அக்கினி குஞ்சொன்று… [சகோதரன் முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்….]

தொட்டால் சுடும்…
என்ற தாய் வார்த்தையும்
“சுடும்” என்றால் என்னவென்றும்
அறியா பருவத்தே…
அந்த பிஞ்சு கரங்களில்
நான் தொட்டதுண்டு …
வீட்டில் எறிந்து கொண்டிருந்த
சிமிழ் விளக்கின் தழலை!

அதை நினைத்தாலும்…
சுடுபட்ட அந்த பிஞ்சு கரங்களாகிவிடும்
இக்கணத்திலும் என் கரங்கள்!

இது நான் நேற்று வரை…

இதோ… எல்லாம் அறிந்த இக்கணத்திலும்
மனிதம் மனிதம் வதைப்பதை,
அழிப்பதை தடுக்க
அக்கினியை ஆரத்தழுவிக்கொண்ட
உன்னை பார்த்த மறுகணமே
“நானும் அக்கினியின் குஞ்சாகிப்போனேன்”

“அக்கினியில் குஞ்சென்று மூப்பென்றும்
உண்டோ கூறு?’
தமிழ்க்கவி கேட்ட கேள்விக்கு
அர்த்தமும் புரிந்தது…

அக்கினி குஞ்சு… [ சகோதரன் முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்….]

மனிதம்(?!)…
மனிதம் வதைப்பதை,
அழிப்பதை தடுக்க
“தாய் தடுத்தாலும் விடேன்” என்று
தமிழ் தாய் தடுத்தும் கேளாமல்
நெருப்பை பற்றி கொண்டாய்
உன் அங்கமெங்கும்…

நீ அணைந்தாய் …??
தன் மகனை இழந்ததாய்
விடாது அழுது புலம்பும்
தமிழ்தாய்க்கு உரக்க கூறி விட்டோம்
இந்த இளைய சமுதாயமனைத்தும்
அந்த அக்கினியின் குஞ்சுகள் என்று!

அக்கினி குஞ்சுகள் பெற்றெடுக்கும்
பாக்கியத்தை தாய்க்கு…
தமிழ்தாய்க்கும் வரமாய்
வழங்கி சென்றாய்…
வாழ்க நீ!
ஒவ்வொரு அக்கினி குஞ்சிலும்…

நெருப்பு பந்தமாய்…[சகோதரன் முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்….]

நீ பற்றி எறிந்ததோ? நெருப்பு…
தமிழன் மனமெங்கும் பற்றி எறிகிறதே!

உன்னை பற்றி எறிந்து
தானும் புண்ணியம் தேடி கொண்டதோ?
நெருப்பு…

நீ பற்றி எறிந்ததால்…
தமிழன் மனமெங்கும்
எப்போதும் எறியும்
சாவா வரம் பெற்றதோ? நெருப்பு…

மொழிப்பற்று…
இனப்பற்று…
நாட்டுப்பற்று…
அனைத்தையும் எறித்து…

மனிதம் மனிதத்தை காக்க
உன்னை நீயே நெருப்பு பந்தமாக்கி…
எல்லோரும் எல்லோருக்கும் பந்தமென
வெளிச்சமிட்டு காட்டினாயோ?!
உலகக்கு…