கண்களை மூடிப்பார்

அனைவருக்கும் வணக்கம்.

“நாலு சொல்லில்” [FB: 4Sollil] புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி.  விரைவில் “Kindle” – இ-புத்தகமாக கிடைப்பதற்கான பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நற்செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னொரு நற்செய்தியையும் அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்

அறிந்தோ அறியாமலோ… தேடல் என்பது எல்லா உயிர்களிடமும் நிறைந்திருக்கிறது.  முக்கியமாக மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் அத்தகைய தேடல்களில் பெரும்பாலானவை புறக்காரணிகளை நோக்கியதாக இருக்கிறது.  “கண்களை மூடிப்பார்” என்னும் இந்த புதுக்கவிதைத் தொகுப்பு மற்றும் அனுபவப்பகிர்வு புத்தகம் ஒரு மனிதனின் அகத்தேடல் அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமையும். இதனை எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதிக் கொண்டிருப்பதால் வரும் மார்ச் 2018 வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளேன்.  இந்த புத்தகத்தை அனைத்து தியானிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் தொடர்ந்து வாசிக்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இணைந்திருங்கள்

கண்களை மூடிப் பார் முகநூல் பக்கம்

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

KMP_02

நாலு சொல்லில் https://www.facebook.com/4Sollil/

“நாலு சொல்லில்” கவிதைகளை கேட்டு பார்த்து இரசித்து மகிழ

ஆசிரியர்:

https://www.facebook.com/KaruveliTheCreator/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தேனி

பிரிவும் உதவலாம்

பிரிவுகள் உறவுக்கு உதவினால்.. பிரிவுகள் எதற்கு?  உறவுக்குத்தான்..

ஆகையால் பிரிவை  இங்கே தலைவனோ / தலைவியோ வேண்டுவதாய்…

2017060601

அவனும் நானும் முத்தங்களும்

குறிப்பு :  இக்கவிதை… உங்களுக்கு, உங்கள் திருமண வாழ்வின் முதல் சில மாதங்களை நினைவுபடுத்தினால் அதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல..

நாலு சொல்லில் புத்தகத்திற்கான பணிகளுக்கிடையே…  அதைத் தாண்டிய ஒரு சிந்தனைக்குள் சென்று வருவதே ஒரு வித்தியாசமான அனுபவம்.  அநேகமாக இத்தகைய  கருப்பொருளில் (தலைவிக்கும் தலைவனுக்குமிடையேயான அன்பு, அதுவும் அதை முத்தங்கள் வழியே சொல்வதாய்) எழுதி நீண்ட நாட்களாயிருக்குமென்றே நினைக்கிறேன்.  அப்படி எழுதிய முந்தைய கவிதைகள் எனக்கு நினைவில் கூட இல்லை.   எழுதி முடித்ததும், முடிக்காமல் எழுதும் படி தூண்டக் கூடிய ஒரு கருப்பொருளாய் இருந்தது இந்நிகழ்வு, கருப்பொருள் என்பதனை விட அந்நிகழ்வுக்குள்ளே பிண்ணிக் கிடக்கும் உணர்வுகள் என்று சொல்லலாம்.    இதை ஒரு குறுங்கதையாய் சொன்னால் எப்படி இருக்குமென்ற எண்ணத்தையும் விதைத்து சென்றது. முயற்சிக்கிறேன்.  எழுதினால்.. விரைவில் அவ்வரிகளுடனும் சந்திக்கிறேன்.  மேலும் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்  ஒரு காட்சியை / நிகழ்வை எழுத்துக்குள் படைப்பதென்பது மிகவும் சுவாரசியமான விசயம்.  எழுதி எழுதியே காட்சிகளை இரசிக்கிறோம்.

ஒவ்வொரு கவிதைக்கு முன்னும் பின்னும் கதைகளுண்டு… அவை மிகவும் சுவாரசியமாக இருக்கும்…  🙂

இக்கவிதைக்கான படம் தேடிக் கண்டு பிடிக்க ஆன நேரம் வீண் போகவில்லை என்றே நினைக்கிறேன்.  அநேகமாக இவ்வரிகளுக்காகவே அவர்கள் உருவாக்கியிருக்கக் கூடும் என நம்புகிறேன்.  மேலும் பல வரிகளைக்கும் சொந்தமாகப் போகுது இப்படம்.  உருவாக்கியவருக்கு நன்றி.. நன்றி… நன்றி..

201705050801

அன்புடன்,

கருவெளி ராச.மகேந்திரன்

என் வீட்டிற்கு போறேன்

உங்கள் பயணம் இதுவென்று நீங்கள் அறிவதற்குள்.. உங்கள் பயணம் மாறினால், பயணப் பாதை மாறினால்… எங்கு போய் சேர்வீர்கள்?  இது சிந்திக்க வேண்டிய வினா தான்!  ஆனால் அத்தனையும் நிகழ்த்துவது எதுவென்பதும் விடை தெரியாத வினாவாகவே!  ஆச்சர்யம் என்னவென்றால்,அத்தனை பாதைகளும் போய் முடியும் வீடு ஒன்றுண்டு.  அவ்வீட்டிற்கு வழி நான் சொல்ல வேண்டியதில்லை, அத்தனை பாதைகளும் அங்கே அழைத்துச் செல்லும் என்பதால்…

karuveli2017030901

என் வீட்டிற்கு போறேன் – கருவெளி ராச.மகேந்திரன்


சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியாய்

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்

 

நிலவு காத்திருக்கு

நீண்ட நாட்களாக நிலவு பற்றி எழுதாமல் இருப்பதாய் எனக்குள்ளே ஒரு நினைவு.  அதை ஞாபகப் படுத்தியதும் இன்றைய நிலவு தான்.  ஒவ்வொரு முழு நிலவும் ஒரு கவிதை கேட்காமல் போகாது.  பாட்டி சொன்ன நிலவுக் கதை போல் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கேட்டாலும், பொய் என்று அறிந்த பின்பும் சொல்லப்படுவதோடு கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருமை நிலவுக்குண்டு.   இந்த வார்த்தைக் கோர்வையும் அத்தகைய ஒன்று தான்.

இங்கு ஒரு நிலவு காத்திருக்கு….

 

karuveli2017011201


 

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில்

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்

படைப்பாளினி

karuveli16120701

படைப்பாளினி (அவளோடு ஒரு பயணம்)

படைத்து விட்டு

புத்தம் புதுப் படைப்புகளை

நித்தம் படைத்து விட்டு

ஆச்சர்யங்கள் அள்ளித் தருகிறாள்!

அத்தனைக்கும் ஆரம்பம்

நீ தானென்று தாய்மையோடு

தன் திறமைகளை தாரை வார்க்கிறாள்!

புள்ளியும் வைக்கத் தெரியாத எனக்கு!

எங்கு கற்கிறாள்? இத்தனை வித்தைகளை!

வியந்து வியந்து என் பயணம் தொடருது!

அவளோடு என் பயணம் தொடருது!

விட்டு விட்ட என் கரத்தை

விடாமல் பற்றியபடி

புது உலகிற்குள் அழைத்து செல்கிறாள்!

புது நடை பயிற்றுவிக்கிறாள்!

(தொடரும்)

—கருவெளி ராச.மகேந்திரன்

நன்றி –   Pixlr, பயண அனுபவங்கள்

எனது குரலில்… கேட்க விரும்பினால்

அருகிலிருந்தும்

 

 

karuveli16120503

அருகிலமர்ந்தும்

தூரம் போனாய்!

அன்பைச் சொல்லியும்

அந்நியமானாய்!

செய்வதறியாது

செய்ய வேண்டியதை செய்து

எனக்கு நானே அந்நியமாய்..

ஆதரவு சொல்ல யாருமற்று..

அநாதையாய் அன்பைத் தேடி

அலைகிறேன்!

நீ அலைந்த வீதிகளிலே!

 

– — கருவெளி ராச.மகேந்திரன்

புகைப்படம் நன்றி : சார்லி (மலையாள மொழி) படத்தில் ஒரு காட்சி 

 

பயணமிதுவே

பயணமிதுவே

நீ வருவாயென்றும்

நீ வரக் கூடாதென்றும்

உனக்காக ஒரு பயணம்!

உன் நினைவுகளோடு ஒரு பயணம்!

அதுவே இனி பயணம்!

உனக்கும் எனக்கும்!

உரிமையில்லா உரிமை

karuveli16120402

உரிமையில்லா உரிமை (அவளோடு ஒரு பயணம்)

 

உயிர் கொடுத்தவர்

உள்ளம் சொல்கையில்..

உன் மறுப்பு

உனக்கான உரிமை!

அதை மறுப்பதில்

மறு மொழி சொல்வதில்

எனக்கென்ன உரிமை?

வேண்டுகோளாய் வைத்தேன்!

நியாயமென்றால் ஏற்றுக் கொள்!

இல்லை என்றால் உதறிச் செல்!

சொல்லோடு என்னையும்!

 

— கருவெளி ராச.மகேந்திரன்

நன்றி –  கூகுள் இமேஜஸ், Pixlr, பயண அனுபவங்கள்

நீயன்றி யார் ?

karuveli16120201

சோர்ந்தாலும்

தோற்றாலும்

வீழ்ந்தாலும்

பயந்தாலும்

இழந்தாலும்

கை குலுக்கித்தான்

உயிர் கொடுப்பாய்!

என் உச்சியை

உன் கையால் முகர்ந்து

நீ செய்யும் அன்பால்

நிம்மதியாய் பயணித்திருக்கேன்!

உயிர் கொடுக்கும்

அன்பு வழங்கும்

அந்தக் கரங்களை

இழந்து தவிக்கிறேன்!

இனி யார் கொடுப்பார்

உயிர் எனக்கு?

அன்பு எனக்கு?

 

 

— கருவெளி ராச.மகேந்திரன்

(அவனோடு ஒரு பயணம் )

நன்றி –  கூகுள் இமேஜஸ், Pixlr, பயண அனுபவங்கள்