நாடு – நாலு சொல்லில் கேட்டு மகிழுங்கள்

https://soundcloud.com/mahendran-r-2/04-4sollil-naadu

 

Advertisements

நாலு சொல்லில் – முதல் காணொளி

“நாலு சொல்லில்”  புத்தகத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் காணொளி..

 

நாலு சொல்லில் தொகுப்பு புத்தகமாகிறது

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம். தொடர்ந்து (சு)வாசித்து ஆதரவு தந்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

karuveli2017032101

தமிழில் ஒரு புது முயற்சியுடன் எழுத்துலகில் நுழைய வேண்டும் என்ற  பெரும் ஆவலுடன் ” நாலு சொல்லில்”  என்னும் இந்தப் புத்தகத்திற்கான பணிகளை துவங்கி உள்ளேன்!

2017 ஆம் ஆண்டு தமிழகம் பல போராட்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் சுருங்கச் சொல்லுதல் மிக அவசியமாக பட்டதால், “நாலு சொல்லில்” எழுதத் துவங்கினேன்.  அதையே முதல் புத்தகமாக வெளியிடும் நிலைக்கு வருவேன் என்று திட்டமிடவில்லை.   ஆனால் “நாலு சொல்லில்”  தனக்கு தேவையான இடத்தை தானே பிடித்துக் கொண்டது.  பல ஆண்டுகளாக எனது கையேடுகளிலும், கணினிகளிலும் காத்திருக்கும் அனைத்து வரிகளையும் பொறாமை கொள்ளச் செய்து.

தற்சமய நிலவரப்படி :  

மே அல்லது ஜீன் மாதம் புத்தகம் உங்கள் கையிலிருக்கும்

பதிப்பகம் :  இன்னும் முடிவு செய்யப்படவில்லை

மேலும் புத்தகத்தின் நிலவரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், உங்கள் சிந்தனைகளும் புத்தகத்திற்குள் வந்து சேரவும் இந்தப் புத்தகத்திற்கென தனிப் பக்கம் முகநூலில் துவங்கி உள்ளேன். அதில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  தமிழ் வாசிக்கும் விருப்பம் கொண்ட நல்லுள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நாலு சொல்லில் புத்தகத்திற்கான முகநூல் பக்கம் https://www.facebook.com/4Sollil/

“நாலு சொல்லில் நம் நற்றமிழா!?” என்ற வினாவுடன் வியப்பீர்கள்… “நாலு சொல்லில் நம் புதுத்தமிழ்” வீரு நடை போட்டு வந்து உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையுடன் என்னை இன்று வரை ஊக்குவித்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:  முகநூல் பயன்படுத்தாதவர்கள் karuveli.mahendran@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

நாலு சொல்லில்

நாலு சொல்லில் என்ன சொல்லி விட முடியுமென நினைத்து அச்சப்பட்டேன் ஆரம்பித்த அந்த நிமிடத்தில்.  ஆனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனுபவமோ?  மிகவும் ஆழமானது நேர்த்தியானது.  சிந்தனைகளை தீட்டுகிறது இந்த நாலு சொல்லில் முயற்சி.

இதோ… மூன்றே நாட்களில் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்ட “4 சொல்லில்”  நான் சொல்ல வரும் எண்ண அலைகளிலிருந்து சில…

This slideshow requires JavaScript.

 

நாலு சொல்லில் (புது முயற்சி)

நான்கு சொற்களில் கருத்துக்களை சொல்லுதல் என்பது சவாலான அதே சமயம் கற்றறிதலுக்கு வழி வகுக்கக் கூடிய நல்ல முயற்சி என்பதால் இதனை தொடர்ந்து செய்யலாமென இன்று 22-பிப்ரவரி-2017 முதல் துவங்கியுள்ளேன்.  எனக்கு மேற்கூறிய இரு முக்கிய பலன்கள் கிட்டும் அதே நேரத்தில் (சு)வாசிக்கும் உங்களுக்கு, எத்தகைய அனுபவத்தையும் பயனையும் தருகிறது என்பதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்…

இந்தப் புது முயற்சியை நீங்கள் அனைவரும் வரவேற்பீர்களென்ற நம்பிக்கையுடன்..  தொடர்கிறேன்

இன்றைய தினம் நமது விவசாயம், விவசாயிகளின் நிலை குறித்து, சில #4சொல்லில்

karuveli2017022301_4sollil2

மேலும் வாசிக்க..

karuveliinitiative_4sollil_4