும் நீங்கள் கண்டு கொள்வீர்கள்.  அதில் வரும் நிலாவாகவோ, கண்ணம்மாகவோ, வெண்ணிலா பாட்டியாகவோ, மதியாகவோ, கவினாகவோ, அவர்களின் உறவுகளாகவோ நீங்கள் இருக்கலாம்.  அப்பிரதிபலிப்பு நிகழ்ந்து விட்டால் நான் எழுதுவதை தொடர்ந்து செய்யலாம், இல்லையேல் நிறுத்திக் கொள்வது உத்தமம் என்றே கருதுகிறேன்.  குறைந்தது அவ்வாறு எழுதுவதற்கான பயிற்களை துவங்கலாமென்று நிறைகிறேன்.

நான்காம் பாகம் இந்த நாளில் வெளியிடப் படுவதற்கு முக்கியக் காரணம் ஏதுமுண்டா? இக்கேள்விக்கான பதில், கவிதைகளெங்கும் பரவிக் கிடக்கிறது என்பதே என் பதில்.

நான்காம் பாகத்தை வாசித்து விட்டு உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  விரைவில் ஐந்தாம் பாகத்தில் சந்திக்கிறேன்.

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய பின்வரும் முகவரியைப் பயன்படுத்தவும்.
நிலவும் நீயும் நானும் தொகுப்பு 4

Nilavum Neeyum Naanum – Kavithai Thoguppu 4
Nilavum Neeyum Naanum – Kavithai Thoguppu 4

நிலவும் நீயும் நானும் தொகுப்பு4 : [2019 பிப்ரவரி 14 தேதி வெளியீடு]

106 பக்கங்கள் கொண்ட இபுத்தகத்தை பதிவிறக்க, படிக்க, பகிர முகவரி…
http://bit.ly/NiNeNa04

நீங்கள் படித்து உங்களுக்கு பிடித்திருந்தால் உறவுகளிடம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்,

Advertisements

நிலவும் நீயும் நானும் – 2 ஆம் பாகம் வெளியீடு அழைப்பிதழ்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஆண்டில் இலவச இ புத்தகமாக வெளியிடப்பட்ட நிலவும் நீயும் நானும் இரண்டாம் பாகம் வரும் 21-அக்டோபர்-2018 முதல் அமேசானில் கிண்டில் இபுத்தகமாக கிடைக்கும் என்பதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டாம் பாகத்தின் புதிய அட்டைப் படம் அழைப்பிதழாக…

வெளியிட்ட உடன் மற்ற விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

TripleNp2_Cover02_02_on


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நிலவும் நீயும் நானும் – 2 ஆம் பாகம் வெளியீடு அழைப்பிதழ்”

தைத் திருநாளில் – நிலவும் நீயும் நானும் – இபுத்தகம் வெளியீடு

அன்புடையீர்,
அனைவருக்கும் நன்றி.. எண்ணமாய், புத்தகமாய், இயக்கமாய் தனது பயணத்தை நாலு சொல்லில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முன்பு பகிர்ந்து கொண்டதற்கும் முன்னதாகவே உங்களை காண வருகிறது “நிலவும் நீயும் நானும்” முதல் பகுதி.
வரும் தைத் திருநாளன்று என் பெற்றோர் இ-புத்தகத்தை அறிமுகம் செய்து வெளியிடுவார்கள் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அது குறித்த சிறு காணொளி..
TN_KK_INTRO_1
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
94455 28556