திரு.விஜயகாந்த் : மனம் படைக்குது உலகை

ஆம்! நாம் வாழ்வதற்காக பிறந்தோம்.  பிறக்கையில் நினைக்கவில்லை, தெரியவுமில்லை வாழ்க்கை இத்தகையதென்று, ஆனாலும் துவங்கி விட்டோம்.  நமது சொந்தத் தேவைகள் நமது வாழ்வின் நிமிடங்களைத் தின்று கொண்டிருக்கையில், நம்மை சுற்றி உள்ள உயிர்களுக்காகவும் இயற்கைக்காகவும் ஏதாவது நன்மை செய்துவிட வேண்டும் அதுவே தன் வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யும் எனும் எண்ணம் கொண்ட சிலரை மட்டுமே நாம் சந்திக்க இயல்கிறது.  அதிலும் மிகச் சிலரே அதனை செயல் வடிவமாய் கொண்டு வர தயாராய் இருக்கிறார்கள்.  அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் எந்த வரலாற்றிலும் எழுதப்படுவதில்லை, அவர்களிடம் உதவி பெற்ற இதயங்களைத் தவிர.

திரு. விஜயகார்ந்த், பல போராட்டங்களுக்கு இடையில் தனது சிறு உணவகத்தை நடத்தி வந்தாலும் அத்தகைய ஒரு மனதுடன் தன் வாழ்வைத் தொடர்கிறார்.  மெத்தப் படித்து பெரும்பணியில் இருக்கும், பெரும் பணம் ஈட்டும் மேதாவிகளுக்கு இல்லாத அந்த மனம், இல்லாதவனுக்கு வருவதால் பயன் என்ன?  இந்தக் கேள்வி மனதில் தோன்றினால் அதற்கு பதிலாய் அவரது சமூகம் நோக்கிய செயல்கள் பதிலாய் வந்து நிற்கின்றன.   இத்தகைய மனிதர்களை நித்தம் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து கொண்டே இருக்கிறோம்.  இனியும் அவ்வாறு செய்திட வேண்டாம்.

இம்மண்ணுக்காகவும் தமிழுக்காகவும் ஏதேனும் செய்யத் துடிக்கும் அவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், அவர் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படத்தில் இன்று நடக்கவிருக்கும் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு மற்றும் நாளை (08-04-2018) நடக்கவிருக்கும் சாக்கடைத் திருவிழா அழைப்புகளுடன் திரு.விஜயகாந்த்.

தொடரும்…

IMG_20180406_214709491

Advertisements

எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

அதுவும் எழுதச் சொல்லி கேட்டு வாங்கி படிக்கும், அந்நாளில் இருந்த வாசகி என்றால் என் அன்பு அக்கா தீபாவைத் தான் சொல்ல வேண்டும். கால ஓட்டத்தில் எனது பயணங்கள் என்னை அனைவரிடமிருந்தும் வெகுதூரம் கொண்டு சென்ற போது, அவரொன்றும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. பல ஆண்டுகள் கழித்து சந்தித்த போது.. மீண்டும் கேட்டார்… கவிதைகளை…

ஒரு வேளை அந்த வாசகி இல்லாமல் போயிருந்தால்.. பாவம் அந்த சிறு வயது கதை சொல்லி மகேந்திரன் கவிதைகளை தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டான்.

பலரின் பிறந்த நாளுக்கும் நான் கொடுத்த வரிகளில் சில அவரது பிறந்த நாளுக்காக நான் எழுதிய வரிகள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

எந்த எதிர்ப்பார்ப்புமில்லா அன்புக்கு சொந்தக்காரி அவர்…

கருத்துக்களில் நாங்கள் வேறுபடலாம்… அன்பில்.. ஒரு போதும் இயலாது..

ஒரே குறைதான்… ஒரே கருவறையில் இருந்த இம்மண்ணிற்கு வரவில்லை நாங்கள்…

அவரது அன்னை இன்னும் என் வாழ்வோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறார். நம்பிக்கையின் சின்னமாய்.. தானத்தின் சின்னமாய்..

இந்த நிகழ்வு பகிா்வில், அற்புதங்களிருக்காது ஆச்சா்யங்களிருக்காது.. அதனை நிகழ்த்தப்போகும் ஒரு ஜீவனை வளா்த்தெடுப்பதற்கான விதைகள் இருக்கும். வாழ்க்கையே அவ்வளவுதான். வாழ்ந்தால் அறியலாம் யாவரும்..

நீங்கள் படைத்த படைப்பாளன்
கருவெளி ராச. மகேந்திரன்

இதுவும் வாழ்வோ?

யார் கண்ணில் நாம் கண்ணீரைக் காண விரும்பவதில்லையோ… அவர்களை நாமே அழச் செய்வதுமுண்டு. அது ஒரு கொடுமையான சூழல் என்றால், இது போதாதென்று அவர்களை காலமும் விரட்டி விரட்டி கண்ணீர் சிந்த வைக்கும். இது அவர்களுக்கான சோதனையோ… இல்லை நமக்கானதோ.. நாம் அறிவதற்குள்ளேயே நம் வாழ்வு முடிந்து போயிருக்கும்.   இவை எல்லாவற்றையும் கொடுமையான நிலை ஒன்று உண்டு அது… நாம் வருந்தக் கூடாதென்பதற்காக தன் கண்ணீரை மறைத்து நம்மிடம் புன்னகித்து நடித்து செல்லும் அவர்களின் நிலை.  இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காக நடிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமென்று அவர்களுக்கும் தெரியும்.  இது எத்தனை ஆச்சர்யமான வாழ்க்கை சூழல்…  அது குறித்து கேள்வியை முன் வைக்கும் ஒரு வார்த்தைக் கோர்வை..

அத்தனையும் மனதின் அருமையான விளையாட்டு… விளையாடுங்கள்..

இதுவும் வாழ்வோ? - கருவெளி