அதிசயம் கேளீர்..!
கண் மூடி அவள் செய்யும்
புன்னகை..
காண்பவரின்
இதயத்தை திறக்கும்!
இதயமற்றோருக்கும்
இதயம் கொடுக்கும்!
அறுவை சிகிச்சை செய்யாமலே
ஆயிரம் நோய்களை தீர்க்கும்!
அனைத்தும்
“இ” என்றால் இன்பம் ஆகிவிடும்
“து” என்றால் துன்பம் ஆகிவிடும்
வார்த்தைகளிலென்ன இருக்கிறது?
வாழும் நம் மனதிலும்
எண்ணத்திலும் அல்லவா உள்ளது அனைத்தும்!
பேருக்கு ஏத்தபடி
காரமா இருந்துச்சு கேளுங்க!
சாதி பேசுபவரை
தோலுரித்து சவுக்கடிச்சது பாருங்க!
வலி பொறுத்த
நெஞ்சங்களுக்கு வலிமை சேர்த்ததுங்க!
ஒடுக்கப்பட்ட மனம்
பொங்கி பொய் பரப்புரையை ஒழிக்குதுங்க!
பேருக்கு ஏத்தபடி
காரமா இருந்துச்சு கேளுங்க!
மனித போர்வையிலிருப்பவரை
தோலுரித்து வெளிச்சம் போட்டது பாருங்க!
ஊட்டிய நஞ்சை
உரமாக்கி களத்திலாட நிற்கிறாங்க பாருங்க!
மனிதத்தினுள் மனிதன்(?) ஊட்டிய
சாதி நஞ்சையும், உரமாக்கி
களத்திலாட நிற்கிறாங்க பாருங்க!
கை கோர்த்து தோள் கொடுப்போம் வாருங்க!
“அடக்குமுறைகளை ஒழிக்கும் வரை ஓய்வதில்லை”
சபதம் செய்வது…
மனித மனமெங்கும் எதிரொலிக்குது கேளுங்க!
கை கோர்த்து தோள் கொடுப்போம் வாருங்க!
மின்னிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இச்சமுதாயத்தின் பேருண்மைகளை
பெரும் பொய்களாகவும்
பெரும் பொய்களை
பேருண்மைகளாகவும்…
மாற்றி வைப்பதோடு…
அதற்கு பெரும் பாதுகாப்பு அரணாகவும்
ஆபத்து வரும் தருணங்களில்
விஷ்பரூபம் கொண்டு
பேரழிவுகளை நிகழ்த்தி…
நியாயமும் தர்மமும்
நிலை நாட்டப்பட்டது என
பேரறிக்கை வாசிக்கவும்…
நம்பும் படியான கதைகளும்
கதாபாத்திரங்களும்
ஆதியும் அந்தமுமாக
விளங்குகிறதென்றால்…
இம்மண்ணின் மைந்தர்
எவரும் நம்புவதற்கும்
ஏன்? கேட்பதற்கும்…
தயாராயில்லை…
பாவம்! – என் உறவுகள்…
மனம் கெட்டு..
மதி மயங்கி..
கதைகளிலும்
கதாபாத்திரங்களுடனும்…
காலம் கடத்துகிறார்கள்…
அடிமைகளாய்…
நிகழ்வுகளை
நிர்ணயித்த காலங்கள் போயின..
நிகழ்வுகள்
நிர்ணயிக்கும் காலங்கள் வந்தன..
எந்திர வாழ்க்கை!
மின்னிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்