எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் என் முதல் வாசகி

அதுவும் எழுதச் சொல்லி கேட்டு வாங்கி படிக்கும், அந்நாளில் இருந்த வாசகி என்றால் என் அன்பு அக்கா தீபாவைத் தான் சொல்ல வேண்டும். கால ஓட்டத்தில் எனது பயணங்கள் என்னை அனைவரிடமிருந்தும் வெகுதூரம் கொண்டு சென்ற போது, அவரொன்றும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. பல ஆண்டுகள் கழித்து சந்தித்த போது.. மீண்டும் கேட்டார்… கவிதைகளை…

ஒரு வேளை அந்த வாசகி இல்லாமல் போயிருந்தால்.. பாவம் அந்த சிறு வயது கதை சொல்லி மகேந்திரன் கவிதைகளை தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டான்.

பலரின் பிறந்த நாளுக்கும் நான் கொடுத்த வரிகளில் சில அவரது பிறந்த நாளுக்காக நான் எழுதிய வரிகள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

எந்த எதிர்ப்பார்ப்புமில்லா அன்புக்கு சொந்தக்காரி அவர்…

கருத்துக்களில் நாங்கள் வேறுபடலாம்… அன்பில்.. ஒரு போதும் இயலாது..

ஒரே குறைதான்… ஒரே கருவறையில் இருந்த இம்மண்ணிற்கு வரவில்லை நாங்கள்…

அவரது அன்னை இன்னும் என் வாழ்வோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறார். நம்பிக்கையின் சின்னமாய்.. தானத்தின் சின்னமாய்..

இந்த நிகழ்வு பகிா்வில், அற்புதங்களிருக்காது ஆச்சா்யங்களிருக்காது.. அதனை நிகழ்த்தப்போகும் ஒரு ஜீவனை வளா்த்தெடுப்பதற்கான விதைகள் இருக்கும். வாழ்க்கையே அவ்வளவுதான். வாழ்ந்தால் அறியலாம் யாவரும்..

நீங்கள் படைத்த படைப்பாளன்
கருவெளி ராச. மகேந்திரன்

வாசகர்களுக்கு நன்றி

அன்புடையீர்,

நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் “கருவெளி”யில் எழுதத் துவங்கிய  சில வாரங்களிலேயே உங்கள் ஆதரவைத் தந்து ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி.   இன்னும் பல கருப்பொருள்களுடன் உங்களை வந்தடைகிறேன்.

கடந்த மாதம் (பிப்ரவரியில்) இருபத்தி மூன்று நாடுகளிலிருந்து (சு)வாசித்து ஊக்கமளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   தமிழர்கள் எங்கெல்லாம் வியாபித்துள்ளார்கள் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல சாட்சி.

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் “வேட்பிரஸ்.காம்” நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்களுக்கு நன்றி

சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியாய்

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்