பசுமை உலகம் செய்வது நம் கடமை!


கதிரவன் ஒளி வீச….
வீட்டை பூட்டி கொண்டு
மின்னொளிகளின் வசம் தஞ்சம் புகுவதுமேனோ?!

தென்றல்கள் உங்களுடன் உறவாட காத்திருக்க…
ஜன்னலை சாத்திவிட்டு
மின் விசிறியையும்…
குளிர் சாதனபெட்டியையும் நாடுவதுமேனோ?!

நடந்து கடக்க கால்களிருந்தும், காலமிருந்தும்
கால் கிலோ மீட்டரையும்
கடிந்து கொண்டே… டீசலும் பெட்ரோலும் போட்டு
வாகனத்தில் மட்டும் கடப்பதுமேனோ?!

நண்பனும் நாமும்….
குழந்தையும் தாயும்…
பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும்..
தொலைக்காட்சி பெட்டியின் இரைச்சலும் ஏனோ?!

ஒரு ரூபாய் சம்பாதிப்பது எத்தனை கஷ்டமுனு தெரியுமா? – என
எப்போதும் கேட்கும் தோழரும்
எத்தனையோ கருத்து நாளும் சொல்லும்… நாம் அனைவரும்
அறியாமல் போவதேனோ?!

எப்போதும் திரும்ப கிட்டாத…
எத்தனை முயன்றாலும்…
நம்மால் உருவாக்கவோ… படைக்கவோ…முடியாத

இயற்கை வளங்களை காப்பது
நம் ஒவ்வொருவரின் கடமையென்று!

எஞ்சுவது…

பயணங்களில் கற்கிறேன்…
பயண்ங்கள் ஆதி அந்தமில்லா
கருவெளியில் எனும் போது…
அதே விதமான் மகிழ்ச்சி மட்டும்தான்…

நல் உள்ளங்களை….

அவரவர் கடமைகளை செய்து கொண்டே இருப்போம்…
நமக்கென்ற காலம் வரும்வரை…

உடலின் தூரங்கள்…
உரையாடல்களின் இடைவெளிகள்…
ஏதும் செய்துவிட போவதில்லை…
நல் உள்ளங்களை….